தொழிற்சாலையில் உள்ளே கோவில்கள் வாஸ்து அமைப்பில் சரியா?

vinayagartemple
vinayagartemple

தொழிற்சாலைகக்கு தவறான அமைப்பு

வாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும்  மட்டும்பார்ப்பது சரியல்ல. ஒரு தொழிற்சாலைக்கும் பொருந்தும்.

தொழிற்சாலை என்றாலே நூறு குடும்பத்தை வாழ வைக்கும் கடவுளின் இருப்பிடமாக எடுத்து கொள்ளலாம். இறை உணர்வு சார்ந்த ஒரு சில விசயங்களில்  சிலர் செய்யும் தவறுகள் அந்த தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்தி விடுகிறது.

எனது வாஸ்து பயணத்தில் நான் செல்லும் தொழிற்சாலைகளில் ஒரிரு இடங்களில் வினாயகப் பெருமான் ஆலயங்களை பார்த்திருக்கிறேன். நான் ஒரு இடத்திற்கு போவதற்கு முன்பு வேறு வாஸ்து நிபுணரை வைத்து வாஸ்து சாஸ்திரம் பார்த்து அவர் சொன்ன காரணமாக வைத்துள்ளேன் என்பார்கள்.

 ஆக தவறான அமைப்பில் இருக்கும் கோயில் அமைப்பினை தொழிற்சாலையில் இருந்து சரியான இடத்தில் அந்த தொழிற்சாலைக்கு அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் வைப்பதே நல்லது.அந்த ஆலயத்தில் வழிபாடுகளை என்றும் தடையின்றி ஏற்படுத்துவதே உண்மையான வழிபாடாக இருக்கும்.

vinayagar temple in factory
vinayagar temple in factory

இந்த இடத்தில் தொழில் என்பது வேறு, இறைவழிபாடு என்பது வேறு இந்த இரண்டினையும் ஒரே இடத்தில் ஏற்படுத்தி ஒரு தொழிற்சாலையின் வளர்ச்சியை தடுக்க வேண்டாம்.

தொழிற்சாலை என்பதே நமக்கு ஒரு கோவில் போன்றது தான்,அதனையேநாம் கோவிலாக பாவிக்கும் போது கட்டாயமாக நமக்கு நல்லது நடக்கும். எக்காரணம் கொண்டும் கோவில் என்பதனை ஒரு தொழிற்சாலை சுற்றுசுவருகுள் வைத்து பூட்டி வைக்காதிர்கள்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
Awww.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)