உங்கள் குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரவேண்டுமா? பொல்லாப்பிள்ளையாரை வணங்குங்கள்.

குழந்தைகளுக்கு நன்றாக படிக்க பாடவேண்டிய பதிகம்

சிவபெருமான் ஆலயங்களில் இன்று தேவாரம் ஒலிக்கின்றது  என்றால் அதற்கு காரணம்  நம்பியாண்டார் நம்பிகளே. சைவ சமய பெரியவர்களில் ஒருவரான இவருக்கு சிறுவயதில்  பொல்லாப் பிள்ளையார்  காட்சி அளித்து, அருளிய ஸ்தலமாக விளங்குவது திருநாரையூர் விநாயகர் ஆலயம் ஆகும்.
அந்த வரலாறும் அவர் பதிகமும் உங்கள் பார்வைக்காக,
விடிவதற்கு இன்னும் சிறு பொழுது தான் இருக்கின்றது . நாளும் தவறாது முப்போதும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் தம் திருமேனி தீண்டி பூஜா கைங்கர்யங்களைச் செய்து வரும் சிவநேசச் செல்வர் நம்பியாண்டார் நம்பிகளின் தந்தையார் ஆவார்.அன்று ஒருநாள் வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் தனது மகனை பூஜை செய்ய சொல்கிறார். நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம்!. அப்பா  நான் மந்திரங்களை எல்லாம் சரியா சொல்லி பூஜை செஞ்சிடுவேன் அப்பா!.. மகனின் மொழி கேட்டு தந்தைக்கு நிம்மதியாயிற்று. உச்சி பொழுதிற்குள் வந்து விடுவதாக – அந்த விடியற்காலைப் பொழுதில் அடுத்திருந்த ஊருக்குப் புறப்பட்டார். திருநாரையூர் திருக்கோயில் நம்பி இதோ இருக்கிறது பிரசாதமெல்லாம், அப்பா மாதிரி கவனமாக பூஜை செய்யணும்.. என்று அவருடைய அம்மா சொன்னார்கள்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.”
“கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.”

இப்படி பல மந்திரங்களை,தோத்திரங்களைச் சொல்லியபடி குளிர்ந்த நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்தார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் காப்பு செய்து திரவியப் பொடியாலும் மஞ்சள் பொடியாலும்  நீராட்டினார்.
பக்தி சிரத்தையுடன்  திருநீறு சாற்றி சந்தனம் குங்குமம் அணிவித்தார் பூமாலையை சூட்டினார் பூச்சரங்களைத் திருமேனியில் சாற்றினான். திருவிளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரிகளைத் தூண்டி விட்டார். சந்நிதி ஒளிமயமாக இருந்தது கண்டு நம்பிக்கு ஏக சந்தோஷம்.

ஓம் ஸுமுகாய நம:

ஓம் தூம கேதவே நம:

ஓம் ஏக தந்தாய நம:

ஓம் கணாத்யக்ஷாய நம:  

ஓம் கபிலாய நம:

ஓம் பாலசந்த்ராய நம:

ஓம் கஜகர்ணாய நம:

ஓம் கஜானனாய நம: 

ஓம் லம்போதராய  நம:

ஓம் வக்ரதுண்டாய  நம:

ஓம் விகடாய  நம:

ஓம் சூர்ப்ப கர்ணாய  நம:

ஓம் விக்னராஜாய  நம:

ஓம் ஹேரம்பாய  நம:

ஓம் கணாதிபாய  நம:

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தேங்காயை உடைத்தார் பிரசாதங்களை வெல்லம், பழங்கள், தாம்பூலம் இவற்றுடன் நிவேதனம் செய்து தீர்த்தம் கொடுத்து – தூப தீப ஆராதனைகளைச் சமர்ப்பித்தார் நம்பி.ஏன் இன்னும் பிள்ளையார் சாப்பிடவில்லை பிஞ்சு மனம் பேதலித்தது.
அம்மா அன்புடன் செய்து கொடுத்த நைவேத்தியம் தானே இது!.. இத்தனை நாள் தந்தையின் கையினால் நிவேத்யம் சாப்பிட்ட பிள்ளையார் இன்று ஏன் இன்னும் வரவில்லை, மனம் குழம்பினார்.பெருமானை சாப்பிடும்படி வேண்டினார். நேரம் தான் ஆனது. பிள்ளையார் வந்து சாப்பிடக் காணோம். கண்கள் பெருக்கெடுத்தன. தான் ஏதோ தவறு செய்து விட்டதால்தான் – தான் படைத்த உணவை பிள்ளையார் ஏற்க மறுக்கிறார் என்று எண்ணினார் நம்பி. வேதனை அதிகமானது. இத்தனை நாழி ஆகியும் நீ வந்து சாப்பிடலைன்னா என்ன அர்த்தம்?.. பகவான் வந்து பிரசாதமெல்லாம் சாப்பிட்டுட்டார்ன்னு அப்பா சொன்னது பொய்யா?.. இத்தனை நாள் அப்பா செஞ்ச பூஜைக்குப் பழி ஆகி விட்டதே, என்னால கெட்ட பெயர் வந்து விட்டதே, நீ சாப்பிடாத பட்சணங்களோட ஆத்துக்குப் போனா அடிப்பாளே!.. ஆத்துக்குப் போய் அடி வாங்கறதை விட – இங்கேயே உன் காலடியிலேயே முட்டிக்கிறேன்!.. – என்றபடி கல்லில் முட்டிக் கொண்டார்.

அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல்   ஐங்கரனின் மனம் இளகியது. தன் திருவடிகளில் முட்டிக் கொண்ட நம்பியைத் தம் திருக்கரத்தால் தாங்கிக் கொண்டார். நம்பி பொறு!.. – எனக் கூறியபடி நிவேத்யங்களை அனுக்கிரகித்தார்துதிக்கையை வலஞ்சுழித்த வண்ணம் வள்ளல் பெருமான் உண்பதைக் கண்ட நம்பி தன்னையே மறந்தார்.மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினார் நம்பி. தாய் ஆவலுடன் கேட்டாள். நம்பி!.. நிவேத்ய பாத்ரம் இங்கே இருக்கின்றது. நிவேத்யம் எல்லாம் எங்கேயடா?நிவேத்ய பட்சணமா!.. அதான் பிள்ளையார் வந்து தின்னுட்டாரே!.. என்னது பிள்ளையார் வந்து தின்னுட்டாரா?. மயக்கம் வந்தது அந்தத் தாய்க்கு!. என்னடா.. சொல்றே!.. கோயில்ல எதையாச்சும் பார்த்து பயந்துட்டாயா?..விஷயத்தைத் தாயிடம் சொன்னார். அவளால் நம்ப முடியவில்லை. தன் அன்பு மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றே அஞ்சினாள். உச்சி வெயிலில் அரக்கப் பரக்க வந்த அனந்தேச குருக்கள் – மகனின் பூஜா விதானத்தைக் கேட்டு அயர்ந்து விட்டார்.

மகனின் காதைப் பிடித்து இழுத்து செல்லமாக முதுகில் தட்டினார். பிள்ளையாரைப் பூஜிக்கிறவா பொய் சொல்லப்படாது!.. எங்கே மறுபடி சரியாச் சொல்லு!..  நிவேத்ய பட்சணமெல்லாம் எங்கே?.. கீழே போட்டு விட்டாயா?…இல்லை.. அப்பா!. நான் பொய் சொல்லலை!.. ஸ்வாமி வந்து இன்னும் சாப்பிடலயேன்னு நான் அழுதேனா!. அப்ப பிள்ளையார் வந்து – நம்பி அழாதேடா.. அப்படின்னு சொல்லிட்டு பட்சணம் எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டார்!.. – என்றான்.தந்தைக்கும் தாய்க்கும் தலை சுற்றியது. தினந்தோறும் நைவேத்தியத்தைக் கோயிலில் விநியோகம் செய்து விட்டு பிரசாதம் கேட்கும் பிள்ளையிடம், பிள்ளையார் சாப்பிட்டு விட்டார் என்று சொன்னேனே!.. அதை அப்படியே மனதில் வைத்துக் கொண்டானோ!.. ஸ்வாமியாவது வந்து சாப்பிடுவதாவது!..- தவித்தார் குருக்கள்.

அதற்குள்ளாக  குருக்கள் மகனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று ஊர் திரண்டு வந்து விட்டது. ஒருவழியாக இரவாகி பொழுதும் விடிந்தது. குருக்கள் ஒரு முடிவெடுத்தார்.திருநாரையூர் கணபதி அதன்படி மறுநாள் காலையில் மீண்டும் – நம்பியின் கைகளில் நிவேத்ய பட்சணங்கள் கொடுக்கப்பட்டன. துள்ளிக் கொண்டு செல்லும் செல்லப் பிள்ளையைப் பின் தொடர்ந்தனர் பெற்றோர். குருக்கள் மகனுக்கு உண்மையில் என்ன ஆயிற்று எனத் தெரிந்து கொளும் ஆவலுடன் ஊரும் பின் தொடர்ந்தது.கோயிலைத் திறந்து சந்தோஷமாக அபிஷேக ஆராதனைகளைச் செய்தார் நம்பி. சந்நிதிக்குத் திரையிட்டான். சாம்பிராணி வாசம் எங்கும் கமழ்ந்தது. தேங்காய் உடைபடும் சத்தம் கேட்டது. கண கண என மணியோசையும் கேட்டது. சற்று நிசப்தம்!.. ஆவலுடன் பிள்ளையாரை வரவேற்கும் நம்பியின் குரல் கேட்டது.
ஊரும் உறவும் ஆவலுடன் ஒளிந்திருந்து நோக்குவதைக் கண்டு நகைத்த விநாயகப் பெருமான் – ஒரு கணம் அனைவருக்கும் தரிசனம் தந்து மறைந்தார்.தன் பிள்ளை சமர்ப்பித்த நிவேத்யத்தை தலைப்பிள்ளை உண்டு மகிழ்வதைக் கண்டு பெற்ற மனம் குளிர்ந்தது. மகனைக் கட்டியணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர் தாயும் தந்தையும்.
அற்புதம் நிகழ்ந்ததைக் கண்ட மக்கள் ஆரவாரித்தனர். அகமகிழ்ந்து கொண்டாடினர். நம்பியின் அன்புக்கு இரங்கிய விநாயகப் பெருமான் – சகல கலைகளையும் நம்பிக்குப் பிரசாதித்தார். விநாயகரைப் போற்றி இரட்டை மணிமாலை பாடினார். மேலும் பல ஞானப் பனுவல்களையும் இயற்றினார். நம்பியும் – நம்பியாண்டார் நம்பி என புகழப்பட்டார். நாளடைவில் விஷயம் நாடாண்ட வேந்தனுக்குச் சென்றது. ஒருகணம் திகைத்த மன்னவன் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கூத்தாடினர். திருச்சிற்றம்பலமுடைய சிவபெருமானுக்கு தக்ஷிண மேரு எழுப்பிய சிவபாத சேகரன் – ஸ்ரீராஜராஜ சோழ மாமன்னன்!.. வண்டி வண்டியாக – பழங்களையும் பல்வகையான பட்சணங்களையும் பொன் மணி முத்து என சீர்வரிசைகளையும் ஏற்றிக் கொண்டு தஞ்சையில் இருந்து திருநாரையூருக்கு வந்தார்.

நம்பியாண்டார் நம்பியைப் பணிந்த மும்முடிச் சோழ வேந்தன்  பிள்ளையாரை வணங்கி நின்றான். பெருமான் திருவமுது செய்தருளல் வேண்டும்!.. – மன்னன் வேண்டிக் கொண்டான். பிள்ளையார் பெருங்கருணையுடன் அனுக்கிரகித்து அருளினார்.மாமன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மனம் நிறைந்து நின்றான். ஐயனே!.. என் ஆவல் ஒன்றினை நிறைவேற்றித் தருதல் வேண்டும்!.. சக்ரவர்த்தியின் விண்ணப்பம் பெருமானின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.மன்னனின் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்த விநாயகப்பெருமான். நீ தேடி வந்த திருமுறைச் சுவடிகள் – தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் தென் மேற்கு மண்டபத்தில் கிடைக்கும்!.. –  என திருவாக்கு அருளினார். 

திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப்பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் பற்றிய செய்திகளைத் தேடி வந்த மன்னனுக்கு நல்லருள் புரிந்தவர் நாரையூர் பிள்ளையார். பின்னும் – தில்லைத் திருக்கோயிலின் உள்ளே  தென்மேற்கு மண்டபத்தில் எந்த அறையில் என்று தெரியாமல் திகைத்தபோது மீண்டும் விநாயகர் அடையாளம் காட்டியருளினார். இன்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் மேற்கு பிரகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி விளங்குகின்றது.அதற்குப் பிறகு பலவாறு போராடி – பூட்டிக் கிடந்த அறைக்குள் செல்லரித்துக் கிடந்த ஏடுகளைக் கண்ணீருடன் சேகரித்த இராஜராஜ சோழன், திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றைத்  திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான்.இன்று நாம் பாடி மகிழும் தேவாரத் திருப்பதிகங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமானவர் –  திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார். தவறு செய்த கந்தர்வன் நாரை வடிவம் பெற்று சாபம் தீர சிவபூஜை செய்த திருத்தலம் – திருநாரையூர். ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார். பொள்ளாப் பிள்ளையார் எனில் உளி கொண்டு செதுக்கப்படாத – சுயம்பு என்பது பொருள்.

ஆனால்  – நல்லது செய்த பிள்ளையாருக்கு நம்மால் ஆன காணிக்கை – என்று பொல்லாப் பிள்ளையார் என தவறாக திரித்துச் சொல்கின்றனர். ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் தொழுது வணங்கிய தலம்.  கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கூடிய திருக்கோயில். சுவாமி சந்நிதி மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுடன் – நம்பி, நாரை, இராஜராஜ சோழன் திருமேனி கொண்டு விளங்குகின்றனர்.பொள்ளாப் பிள்ளையார் மகாமண்டபத்தில் நம்பியாண்டார் நம்பியும், இராஜராஜ சோழனும் காட்சி தருகிறார்கள். கோயிலுக்கு அருகில் நம்பியாண்டார் நம்பி அவதரித்த இல்லம் இருந்த இடத்தில் நம்பியாண்டார் நம்பியின்  சந்நிதி விளங்குகின்றது.
தினசரி ஐந்து காலப் பூஜைகளுடன் – சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கிருத்திகை, கந்த சஷ்டி , பிரதோஷம், மகா சிவராத்திரி  முதலிய விசேஷங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 
திருநாரையூர் எனும் திருத்தலம், சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ளது.

பொல்லா பிள்ளையார்
பொல்லா பிள்ளையார்

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை பதிகம்

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் – புன்னை

அரசுமகிழ் சோலைவியன் நாரையூர் முக்கண்

அரசுமகிழ் அத்திமுகத்தான். 1
முகத்தாற் கரியன் என்றாலும் தனையே முயன்றவர்க்கு

மிகத்தான் வௌியன்  என்றே மெய்ம்மை உன்னும் விரும்படியார்

அகத்தான் திகழ் திருநாரையூர் அம்மான் பயந்த எம்மான்

உகத்தானவன்  தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே.2
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே

வம்பனைய மாங்கனியை நாரையூர் – நம்பனையே

தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கையாய் என்நோய்

பின்னவலம் செய்வதெனோ பேசு. 3
பேசத் தகாதெனப் பேயெருதும் பெருச்சாளியும்  என்றே ஏசத்தரும்படி ஏறுவதே எமையாத முக்கட்

கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்    இந்தத்தேசத்தவர்    தொழும்   நாரைப்பதியுள் சிவக்களிறே. 4
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்

ஒளிறும் உருக்கொண்டதென்னே – அளறுதொறும்

பின்நாரையூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்

மன்நாரையூரான் மகன். 5
 மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்

சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு

முகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்

அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே. 6
மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்

பொருப்பைஅடி போற்றத் துணிந்தால் -நெருப்பை

அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை

வருந்த எண்ணுகின்ற மலம். 7
 மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்

புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்

சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே

வலஞ்செய்து கொண்ட மதக்களிறே உன்னை வாழ்த்துவனே. 8
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்

தனஞ்சாயலைத்தருவான் அன்றோ – இனஞ்சாயத்தே நரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்

நாரையூர் நம்பர்மகனாம். 9
 நாரணன் முன்  பணிந்தேத்தநின்று எல்லை நடாவிய அத்தேரணவும்    திருநாரையூர் மன்னு சிவன்மகனே

காரணனே எம்கணபதியே நற்கரிவதனா

ஆரண நுண்பொருளே என்பவர்க்கில்லை அல்லல்களே. 10
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்

எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் – நெல்லல்களை,

செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்   சேய்

கொங்கெழுதார் ஐங்கரத்தகோ. 11
 கோவிற் கொடிய நமன்தமர் கூடாவகை விடுவன்

காவிற்திகழ்  தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை

மேவற்கரிய இருமதத்து ஒற்றை மருப்பின் முக்கண்

ஏவிற் புருவத்திமையவள் தான்பெற்ற யானையையே. 12  
1 யானேத்திய வெண்பா என்னை நினைந்தடிமை

தானே சனார்த்தனற்கு நல்கினான் – தேனே

தொடுத்த பொழில் நாரையூர்ச் சூலம் வலன்   ஏந்தி

எடுத்த மதமுகத்த ஏறு. 13
 ஏறிய சீர் வீரணக்குடி ஏந்திழைக்கும்    இருந்தேன்

நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்

சீறிய வெம்பணைச் சிங்கத்தினுக்கு இளையானை விண்ணோர்

வேறியல்பால்     தொழு நாரைப்பதியுள் விநாயகனே. 14

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்

மன  மருவினான   பயந்த வாய்ந்த – சினமருவு

கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன்று என்றார்க்கு

மாசாரமோ சொல்லுவான். 15

வானிற் பிறந்த மதி தவ ழும்பொழில் மாட்டளிசூழ்

தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்

கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்

மானிற் பிறந்த களிறென் றுரைப்பர்  இவ்வையகத்தே. 16
வையகத்தார் ஏத்த மதில்நாரையூர் மகிழ்ந்து 

பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து – கையகத்தோர்

மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழுமல்   குவித்தான்

ஆங்கனி நஞ்சிந்தை அமர்வான். 17
 அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த

குமரா குமரர்க்கு முன்னவனே கொடித் தேர்அவுணர்

தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றினனே எனநின்றமரா மனத்தவர் ஆழ்நரகத்தில் அழுந்துவரே. 18
அவமதியாதுள்ளமே அல்லலற நல்ல

தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் – நவமதியாம்

கொம்பன் விநாயன்   கொங்கார் பொழில்சூழ் நாரையூர்

நம்பன் சிறுவன்சீர் நாம். 19
 நாந்தன மாமனம் ஏத்துகண்டாய்    என்றும் நாண்மலரால்

தாந்தனமாக இருந்தனன் நாரைப்பதி தன்னுளே

சேர்ந்தனனே ஐந்து செங்கையனே நின்திரள்  மருப்பை

ஏந்தினனே என்னை ஆண்டவனே எனக்கு என் ஐயனே. 20
ஆக இந்த பதிகத்தினை யார் மனது ஒன்றி படிக்கின்றார்களோ அவர்கள் குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும்  மிக சிறப்பான கல்வி அறிவினை விநாயகப் பெருமான் கட்டாயம் அவர்களுக்கு வழங்குவார்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

http://www.chennaivathu.com

http://www.chennaivastu.com