இன்ஜினியரின் வாஸ்து

Flooring vastu

நேசமான உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

உங்கள் தலைவிதி
மாறவேண்டுமா?

தலைவிதி என்பது ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கட்டம் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று மக்களால் நம்பப்படுகிறது .ஆனால் என்னைப் பொறுத்தவரை அது கட்டிடங்களால் தான் நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வேன்.

உங்கள் இல்லத்தில் தரைதளம் உங்கள் தலைவிதியை மாற்ற கூடிய தன்மையுடையது எப்படி என்று சொன்னால் வீட்டை அனைத்துவிதமான வாஸ்து அமைப்பில் வடிவமைத்து கட்டிடம் அமைத்தாலும், இல்லத்தின் உட்புறப் பகுதியில் இருக்கக்கூடிய தரைத்தள அமைப்பு என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு அமைக்க வேண்டும். நிறைய இடங்களில் தரைத்தளத்தை உயர்த்தியோ மேல் தளத்தை தாழ்த்தியோ அமைக்கும் பொழுது அங்கு எக்கோ என்று சொல்லக்கூடிய ஒலி ஏற்படுத்தும் இடங்களாக மாறி விடுகிறது.

அதாவது தரைத்தளத்தில் வீட்டின் வெளிப்பகுதியை விட ஒன்றே கால் அடி உயரம் இருப்பது போல அமைக்க வேண்டும். உள்தரை தளங்கள் ஒரே சம அளவில் இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் தென்மேற்கு உயரஅமைப்பில் இருக்கலாம்.

இந்த இடத்தில் மிக அதிகமான மக்கள் தவறு செய்யக் கூடிய விஷயம் என்னவென்று சொன்னால், கழிவறையின் தரைத் தளத்தை உயர்த்தி விடுவார்கள் .அல்லது மேல்தளத்தை உயர்த்தி விடுவார்கள்.அடுத்ததாக தரைத்தளத்தில் பிரம்ம ஸ்தானத்தில் பள்ளம் உண்டாக்கி செடிகள் வைப்பார்கள்.

ஒரு அறைக்குள் இருக்கும் கழிவறை உயரங்கள் வட மேற்கு சார்ந்த வாஸ்து குற்றத்தை செய்யும் விதமாக, ஒலிபெருக்கி போல செயல்பட ஆரம்பிக்கும். அதாவது ஸ்பீக்கர் என்று சொன்னாலே ஒலியை பெருக்கக் கூடிய ஒரு கருவி. ஆக வடமேற்கு தவறுகளை ஒலிபோல அதிகப்படுத்தி துன்பத்தைக் கொடுக்கக் கூடிய தன்மைக்கு ஒரு இல்லத்தில் உள்ளே இருக்கக்கூடிய தரைத்தளங்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

அதேபோல மாடிவீட்டு கழிவறையின் தரைத் தளம் அந்த வீட்டின் தென்மேற்கு தென்கிழக்கு பகுதியை விட வடமேற்குப் பகுதியில் உயரமாக இருக்கக் கூடாது. ஆக இதனை வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் அமைத்தீர்கள் என்றால், இந்த சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்க்கையின் தலைவிதியை மாற்றி எழுதி விடும். மீண்டும் நல்ல கருத்துக்களோடு சந்திப்போம்.நன்றி வணக்கம்.

இன்ஜினியரின் வாஸ்து
இன்ஜினியரின் வாஸ்து
error: Content is protected !!