மனிதன் என்றால் பணம் உண்டாக்கும் இயந்திரம்,

எலக்ட்ரானிக் பெட்டி

படி, படி, படி
மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒலிக்கக்கூடிய எலக்ட்ரானிக் பெட்டி இப்போது கடைகளில் கிடைக்கிறது. அதை ஆன் செய்தால் தொடர்ந்து மந்திரங்களை திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கும். அது போல ஒரு பெட்டி நம்முள் இருக்கிறது என நினைக்கிறேன்.

ஆகவேதான் குழந்தைகளைக் கண்டால் படி, படி என இடையறாது கூறிக்கொண்டே இருக்கிறோம். ஒரே வார்த்தையை அடிக்கடி கேட்கும்போது குழந்தைகளுக்கு அதன் மீது ஒரு வெறுப்பு உருவாகிறது. எப்போதாவது ஒருமுறை சற்று விளக்கங்களோடு, சில கதைகள் சேர்த்து, உதாரணங்களோடு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும்.

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் கரு உருவாகும்போதே ஆரம்பமாகிறது. ஒரு தாயாகப் போகிறபெண் தன்னை குழந்தைபெற்றுக் கொள்ள தயாரான உடலையும் மனதையும் பெற்றிருக்க வேண்டும்.

வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவு உண்டு உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டும். நிறைய ஆக்சிஜன் தேவைப்படும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கரு உருவாகும் காலங்களில் வாந்தி வரும். அப்போது உணவு உள்ளே செல்லாது. அப்போது புளிப்பான பழரசங்களை அருந்தலாம். அப்போது உணவு உள்ளே செல்லாததால் உடலின் எடை குறையும் அது பற்றி கவலை இல்லை. பின்பு சரியாகிவிடும்.

கருவுற்ற தாய்க்கு நிறைய கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் தேவை. இவைகளை பார்த்து உண்ண வேண்டும். உடலை அசுத்தம் செய்யும் உணவுகள் ஆகாது. உப்பு, கொழுப்பு குறைவான உணவுகள் ஏற்றது. சிறிய உடற்பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சிகளும் நல்லது.

தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்தது. தாய்ப்பால் கொடுக்கும் தாய் உணவு விசயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

மூன்று மாதத்திற்குப்பின் தேன்கலந்த சாத்துக்குடி ஜுஸ் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு பின் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பழ ஜுஸ்கள் கொடுக்கலாம்.

இட்லியைவிட சத்து மாவு குழந்தைகளுக்கு நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஜங்க் புட் என்ற உணவுகளை கொடுக்கக்கூடாது. பேக்கரி உணவுகள் நல்லதல்ல. வெறும் மைதாவில் செய்யப்பட்ட பிஸ்கட் சிறந்த உணவல்ல. கேரட் துருவி, தேங்காய் சேர்த்து சற்று இனிப்பும் சேர்த்து கொடுக்கலாம்.

மூன்று வேளை கண்டிப்பாக குழந்தைகளுக்கு திணிக்க வேண்டாம். காரம் உப்பு நிறைந்த உணவுகளை கொடுக்கக்கூடாது. பசி வரும்போது கேட்டு வாங்கி உண்பார்கள்.

குழந்தைகள் சத்துப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கூடிய மட்டும் நிறைய பழங்களும் கொஞ்சம் புரதமும் இருந்தால் போதுமானது. அதிக உணவே ஆபத்து. வீட்டில் எங்கு நோக்கினும் கைக்கு, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பழங்கள், பயறுகள், நிலக்கடலைகள் போன்ற உணவுகளே இருக்க வேண்டும். ஜங்க் புட் பேக்கரி உணவு மற்றும் சுவீட் கடையின் இனிப்பு கார வகைகள் கண்ணில் படக்கூடாது. பசிக்கும்போது குழந்தைகள் கைக்கு எது கிடைக்கிறதோ அதை உண்பார்கள்.

இந்த குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் வைத்திருக்க வேண்டும். நெருப்பு, தொட்டியில் உள்ள நீர், கத்தி, ஆணி, மருந்துகள் இவைகளில் இருந்து பாதுகாக்க சரியான வழிமுறைகள் இருக்க வேண்டும்.

உடலைப் பற்றிய ஒரு  அறிவு குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். தினமும் யோகா, பிரணாயம், விளையாட்டு, கராத்தே, ஓட்டம் மற்றும் நடனம் போன்ற பயிற்சிகள் செய்வதற்கு ஒரு மணி நேரமாவது செலவிடவேண்டும்.

என்னதான் சிறந்த உணவு உண்டாலும் உடலின் மெட்டோபாலிசம் சிறப்பாக வேலை செய்தால்தான் உடல் வளர்ச்சி, ஆரோக்யம் சிறந்து விளங்கும். அதற்கு இந்த பயிற்சிகள் அவசியம்.

மேலும் உடல் உற்சாகமாக இருக்கவும், ஞாகபசக்தி, சிந்தனைத்திறன் சிறந்து விளங்க உடற்பயிற்சி மிக மிக அவசியம். ஆகவே உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.

மூன்று வித நோய்கள்:

டெட்டனஸ், கக்குவான், இளம்பிள்ளை வாதம் இம்மூன்றும் சிறு குழந்தைகளை பாதிக்கும் உடல்நோய்கள். தடுப்பூசி மூலம் இவைகள் வராமல் தடுக்கப்படுகிறது. இது போல குழந்தைகள் மனதை பாதிக்கும் நோய்கள் குற்ற உணர்வு, பயம், நேசிக்கப்படா நிலை. இந்த மூன்று குறைகளும் குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை கெடுக்கிறது. எப்போது ஒரு குழந்தை தன் பெற்றோரால் நேசிக்கப்படுகிறதோ அப்போதே அதற்கு உயர்ந்த தன்மதிப்பு  உருவாகிறது.

அநேக பெற்றோர்களுக்கு பல பிரச்சனைகள், சிக்கல்கள், கவலைகள், மன போராட்டங்கள். இதன் காரணமாக குழந்தைகள் மேல் எரிந்து விழுகிறார்கள். பாவம் அந்த குழந்தைகள் என்னதான் செய்யும், யாரிடம் போய் சொல்லும். இப்படி எப்போதாவது நாம் நடந்துகொண்டால் பின்பு அவர்களை அழைத்து, அவர்களிடம் நம் தவறுக்கு மன்னிப்பு கோரவேண்டும். அப்போது அவர்கள் நம்மை புரிந்துகொண்டு மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். அநேகமாக ஐந்து வயதுக்குள் குழந்தைகளுக்கு மனம் உருவாகிறது. அந்த வேளையில் தாயின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முகபாவங்களும், சொல், செய்கையுமே குழந்தையின் மனதை பாதிக்கின்றன. நம்பிக்கையூட்டும் உற்சாகமான மகிழ்வான முகத்தை பார்க்கும் குழந்தைகளுக்கு நல்ல மனம் உருவாகிறது.

செயல்கள் செய்யும்போது தவறுகள் வரும். தவறுகள், தவறுகள் அல்ல. ஆனால் ஒரு தஹ்றை மறுமுறை வராமல் இருக்க அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தவறுகள் செய்யும்போது அதற்கான பலன்கள் கிடைக்கும் அதை எதிர்கொள்ள துணிவு வேண்டும். தவறுகள் வந்தால் குழந்தைகளை திட்டி உனக்கு இதை செய்ய தகுதி இல்லை என்று மட்டும் கூறவே கூடாது. தாழ்வு மனப்பான்மை உருவாக்கக் கூடாது. தவறாமல் இருக்க வழிகளையும், தவறுகளின் பின்விளைவுகளையும் எடுத்துக் கூறவேண்டும்.

திட்டுக்கள், தண்டனைகள் அதிகமாகும்போது அநேக விசயங்களை நமக்கு தெரியாமல் குழந்தைகள் மறைப்பார்கள். அதனால் இன்னும் குற்றஉணர்வு கூடி மனம் நம்பிக்கையிழந்து குறுகிப் போகும்.

நாம் குழந்தைகளின் தொல்லைகளில் இருந்து விடுபட குழந்தைகளை சாப்பிட வைக்க பேய், பூச்சாண்டி, போலீஸ்காரன், பிள்ளைபிடிப்பவன் என பல வித பெயர்களில் பயப்படுத்துகிறோம். தற்காலிகத் தீர்வுக்காக குழந்தைகளின் மனதில் பயம் என்ற விசத்தை தூவுகிறோம். பயம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். வீரம் இல்லாவிட்டால் அறிவால் எந்த பயனும் இல்லை. அறிவு சிறப்பாக செயல்பட வீரம் வேண்டும்.

இன்று கதிரவன் உதிப்பதை கூட குழந்தைகள் தொலைக்காட்சியில்தான் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு உலகத்தைக் காட்ட வேண்டும். உலகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் காட்ட வேண்டும். அவர்களின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அவைகள் பயனுள்ளதாக இருக்கும்.

உயர்ந்த மலைகளை, அடர்ந்த காடுகளை, கடற்கரைகளை, பவுர்ணமியை, கதிரவன் உதயத்தை, பறவைகள், புழுக்கள் கூடு கட்டுவதை, முட்டையில் இருந்து குஞ்சு வெளிவருவதை.

கிராமங்களை, நகரங்களை, சந்தைகளை, தொழில்கூடங்களை, நீதிமன்றங்களை, காவல் நிலையங்களை,  அதிகாரிகளை, அமைச்சர்களை, பாராளுமன்றம், சட்டமன்றம் இப்படி வாழ்வின் எல்லா அம்சங்களையும் குழந்தையாக இருக்கும்போதே நேரில் பார்ப்பது விசாலமான மனதை உருவாக்கும். உயர் அதிகாரிக்கும், பணம் பெற்றிருப்பவர்களுக்கும் இருக்கும் அந்த செல்வாக்கை அவர்கள் உணர வேண்டும். இவைகள் தன்இலக்கினை உருவாக்க அவர்களுக்கு உதவும். இதுவே கல்விச்சுற்றுலா.

இன்று எல்லாமே இயந்திரமாகி போய்விட்டது. நமது வாழ்க்கை இயந்திரத்தனமாக ஆகிவிட்டது. எல்லாவற்றையும் வியாபார நோக்கோடு பார்க்கிறோம்.
மாடு என்றால் பால் கொடுக்கும் இயந்திரம். கோழி என்றால் முட்டை போடும் இயந்திரம். மனிதன் என்றால் பணம் உண்டாக்கும் இயந்திரம், குழந்தைகள் என்றால்மா

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/wall-street-bull.jpg

ர்க்குகள் வாங்கும் இயந்திரங்கள் அல்ல.

இவைகளால் முடங்கிப் போவதல்ல வாழ்க்கை, குழந்தையானாலும் பெரியவரானாலும் வாழ்க்கை ஒன்று தான்.

வாழ்வதற்கே படிப்பு, வாழ்வதற்கே உழைப்பு, வாழ்வதற்கே வருமானம். ஆகவே ஆனந்தமாக வாழத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை இருக்கும். சில குறைகளும் இருக்கும். ஆனால் எல்லா குழந்தைக்கும் பொதுவாக மொழிப் பாடமும் கணிதப் பாடமும் சொல்லித் தருகிறோம். அதுபோன்ற அடிப்படையான பாடம் ஒன்று உண்டு.

அதுதான் பண நிர்வாகம் (Finance Management) என்ற வரவு செலவு கணக்கு. எப்படியும் வரவுக்குள் செலவு இருக்க வேண்டும். செலவுகளில் சிக்கனம் வேண்டும்.

எந்த திறமை இல்லாவிட்டாலும் பண நிர்வாகம் என்ற திறமை இருந்தால் என்றும் நிம்மதியாக வாழலாம்.

எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் வரலாம். அமெரிக்காவே இன்று சிக்கல்பட்டு இருக்கிறது. வரவுக்குள் செலவை வைக்கவும், கடன் வாங்காதிருக்கவும் பழக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் செய்யாதிருக்கவும் சில்லரைகளிடம் கவனமாக இருந்தால் பெருந்தொகை தானாக வரும். சிக்கனம் என்றுமே மனிதனை காப்பாற்றும். அதிகமாக சம்பாதிக்கும் அநேகர் அல்லல்படும்போது, குறைவான வருமானத்தில் மகிழ்வாக வாழ்பவர் அநேகர்.

தந்தையிடம் கோடி கோடியாக பணம் இருந்தாலும் செலவில் சிக்கனம் என்ற குணம் யாவருக்கும் வேண்டும். சிக்கனம் மனிதனின் சிறந்த பாதுகாப்பு கவசம். குழந்தை மனதில் இது உருவாக்கப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் பணத்தை கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கவும் கணக்குகளை பார்க்கவும் மீதி காசை கவனமாக திருப்பி வாங்கவும் நாம் பயிற்றுவிக்க வேண்டும்.
ஆக நமது குழந்தைகளிடம் அனைத்து விசயங்களையும் போதிக்கும் போது மிக உயர்ந்த மனிதனாக தலைவனாக கட்டாயமாக ஒவ்வொரு குழந்தையும் உருவாகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment