guru gemstone/குரு கிரக ராசிக்கல்

ஆசிரியர் வேலை ஒரு அர்பணிப்பு இல்லாத வேலை. தனக்கு என்ன  தெரிகிறதோ அதை ஒளிவு மறைவில்லாமல், வஞ்சகமில்லாமல், தன்னிடம் படிக்க வருகின்ற மாணவனுக்கு ஒரு குருவாக இருந்து போதிக்கக்கூடிய   ஆசிரியருக்கு அழகு. அதுபோல உலகில் இருக்கக்கூடிய அனைத்து மனிதர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக. ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ,உண்மை மனிதராக வாழக்கூடிய நிலையை கொடுப்பது குரு என்று ஒரு கிரகம் தான். அந்த கிரகத்தின் நவரத்தினம் என்பது கனகபுஷ்பராகம். இந்த நவரத்தின கற்களை யார் அணியலாம் என்று பார்க்கும்பொழுது என்னைப்போன்ற ஜோதிடர்கள் சொல்வார்கள். தனுசு ராசிக்காரர்கள், லக்கினக்காரர்கள், மீன ராசிக்காரர்களும், மீன லக்னக்காரர்கள், அதேபோல குரு திசை, குரு புத்தி நடப்பில் இருந்தாலும் , விசாக நட்சத்திரம், புனர்பூசம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் சார்ந்த மனிதர்களும் அணிந்து கொள்ளலாம்.  ஆனால் என்னை பொறுத்த அளவில் அதற்கு மாற்றுக் கருத்து மனிதனாகத்தான் நான் இருக்கின்றேன்.  குரு என்கிற கிரகம் தன்னுடைய சுய பாவமாகவும், இரண்டாம் பாவம், நான்காம் பாவம், ஆறாம் பாவம், பத்தாம் பாவம் இந்த பாவங்களை கையில் வைத்திருக்கும் போது, பணம் சார்ந்த நிகழ்வில் நிச்சயமாக வெற்றி என்பது உண்டு, அக வாழ்க்கையில் பணம் வேண்டும் என்கிற மக்கள்  குடும்ப உறவுகளில் உறவு  சிறப்பு பெற வேண்டும், குழந்தை பிறப்பு வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், இப்படி குடும்பம் என்கிற ஒரு நிகழ்வுக்கு யாருக்கு தேவை இருக்கிறதோ, அவர்கள் குரு என்கிற கிரகம் ஏழாம் பாவ தொடர்பு கொள்ளும்பொழுது தாராளமாக குரு சம்பந்தப்பட்ட கனக புஷ்பராக ரத்தினத்தை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.