hurricane, chennaivasthu.com

நமது வாழ்க்கையில் வெற்றி எப்படி கிடைக்கும்? 

hurricane, chennaivasthu.com
hurricane , chennaivasthu.com

விளக்கு வெளிச்சம்.

 ஒரு மனிதனின் வெற்றிக்கு துணையாக இருப்பது தைரியம் மட்டுமே. அந்த தைரியம் என்பது நாம் தனியாக பயணிப்பது ஆகும் அதுபற்றிய அற்புதமான விளக்கம்.

ஒரு அமைதியான மலை சார்ந்த இடம்.அதனருகில் ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீகம் மூலமாக மக்களுக்கு சேவைகளை செய்து வந்தார் ஒரு மகான். அவரைத் பார்பதற்கு பல பகுதிகளில் இருந்தும் பல பிரச்சனைகளோடு வந்து அவரிடம் தங்களது பிரச்சனைகளை கூறி அதற்கு தீர்வும் பெற்று சென்றனர்.

  அப்படித்தான் ஒரு இளைஞன் ஒருவனும் அவரை தேடி அங்கு வந்தார். காலையில் வந்த இளைஞன் இரவு வேகுநேரம் ஆகிய பிறகு தான் தன்னுடைய இடம் திரும்ப வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. உடனே மகானிடம் சென்று நான் எனது ஊருக்கு செல்கின்றேன் என்று சொல்லும் போது ,மகான் சொன்னார் நன்றாக இருட்டி விட்டது.அதனால் இரவு இங்கேயே தங்கி விட்டு நாளை காலையில் செல் என்று சொன்னார்.

    ஆனால் அந்த இளைஞனோ இரவு இருட்டு அச்சத்தை கொடுத்தாலும், தனது இல்லம் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.இதனால் மகானும் அவனை வற்புறுத்த விரும்பாமல்,அவனுக்கு வெளிச்சம் வரக்கூடிய விளக்கு ஒன்றினை கையில் கொடுத்து இதனை கையில் வைத்து கொண்டு செல் என்று சொன்னார்.

அவனும் அந்த விளக்கை கையில்  வைத்துக் கொண்டு கொஞ்சதூரம் சென்றபின்பு அவனை  பின் தொடர்ந்து சென்ற மகான் அவன் கையில் இருந்த விளக்கினை அணைத்து விட்டு இப்பொழுது செல் என்று கட்டளை இட்டார். “அவன் என்ன இது ” விளக்கினை அணைத்து விட்டு செல் என்கின்றாரே, மேற்கொண்டு செல்லாமல் அப்படியே நின்றான்.

உடனே மகான் சொன்னார்,இந்த வெளிச்சம் என்பது தற்காலிகமானது.ஒரு நீண்ட நேர பயணத்தில் துணை வராது.எண்ணெய் தீர்ந்தாலோ பெரிய காற்று வீசினாலோ இந்த விளக்கு அணைந்து விடும்.அப்பொழுது இந்த இடத்தினில் இருள் சேர்ந்து விடும். ஆக வெளிச்சம் என்பது வெளியில் இந்த விளக்கில் இல்லை உன்னுடைய அகத்தினில் உள்ளது. உன் மனதில் இருக்கின்றது.அங்கு உள்ள இருளினை அகற்றி துணிச்சல் என்கிற வெளிச்சத்தை கொண்டுவா.அது மட்டும் உன்னுடன் கடைசி வரையில் உனக்கு வழியினை காட்டும். இதனை மனதில் வைத்து உனது பயணத்தை தொடங்கு உனக்கு வெற்றி உறுதி என்று சொன்னார்.

   ஆக இதில் நாம் தெரிந்து கொள்வது யாதெனில் நமது உள்ளத்தில் பயம் என்கிற இருள் இருந்தால் வெளி உலகம் எத்தனை வெளிச்சமாக இருந்தாலும், நமக்கு பயன்  கிடையாது. உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி விட்டு அங்கு  ஒரு விளக்கை எரியவிட்டால்,வெளி உலகம் எவ்வளவு இருட்டாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை.

ஒரு மனிதனின் வெற்றிக்கு பெருமளவில் உதவியாக இருப்பது தைரியம் மட்டுமே, நீங்கள் உங்கள் உள்ளத்தில் தைரியத்தையும், துணிவையும்,வீரத்தையும் வளரவிடுங்கள்.வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது மட்டுமே நமது வாழ்க்கையில் வெற்றி என்பது எளிதாக பெற்றுவிட முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

E-mail: jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com