Floods,வீட்டின் சுற்றுப்புற வாஸ்து

இடத்தின் சுற்றுப்புற வாஸ்து

இடத்தின் சுற்றுப்புற வாஸ்து

 

 

 

 

 

 

 

வாஸ்து படி ஒரு இடத்தை ஒருவர் தேர்ந்தெடுக்கும் போது சில முக்கிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தின் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் தவறுகள் வாங்க கூடிய மனைக்கு குற்றமாக இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனித்த பிறகே வாங்குவது நல்லது.

அந்தவகையில் தெருக்குத்து மற்றும் பள்ளங்கள் மற்றும் மேடுகள் எங்கே இருக்கிறது என்பது மிகவும் முக்கியம் ஆகும். ஆகவே தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். தெருக்குத்து இரண்டு வகைப்படும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து

நல்ல தெருக்குத்து எனும்போது கீழ்க்கண்ட தெருகுத்துக்கள் நன்மை தரக்கூடியது ஆகும்.வடகிழக்கு வடக்கு தெருக்குத்து.
வடகிழக்கு கிழக்கு தெருக்குத்து.
#வடமேற்கு மேற்கு தெருக்குத்து.
தென்கிழக்கு தெற்கு தெருக்குத்து

நன்மை தராத தவறான தெருக்குத்து எனும்போது கீழ் கண்ட தெருக்குத்துக்கள் தவறானது ஆகும்.வடமேற்கு வடக்கு தெருக்குத்து.
தென்கிழக்கு கிழக்கு தெருக்குத்து.
தென்மேற்கு #தெற்கு தெருக்குத்து.
தென்மேற்கு #மேற்கு தெருக்குத்து.

தெருக்குத்து மற்றும் தொருப்பார்வை, விஷயங்களில் ஒரு நல்ல திறமைவாய்ந்த வாஸ்து நிபுணர் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறப்பு.
ஒரு நல்ல தெருக்குத்து நம்மை பலமடங்கு உயரத்துக்கு கொண்டு போய் விடும். அதே போல தவறான தெருக்குத்து மனிதர்களின் நடவடிக்கை சார்ந்த வகையிலோ உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ இளம்வயதில் திடீர் உயிரிழப்பு சார்ந்த அகால மரணத்தை நொடிப்பொழுதில் கொடுத்து விடும். மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகளை கொடுத்து விடும்.

தவறான தெருக்குத்துக்கு பரிகாரமாக #பிள்ளையார் வைப்பது வேல் குத்தி வைப்பது மற்றும் #பிரமீடு தகடு போன்ற #பரிகாரங்கள் பயன்படுத்துவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.முடிந்தால் வாஸ்து நிபுணர்கள் துணைகொண்டு வாஸ்து வழிக்கு கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விற்பனை செய்து விடவேண்டும்.

error: Content is protected !!