. “உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சைப் பாராதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகிறது

 யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆயிரக்கணக்கான எறும்புகள் மடிகின்றன

மிகப் பெரிய தேருக்கும்கூட முட்டுக்கட்டை தேவை. பாய்ந்து செல்லும் வாகனங்கள் புரண்டு  விடாமல் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. ஒரு வாகனம் எத்தனை வேகமாக பாய்கிறதோ அந்த அளவிற்கு அதன் கட்டுப்பாட்டுத்திறன் (#Brake) கூடுதலாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த வாகனங்களில்  Anti_Brake_System என்ற மிகச்சிறந்த பிரேக் அமைக்கப்படுகிறது. எனவே எத்தனை வேகமாக சென்றாலும் அதனை கட்டுப் படுத்த முடிகிறது.
வாகனங்கள் மலைப்பாதையில் வேகமாக ஏறமுடியாது. கியரில்தான் மெதுவாக ஏறமுடியும். மலைப்பாதையில் இறங்கும்போது வாகனங்கள் மிக வேகமாக இறங்கும். வண்டி வேகமாக இறங்குகிறதே என்று (#Top_Gear) உச்ச கியரில் இறக்கினால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதல பாதாளத்தில் விழுந்து, நொறுங்கிப் போக நிறைய வாய்ப்புகள் உண்டு

I will look back four times before taking a step. “

. மகாத்மா காந்தி தான் எழுதிய கடிதங்களை மூன்று முறை திருப்பி படிப்பாராம்.
விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலங்களில் மிகச்சிறிய தவறு வந்துவிட்டால் கூட மிகப்பெரிய பண இழப்பும் கால விரயமும் ஏற்படுகிறது.
மகத்தான செயல்களைச் செய்வோருக்கும், மாபெரும் சாதனைகளை நிகழ்த்த இருப்போருக்கும், விரும்புவோருக்கும் தமது ஒவ்வொரு செயலிலும் அலட்சியமற்ற ஆழ்ந்த கவனமும் எச்சரிக்கை உணர்வும் என்றும் தேவை.

ஒரு செயலுக்கு ஒரு விளைவு உண்டு என்பது போல ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பக்க விளைவும் உண்டு. யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆயிரக்கணக்கான எறும்புகள் மடிகின்றன. அது பற்றி யாருக்கும் கவலை இல்லை.
ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம்மைச் சுற்றி இருப்போருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வராமல் செயல்பட வேண்டும்.
அரசு செயல்படுத்தும் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்கள் அநேக வேளைகளில் பல லட்சம் சாமான்யர்களை பாதிப்பதாக அமைந்து விடுகின்றன. மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களின் பல தொழில்களும் இதுபோல அநேக மக்களை பாதிப்பதாக அமைகின்றன.
இது போன்ற பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படாமல் அவர்களை பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை அவர்களுக்கு உண்டு.
தன் பலத்தை யாவரும் கண்டிட

இளையோர் தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்துவிடும் போது அவர்கள் உடலிலே ஒரு தெம்பு, மனதிலே ஒரு கட்டுக்கடங்கா வேகம்.. எங்கே பாயலாம் என்று தோன்றும். “ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது” என்ற கூற்றுக்கிணங்க சிறகடித்து பறக்கத் துடிக்கும் வயதின் வேகம்.

#நரம்புகள் முறுக்கேறி இருக்கும்போது வரம்புகள் மீறிப் போகின்றன. இரத்தம் சூடாய் இருக்கும் போது சித்தம் கல்லாகிப் போகின்றது” என்கிறார் கண்ணதாசன்.

இந்த நேரத்தில் இந்த வேகத்தோடு விவேகத்தையும் சேர்க்க வேண்டும். துள்ளிப் பாயும் #நதி போன்ற இவர்களுக்கு போகும் வழி காட்ட ஒரு குரு தேவை.

போகும் வழிகளில் ஆழங்களையும் அகலங்களையும் தூரங்களையும் எடுத்துச் செல்ல ஒரு வழிகாட்டி வேண்டும்.

சந்தரகுப்த மௌரியனுக்கு ஒரு சாணக்கியன் போல,

விவேகானந்தருக்கு ஒரு #இராமகிருஷ்ணர் போல,

“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் (நடு இரவில்) குடை பிடிப்பானாம்” என்பது பழமொழி. கராத்தே படித்த புதிதிலும், புதிதாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடலை உரமேற்றிக் கொள்ளும் வேளையிலும் தன் பலத்தை சோதித்து பார்க்க ஆசை வரும். புதிய பணக்காரர்களுக்கும், புதியதாக பதவி, அதிகாரங்களை பெற்றோருக்கும் இது போன்று ஆவல் வரலாம்.

தலையில் கை வைத்து யாவரையும் அழிக்க வரம் பெற்றான் பத்மாஸ்வரன். அந்த வரத்தை ஈசனிடமே சோதிக்க எண்ணினான். அதன் பலனாக தன்னையே அழித்துக் கொண்டான்.

“உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சைப் பாராதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகிறது. ஆகவே தேவையில்லாமல் நமது பலத்தை உபயோகிக்கவோ, சோதித்துப் பார்க்கவோ நினைப்பது மாபெரும் தவறு.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment