தூக்கமும் பனங்காயும்.

chennaivasthu
chennaivasthu

ௐநமசிவாய!!

நம்பிஆருர் பெருமான்

திருவடிகளே போற்றி போற்றி!!

தெரியாததால் அதை தெரிந்து கொள்வது, ஒன்றிலிருந்து மற்றொன்று என கற்று கொண்டு  நம் வாழ்க்கை முழுக்க நடைபெற்றுக் கொண்டேயிருப்பது. ஒவ்வொரு சூழலிலும் நாம் புதிதாக ஒன்றை அறிந்து கொள்வது.புதிது புதிதாய் அறிய அறிய, அறிவு விசாலமாகின்றது. பட்டறிவு அதாவது கற்றறிவு என்பது படிப்பறிவை விடவும் நம் வாழ்க்கைக்கு அதிகமாய் உதவக் கூடியது.
கற்றறிதலின் பலன் நாம் அவற்றை செயல் பாட்டில் கொண்டு வருதலில்தான் அடங்கி உள்ளது. கற்றறிதலை நாம் பின்வருமாறு பிரிக்கலாம்.
எதைச் எப்படி எப்போது வேண்டும்.
எதைச் செய்தல் கூடாது.
எவற்றை  முக்கியமாக பின்பற்ற வேண்டும்.
எவற்றை முக்கியமாக பின்பற்றுதல் கூடாது.
இந்த நான்கு அம்சங்களில் அனைத்தும் அடங்கிவிடுகிறது. கற்றுக் கொள்ளுதல் என்பதை இன்னாரிடத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ, இப்படித்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ வரையறை வைத்துக் கொள்ளுதல் தேவையற்றது. கற்றறிதல்தான் முக்கியமே தவிர  யாரிடமும் கற்றுக்கொண்டு வருகின்றோம்  என்ற வழிகளைப்பற்றிக் கவலைப்படுதல் கூடாது.
எங்கேயெல்லாம் நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளதோ, யாரிடம்  நமக்குத் தேவையான அறிவு கிடைக்கின்றதோ, அவற்றை அடைவதற்கு எப்படிப்பட்ட தடைகள் இருப்பினும், தடைகளைத் தாண்டிச் சென்று கற்றுக் கொள்ள நாம் தயங்குதல் கூடாது.

காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டிய மன்னர் இரண்டாம் நரசிம்ம வர்மன் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயிலைக் கட்டத் தொடங்கிய இம்மன்னர் இங்கு காலத்தால் அழியாத வண்ண ஓவியங்களைப் படைக்க எண்ணினார். அதற்காக அஜந்தா, எல்லோரா சிற்பங்களையும், ஓவியங்களையும் கண்டு அங்கு பயன்படுத்தப் பட்டுள்ள வண்ணக்கலவைகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். மூலிகைகளின் இரகசியங்களை வெளியிட மறுத்த காலம் என்பதால் அவற்றைமிக நுட்பமாக அறிந்து கொள்ள திட்டமிட்டார்.
ஒரு பணியாளன் போல் வேடம்பூண்டு மராட்டியத்திற்குச் சென்ற நரசிம்மவர்மப் பல்லவன் மராட்டிய மன்னனிடத்தில் ஒரு கட்டிடப் பணியாளனாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறு மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து தொழில் நுட்பங்களையும், ஓவியங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்ணக் கலவைகளையும், அதற்கான மூலிகைகளையும் அறிந்துவந்து தன்னுடைய ஆலயத்தில் பயன்படுத்தினார்.
மிகப்பெரும் அளவில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்தக்காலத்திலும் அம்மன்னர்கள் பயன்படுத்திய காலத்தால் அழியாத வண்ணக் கலவைகளைப் பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்தோ-அரேபிய எண்முறைகளை முதன் முதலில் ஐரோப்பா நாடுகளில் அறிமுகப்படுத்தியவர் அடிலார்ட் என்னும் கிருத்துவப் பாதிரியார். இவர் இந்தோ-அரேபிய எண்முறைகளை கற்றுக் கொள்வதற்காக தன்னை ஒரு முஸ்லீம் என்று கூறிக்கொண்டு அரேபியாவில் உள்ள கார்டோவா என்னும் பள்ளியில் சேர்ந்தார்.
அங்கு இந்தோ அரேபிய எண்முறையினையும் பல கணித நூல்களையும் கற்றுணர்ந்தார். அதன்பின்னர் அரேபிய கணித அறிஞர் அல்கொவாரிஸாமியின் நூல்களை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். அதற்குப் பின்னர்தான் இந்தோ அரேபிய எண்முறைகளை ஐரோப்பா அறிந்து கொண்டது.

குப்பைகளிலிருந்து விலைபோகக்கூடிய பாலீதின் பைகளையும். காகிதங்களையும் பொறுக்கி எடுப்பவர்கள் அதிகாலை நேரத்திலேயே அவர்களின் பணியைத் தொடங்கி விடுகிறார்கள். தாமதமாய்ப் போனால் எதுவும் கிடைக்காது என்பதை அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.
‘விடியற்காலை பறவைக்குத்தான் இரை கிடைக்கும்’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.இதை  காலம்சென்ற என்னுடைய  அப்பா நேரடி வார்த்தைகளில் உணர்த்தி உள்ளார்கள். அதாவது1944 பஞ்சத்தில் உணவுக்காக பனங்காய்களை சுட்டு உணவாக பயன்படுத்துவார்களாம்.அப்பொழுது விடியற்காலை3மணிக்கு சென்றால் மட்டுமே பனங்காடுகளில் பனங்காய் பொறுக்க முடியுமாம்.இல்லையெனில் யார் முதலாக போகின்றார்களோ அவர்களுக்கு அதிக பனங்காய்கள் கிடைத்து விடும் என்று சொல்லி இருக்கிறார்.ஆக உங்கள் வெற்றி என்பது விடியற்காலை தொடங்கி நள்ளிரவில் முடிய வேண்டும்.

தம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது எது என்பதை உணர்ந்து கொண்டு அதை உடைத்தெறிபவர்கள்தான் வளர்ச்சியை எட்டுகிறார்கள். நம் முன்னோர்களில் பலர் எழுதப்படிக்கவே தெரியாதபோதும் தனக்குத் தேவையான வற்றைப் படித்துக் காண்பிப்பதற்காகவே படித்தவர்களை வேலைக்கு அமர்த்தி கேட்பதன் மூலம் அறிவைப் பெற்றார்கள்.
நடைமுறைப்படுத்தும்போது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகும் செயல்பாடுகள் வெற்றியடைந்தபின் போற்றப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.
கற்றறிதல்தான் நம்மை வளர்த்தெடுக்கும். நாம் கற்றுக்கொள்வது மட்டுமே குறிக்கோளாய் இல்லாமல் நாம் கற்றதையும் பெற்றதையும் மற்றவர்களும் பெறும் வண்ணம் நம்முடைய செயல்பாடுகள் அமைதல் வேண்டுமென்பதும் மறத்தல் கூடாது.

ஆக உங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால் அதிகாலையில் இருந்து உங்கள் இறை தேடும் வேலையை தொடங்குங்கள். 6மணி நேரம் மட்டுமே தூக்கம் என்பது இருக்கட்டும்.
வாஸ்து ஆலோசகர் வாழ்க்கைக்கு  வந்த பிறகு எனது தூக்கம் 6மணி நேரமாக குறைந்த பிறகே வெற்றிப் பயணத்தில் காலடி எடுத்து வைக்க முடிந்தது.உங்கள் வெற்றியை தக்க வைக்க தூங்க வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI. A. JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122
whatsapp no :. +91 9965021122
E-mail: jagan6666@gmail.com
———————————————————————————-
#vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
#vastu consultant in chennai,
#vastu consultant in coimbatore, erode, tirupur,
#vastu consultant In madurai, trichy, tirunelveli,