சுற்றுபுறங்களில் இடம் வாங்குதல்.

சுற்றுபுறங்களில் இடம் வாங்குதல்.(enviromental-area-of-the-house)

சுற்றுபுறங்களில்

ttp://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/20374504_1559049147491122_7194056428638289432_n.jpg

இடம் வாங்குதல்.
தம்முடைய வீட்டிற்கு அருகில் குறைந்த விலைக்கு இடம் வருகிறது என்று இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு நாம் அந்த இடத்தினை வாங்கக்கூடாது. எக்காரணம் கொண்டும்,ஒரு இடத்தின் தெற்கு மேற்கு புறங்களில் உள்ள இடங்களை ஆராய்ச்சி செய்துகூட வாங்க வேண்டாம்.
ஆனால் நமது இடத்திற்கு வடக்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இடங்களை தாராளமாக வாங்கலாம். ஆனால் அங்கு உள்ள சாலைகளை அனுசரித்து ஒரு வாஸ்து நிபுணர் துணை கொண்டே வாங்குவது சாலச்சிறந்தது.
வடக்குபுறம் இருக்கும் இடங்களை நாம் எப்படி இருந்தால் வாங்கலாம்?
அதாவது வடக்கு தெற்கு சாலையில் நமது வீடு கிழக்கு வாயில் அமைப்பில் இருக்கின்றது என்றால்,நம்முடைய இடத்திற்கு ஈசான தெருப்பார்வையோ தெரு தாக்கங்களோ இருக்கின்றது என்றால்,புதிய வடக்கு புறம் இடம் வாங்கினால் இது மொத்த இடத்திற்கு தவறான அமைப்பாகி விடும்.
அதேபோல மேற்கு வாயு தெரு பார்வை இருந்து வடக்கில் இடம் வாங்க நேரிடும் போது,அது நைருதி தெரு பார்வையாக மாறி மொத்த இடத்திற்கு தீய தாக்கங்களை ஏற்படுத்தும்.
அதே போல வடக்கில் மேடாக இருந்து அதனை நாம் எடுக்க முடியாத சூல்நிலை இருப்பின் அப்படிபட்ட இடங்களையும் நாம் வாங்கக்கூடாது.
அப்பொழுது வடக்கு தெற்கு சாலை உள்ள நமது இடத்திற்கு ஒட்டியுள்ள இடங்களை எப்படி இருந்தால் வாங்கலாம்?
நமது இடத்திற்கு எதிர் புறம் வடக்கு தெருபார்வையோ தெரு தாக்கமோ இருந்தால் கட்டாயமாக கிழக்கு புற இடங்களை வாங்க கூடாது.
அதேபோல தெற்கு புறமாக நமது இடத்திற்கு எதிர்புறம் சாலை வந்தாலும் அது சரியாக உள்ள குத்தலா என்று பார்த்து வாங்க வேண்டும்.
நம்முடைய இடத்திற்கோ அல்லது வாங்கும் எதிர்புற இடத்திற்கோ வடக்கில் மேற்குபுறத்தில் சாலை வந்தாலும் இடம் வாங்கக்கூடாது.
எதிர்புறங்களில் எந்த சாலைகளும் வரவில்லையெனில் தாராளமாக வாங்கலாம். இந்த விதி பெரிய பரந்து இருக்கின்ற மொத்தக் காலிஇடங்களுக்கும் பொறுந்தும்.
பெரிய அளவில் பல ஏக்கர் அளவில் இருக்கின்ற விவசாய நிலங்களுக்கும் இது பொறுந்தும்.ஆனால் விவசாய நிலங்களை பொறுத்தவரை ஒரு நல்ல வாஸ்து நிபுணர் ஆலோசனை கொண்டு தெற்கு மேற்கு இடங்களை வாங்கினால் நல்லது.
இந்த இடத்தினில் ஒரு சூட்சுமமான விசயம் சொல்கின்றேன். வாழ்க்கையில் ஒரு பெரிய தொழிற்சாலையை அமைத்து வாழ்வில் பணத்தினால் உயர்ந்த இடத்திற்கு சென்றுள்ள ஒவ்வொரு பெரிய மனிதர்களின் வாழ்விலும், அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறான இடத்தினை,விற்றோ,அல்லது நல்ல இடத்தினை வாங்கிய பிறகே அவர்கள் பணத்திலும்,அந்தஸ்திலும் பெரிய மனிதர்களாக உயந்து உள்ளனர்.இது 100% உண்மை ஆகும்.அது என்ன ரகசியம் என்று தெரிந்த வாஸ்து நிபுணர் துணைகொண்டு செய்யவும்.
ஆக இந்த இடத்தினில்,உங்களுக்கு அடிப்படை வாஸ்து தெரிந்தாலும் கூட ஒரு பெரிய இடங்கள் வாங்கும் போதோ விற்கும் போதோ ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணை கொண்டு செய்யுங்கள்.

Leave a Comment