மைனர் சொத்தும் பாதுகாப்பு நபரின் நிலையும் .

மைனர் சொத்தும் பாதுகாப்பு நபரின் நிலையும் .

நமது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 18 வயதை கடந்த குழந்தைகள் செச்சூர்டு வயதை அடைந்தவர். என்று சட்டம் சொல்கிறது.
ஆக சொத்து வாங்குவது, விற்பது, உடன் படிக்கைகள் ஏற்படுத்தி கொள்வது, கோர்டில் வழக்கு போடுவது போன்ற விசயங்களுக்கு கட்டாயம் 18 வயது தொடங்கி இருக்க வேண்டும்.18 வயது வந்தவர்கள் மட்டும் தான் தனியாக செயல் பட முடியும். அதற்கு கீழ் உள்ளவர்கள் தனியாக இயங்க முடியாது.
பதினெட்டு வயதை கடக்காது இருக்கும் குழந்தைகளுக்கு சொத்து இரண்டு வகைகளில் கிடைக்கும். ஒன்று பூர்வீக சொத்துக்கள், மற்றொன்று குழந்தை மேஜராக இல்லாமல் இருக்கும் போது அவர்களுடைய பெயரில் வாங்கப்பட்ட தனிப்பட்ட சொத்துக்கள்.

6.மைனரை பாதுகாப்பது என்பது, படிக்க வைப்பது, சாப்பாடு கொடுப்பது நோய்களில் இருந்து காப்பது போன்றவை.
இளவயது குழந்தைகளின் சொத்தை பாதுகாப்பது என்பது சொத்து எப்படி பாராமரிப்பது, எப்படி வாங்குவது, எப்படி விற்பது போன்ற நடைமுறைகள் பலவாறு உள்ளன.

இயற்கையான முறையில் அவர்களுடைய பாதுகாப்பாளர்கள் மூன்று வகையில் இருப்பார்கள். அதாவது. இயற்கை பாதுகாப்பாளர் , உயில் பாதுகாப்பாளர், நீதிமன்றம் நியமிக்கும் பாதுகாப்பாளர்.
.இயற்கை பாதுகாப்பாளர் என்பவர் தந்தை மற்றும் தந்தைக்கு அடுத்த தாய் ஆகிய இருவரையும் குறிக்கும்.உயில் பாதுகாப்பாளர் என்பது இயற்கை பாதுகாப்பாளர் இல்லாத போது அவர்கள் உயில் எழுதி ஒரு பாதுகாவலரை நியமித்து மைனரையும் அவரது சொத்துக்களை பாதுகாத்து மேஜர் வயது அடைந்தவுடன் அவரிடம் ஒப்படைக்கும் படி இருப்பது உயில் பாதுகாப்பாளர் ஆகும்.
நீதிமன்றம் ஏதாவது ஒரு காரணத்திற்காக பாதுகாப்பாளரை நியமித்தால் கோர்ட் நியமிக்கும் பாதுகாப்பாளர் என்போம்.

 

அண்ணன், பெரியப்பா, தாத்தா, பாட்டன், மாமா, சித்தப்பா போன்றோர் மைனரின் உடலுக்கு
மட்டும் பாதுகாப்பாளராக இருந்தார்கள். ஆனால் சொத்துக்கு பாதுகாப்பாளர் இருக்க முடியாது.
இயற்கை கார்டியனில் தாயை விட தந்தை தான் முன் உரிமை . தந்தை வெளிநாட்டில் இருக்கும் போதோ, துறவி ஆனாலோ அல்லது உயிருடன் இல்லை என்ற நிலையில் தான் தாய் பாதுகாப்பாளர் ஆவார்.
வளர்ப்பு குழந்தைக்கும், வளர்ப்பு தந்தை, இயற்கை கார்டியன் அவருக்கு பிறகு, வளர்ப்பு தாய் இற்கை கார்டியன் ஆகும். சட்ட பூர்வமற்று குழந்தை பிறந்து இருந்தால் அதற்கு தாய் தான் இயற்கைகார்டியன். மைனரின் தனிப்பட்ட சொத்துக்களை இயற்கை கார்டியன் என்பவர் ஆதாவது அந்த மைனரின் தந்தையே ஆனாலும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, 5 வருஷத்துக்கு மேல் நீண்ட கால லீசுக்கோ விட முடியாது.. மைனரின் சொத்தை சட்ட கட்டுப்பாட்டை மீறி விற்றால் அதை மைனர் நினைத்தால் ரத்து செய்யலாம்.
. மைனரின் சொத்தை மைனருக்காக நல்ல காரணத்துக்காக விற்க வேண்டி இருந்தால், அந்த சொத்து இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி இல்லை என்றால் அப்பீல் போகலாம். அப்பீலிலும் அனுமதி கொடுக்கவில்லை என்றால் விற்க முடியாது.அனுமதி கொடுத்தால் விற்கலாம்.. பூர்வீக சொத்தில் அதில் உள்ள மைனரின் பங்கு சொத்தை மைனரின் கார்டியன் விற்கலாம். அடமானம் செய்யலாம். கோர்ட் உத்தரவு பெற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டு குடும்ப உரிமை சொத்தில் கோர்ட் தலையிடாது.

 

நீதிமன்ற அனுமதியை பெறாமல் மைனரின் சொத்தை , தந்தை கார்டியனாக இருந்து விற்று இருந்தால் அந்த கிரையத்தை அந்த மைனர் 18 வயது முடிந்து மேஜர் வயதை அடைந்தவுடன் 21 வயதுக்குள் அந்த கிரயம் செல்லாது என மனு செய்து தீர்ப்பும் வாங்கலாம்.மைனரின் நன்மைக்காக மைனர் சொத்து விற்கபட வில்லை என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் அந்த கிரைய பத்திரம் செல்லாது.
மைனர் தனது மைனர் சொத்தை மீட்க வேண்டும் என்றால் தான் மேஜர் ஆகி 18 வயதாகி 3 வருடத்திற்குள் 21 வயதுக்குள் வழக்கு போட வேண்டும். அதற்கு அடுத்து வழக்கு போட வாய்ப்பு இல்லை. பல மைனர்கள் இருந்து அவர்கள் எல்லாரும் கார்டியனின் மைனர் சொத்தின் கிரயத்தை ரத்து செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் கூட்டாக வழக்கு போட வேண்டும். இதில் மூத்த மைனருக்கு 21 வயது ஆகிவிட்டு இருந்தால் வழக்கு போட முடியாது. இளைய மைனருக்கு 21 வயது முடியவில்லை என்றால் அவர் தனியே தன் பாகத்திற்கு போடாலாம்.ஆனால் சொத்து கூட்டு குடும்ப சொத்தாக இருந்து, மூத்த மைனர் 21 வயது ஆகி, இளைய மைனர் 21 வயது ஆகவில்லை என்றாலும் அனைவருமே வழக்கு போடும் உரிமையை இழந்து விடுவார்கள். கூட்டு குடும்ப சொத்தில் மூத்தவரின் உரிமை பறிபோனால் கூடவே இளையவரின் உரிமையும் பறிபோய் விடும்.

error: Content is protected !!