இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நீங்க வேண்டுமா?

chidambaram_chitrambalam
chidambaram_chitrambalam

உணவுக்கு என்றும் பஞ்சமா?

நம்முடைய வாழ்க்கையில்  உணவுக்கு என்றும் பஞ்சமே இருக்காத அமைப்பை கொடுக்கக்கூடிய அற்புதமான அப்பர் பெருமானின் பதிகம். பூலோக கயிலாயம் என்று சொல்லும் தில்லையம்பலத்தில் இருந்து பாடிய பதிகம்.

இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நீங்கவும் இந்த பதிகத்தினை பாராயணம் செய்யலாம்.

திருச்சிற்றம்பலம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என்னன் பாலிக்கு மாறு கண்டின்புற

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
அரும்பற்றப்பட ஆய்மலர் கொண்டுநீர்

சுரும்பற்றப்படத் தூவித் தொழுமினோ

கரும்பற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்

பெரும்பற்றப்புலியூர் எம் பிரானையே
அரிச்சுற்ற விøனாயால் அடர்ப்புண்டு நீர்

எரிச்சுற்றக் கிடந்தார் என்ற யலவர்

சிரிச்சுற்றுப் பல பேசப்படா முனம்

திருச்சிற்றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே
அல்லல் என் செயும் அருவினை என்செயும்

தொல்லை வல்வினைத் தொந்தந்தான்என்செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம்பல வாணார்க்கு

எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்

நான் நிலாவி யிருப்பன் என் நாதனைத்

தேன் நிலாவிய சிற்றம் பலவனார்

வான் நிலாவி யிருக்கவும் வைப்பரே.
சிட்டர் வானவர் சென்று வரங் கொளும்

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை

சிட்டன் சேவடி கைதொழச் செல்லும்அச்

சிட்டர்பால் அணுகான் செறு காலனே.
ஒருத்தனார் உலகங்கட் கொரு சுடர்

திருத்தனார் தில்லைச் சிற்றம் பலவனார்

விருத்தனார் இளையார் விடமுண்ட எம்

அருத்தனார் அடியாரை யறிவரே
விண் நிறைந்ததோர் வெவ்வழலின் உரு

எண் நிறைந்த இருவர்க்கு அறிவொணாக்

கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்

துள் நிறைந்த நின்றாடும் ஒருவனே
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்

வல்லை வட்டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்

தில்லை வட்டந்திசை கைதொழுவார் வினை

ஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே
நாடி நாரணன் நான்முகன் என்றிவர்

தேடியுந் திரிந்துங் காண வல்லரோ

மாட மாளிகை சூழ் தில்லை யம்பலத்(து)

ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்

சதுரன் சிற்றம்பலவன் திருமலை

அதிர ஆர்த்தெடுத்தான் முடிபத்து இற

மிதி கொள் சேவடி சென்றடைந் துய்மினே
            திருச்சிற்றம்பலம்

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com