வாஸ்துபயணம்

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து அவசியமா?

 

vastu-
vastu-

 

வாஸ்து எங்கு பொருந்தும்

இதுவரைக்கும் நாம் வசிக்கும் வீட்டிற்கான அமைப்புகளில் வாஸ்து சாஸ்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து வந்தோம். அவ்வகையில் சிறிய தொழிற்சாலைகள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்திற்குமே வாஸ்து சாஸ்திரம் பொருந்துமா? என்பதைப் பற்றி அறிவோம்.

அடிப்படையில் வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டிடங்களுக்கு பொதுவான ஒன்று. குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கோயில்கள், என அனைத்திற்குமே வாஸ்து சாஸ்திரம், பொதுவானது.

தொழிற்சாலைகளுக்கான வாஸ்து

தொழிற்சாலைகளில் மிகச்சிறியது முதல் மிக மிக பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்துமே வாஸ்து விதிகளுக்கு உட்பட்டதாகும். அவற்றில் எந்த பகுதி எங்கு வர வேண்டும் என்பதைப் பற்றி அறிவோம்.

தென்மேற்கு

இந்த பகுதியில் மிக உயரமான கட்டிட அமைப்புகள் வரலாம். மிக அதிக எடையுள்ள இயந்திரங்கள் வரலாம். சேமிப்பு கிடங்கு வைக்கலாம். உற்பத்தி செய்யும் இடமாக இருக்கலாம். தலைமை அலுவலகம் இருக்கலாம். உயரமாக தண்ணீர் தொட்டி வைக்கலாம்.

தென்கிழக்கு

இந்த பகுதியில் கொதிகலன் சமையலறை வைக்கலாம், மின் உற்பத்தி உபகரணங்கள் வைக்கலாம். தொழிலாளர் குடியிருப்பு வைக்கலாம். வாயு குடுவைகள் சேர்த்து வைக்கலாம்.

வடமேற்கு

இந்த பகுதியில் உற்பத்தி செய்த பொருட்களை வெளியேற்றும் வழியாக வைக்கலாம். கழிவறை போன்றவைகள் வைக்கலாம்.

வடகிழக்கு

இந்த பகுதியில் முக்கியமான வாசல் வரலாம். அலுவலகம் வரலாம். முகப்பு வாசல் வரலாம். முக்கியமான வரவேற்பறை வரலாம்.

இதுவரை குறிப்பிட்ட இந்த நல்ல அமைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் எல்லாமே நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். சரியான வகையில் வாஸ்துபடி நல்ல அமைப்பு இல்லாவிடில், பொருளாதார இழப்பு, நஷ்டம், ஏமாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

error: Content is protected !!