நனவாகும் கனவு இல்லம் : 3

building foundation
building foundation

 தரை கான்கிரீட் (flooring concrete.)

முன்பு எழுதிய கட்டுரையில் மேடை மண் கொட்டி அது நன்றாக அமுங்கிய(consolidate) பிறகு 3  இன்ச் கணத்தில் மணல் நிரப்பி அதன் மேலே ஒன்றரை ஜல்லி கலந்து கான்கிரீட் போட வேண்டும். இதன் கான்கிரீட் உயரம் 4 இன்ஞ் கனத்தில் இருத்தல்  வேண்டும். கான்கிரீட் கலவையானது 1:4:8 அளவில் இருக்க வேண்டும்.இந்த இடத்தில் வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை ஏனென்றால், இங்கு வாயில் வைக்க இடங்களை  விட வேண்டும்,அதனால் அங்கு தவறுகள் நடக்காமல் இருக்க அவசியம் வாஸ்து நிபுணர் ஆலோசனை தேவை.

மேல் கட்டுமானம்(super structure)

அடுத்தவேலை என்பது நிலமட்டத்திற்கு மேல்உள்ள பேஸ்மென்ட் மட்டத்திற்கு மேல் உள்ள வேலைகள் அனைத்தும்,மேல் கட்டுமானம் என்போம். இதன் கட்டுமானம் செங்கல் கொண்டு செய்வது ஆகும். 9 இன்ச் செங்கல் கொண்டு, 1:6 கலவை விகிதத்தில் கட்டப்படுவது ஆகும். இது பேஸ்மெண்டில் இருந்து  இரண்டரை  அடிகள் இருக்க வேண்டும். இதற்கு பிறகு ஜன்னல் வைப்பது நடக்கும். இந்த இடத்தில் வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியம் ஆகும்.ஏனென்றால் எவ்வளவு இடைவெளி கதவுக்கும்,ஜன்னலுக்கும் மற்றும் ஜன்னலில் மேற்கு தெற்கு சுவர்கள் எவ்வளவு இடைவெளி வேண்டும் என்பது கட்டாயமாக வைக்க ஒரு வாஸ்து நிபுணர் துணையுடன் செய்ய வேண்டும்.

இதற்கு பிறகு ஜன்னல் இடங்கள் முடிவு செய்த பிறகு இரண்டு அங்குல உயரத்தில் sill level beam போட வேண்டும். அதிகப்பட்சமாகப்பதற்கும்,வேலைபளு இல்லாது இருக்கவும் பக்கத்தில் ஒரு அடி அகலத்தில் மட்டுமே அடி மிதி அமைப்பில் அதாவது bearing அமைப்பாக 6 இன்ச் கம்பி கொண்டு 6 இன்ச் இடைவேளையில்

ரயில் தண்டவாள டைப்பாக கம்பி கட்டி கான்கிரீட் போடுவார்கள். அதன் கலவை 1:2:4 அளவில் இருக்கும். இதற்கு முக்கால் ஜல்லி உபயோகப்படுத்துவார்கள்.இந்த பீம் ஜன்னல் ஓரங்களில் வெடிப்புகள்

building foundation vastu
building foundation vastu

மற்றும் விரிசல் வராது தடுக்கும். ஜன்னல் கீழ் வரும் வெடிப்புக்கு இந்த பீம் போடாததே காரணம் ஆகும். இதன்பிறகு கட்டிடம் ஏழு அடி மட்டம் வரை தொடர்ந்து கட்டி முடிக்க வேண்டும்.மீண்டும் அடுத்த பதிவினில் தொடர்ந்து பார்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)