chennaivastu

ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

https://chennaivasthu.com/wp-content/uploads/2017/10/1024px-A_boy_playing_one_of_a_Street_Games_of_Tamil_Nadu_-_Kozhi_Gundu_2.jpg
https://chennaivasthu.com/wp-content/uploads/2017/10/1024px-A_boy_playing_one_of_a_Street_Games_of_Tamil_Nadu_-_Kozhi_Gundu_2.jpg

புத்திசாலித்தனம்

புத்திசாலித்தனக் குறைபாடு  என்பது ஒரு மனிதனின் வளர்ச்சி சார்ந்த அனைத்து அம்சங்களும் தாமதமாக செய்யும் நிலையைக் குறிக்கிறது. புத்திசாலித்தனக் குறைபாட்டுடன் தொடர்புடைய சில மருத்துவநிலைகளைக் குழந்தை பிறக்கும்போதே கண்டறிய இயலும். உரிய நேரத்திற்கு முன்பாகவே பிறக்கும் குழந்தைகள், பிறக்கும்போது குறைவான எடை கொண்ட குழந்தைகள் மற்றும் பிறக்கும்போது அஸ்ஃபிக்ஸியா(asphyxia)வால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு வரும் வாய்ப்பு அதிகம். தீவிரப் புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு 6 – 12 மாதங்கள் வயதாகும்போது அதனைக் கண்டறியலாம். மிதமான குறைபாடு கொண்ட குழந்தைகளுடைய பிரச்னைகளை அந்தக் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் போது கண்டறியலாம். புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்னை பிறப்பிலிருந்தே இருக்கிறது. அதே சமயம் குழந்தை பிறந்தபிறகு அதன் மூளைக்கு ஏற்படக் கூடிய சேதம்கூட புத்திசாலித்தனக் குறைபாட்டை உண்டாக்கலாம்.
மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும்போது புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட குழந்தைகள் உட்காருவது, தவழ்வது, நடப்பது, பேசுவது போன்றவற்றைத் தாமதமாகக் கற்றுக்கொள்ளக் கூடும்.
 புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட பெரியவர்களும் குழந்தைகளும் பின்வரும் பண்புகளில் சிலவற்றை வெளிப்படுத்தக் கூடும்.

வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் தாமதம் ஆகுதல்.

மொழியைக் கற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுதல்,

சமுக தொடர்பான விதிமுறைகளைக்   கற்றுக்கொள்ளச் சிரமப்படுதல்.

 ஒரு பிரச்சனை வந்து விட்டால் அப்பிரச்னைகளைத் தீர்க்கும் திறமைகள் இல்லாமல் போவது.

புத்திசாலித்தனம் சார்ந்த பிரச்சனைக்கு பல காரணங்கள் இருந்தாலும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில காரணங்களை பார்ப்போம்.

ஒரு குழந்தையின் அம்மா அல்லது சுற்றுச்சூழலினால் வருகிற பாதிப்புகள்,

அயோடின் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துகள் போதாமல் இருத்தல்  காரணமாக வரும் புத்திசாலித்தன குறைபாடு,

ஒரு பெண் மாதமாக இருக்கும்போது அவருக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் கிடைக்காது போவது.

ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது மது, நிக்கோடின் மற்றும் கொக்கெய்ன் போன்ற பொருள்களைப் பயன்படுத்துதல்

 நஞ்சுக்கொடி பிறழ்ச்சி

தாய்க்கு ஏற்படக்கூடிய இதய அல்லது சிறுநீரகப் பிரச்னைகள்

குழந்தை உரிய நேரத்திற்கு முன்பே பிறத்தல்

பிறந்த குழந்தையின் எடை மிகக் குறைவாக இருத்தல் சிசுப்பருவம்மற்றும்குழந்தைப்பருவத்தில்

காசநோய் அல்லது பாக்டீரியல் மெனின்கிட்டிஸ் போன்ற மூளைத் தொற்றுகள்

chennaivastu
chennaivastu

 பல காலத்துக்குப் போதுமான ஊட்டச்சத்துக் கிடைக்காமல் இருத்தல் ஆக இப்படி பலகாரணங்களை சொன்னாலும் அந்த குழந்தை பிறந்த போது ஒரு வீட்டின் அமைப்பு என்பது கிழக்கு பகுதி மிக் கடுமையான வாஸ்து குறைபாடுகள் இருக்கும். அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே  அந்த வீடு சரியாக வாஸ்து அமைப்பில் இருந்தால் ஒரு வீட்டில் அப்படிப்பட்ட குழந்தைகள் பிறக்காது.புத்திசாலித்தனக் குறைபாட்டைக் குணப்படுத்த இயலாது, ஆனால் இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்குச் சரியான ஆதரவையும் சேவைகளையும் வழங்கினால் அந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக, இயன்ற அளவு பிறரைச் சார்ந்திராமல் சுதந்திரமாக வாழ இயலும். 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)