நமது பிள்ளைகளுக்கு கண்டம் என்று ஜோதிடர்கள் சொல்லி உள்ளார்களா?

எனது கோயில் ஆராய்ச்சி பயணத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கணபதி

இறைவன்: கணபதீசுரர்

இறைவி    :திருக்குழல் நாயகியம்மை

தீர்த்தம்      :சக்தி,சூரிய தீர்த்தங்கள்

தல விருட்சம் :ஆத்தி மரம்

பதிகம்:   அப்பர்,சம்பந்தர்.

  குறைக்கொண்டார் இடர்தீர்த்தல்
கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கரைக்கண்டன் பிறைச்சென்னிக்
கணபதீச்சரமேய
சிறுதொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.

தல சிறப்பு:
கணபதி வழிபாட்டின் தொடக்கம் இந்த ஆலயமே.பரஞ்சோதி பெருமான் போருக்கு சென்ற போது வாதாபியில் இருந்து கணபதி பெருமானை கொண்டு வந்தார்.வெற்றியின் அடையாளமாக கணபதி பெருமான் இங்கு இருக்கின்றார்.அதனால் தான் வினாயகர் ஆலயம் வைக்கும் போது எங்காவது இருந்து எடுத்து வந்து வைத்தால் சிறப்பாக இருக்கும் என்கின்ற ஐதீகம் வந்தது.
விநாயகரால் சம்காரம் செய்யப்பட்ட கஜமுகாசூரனின் ரத்தம் செங்குருதியாக ஓடியது அதனால் இந்த ஆலயம் செங்காட்டங்குடி என்று அழைக்கப்படுகிறது..

சிறுதொண்டரே பரஞ்சோதி பெருமான் ஆவார். தான் வாழும் காலத்தில் சோழப்படையில் தளபதியாக இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு படையில் இருந்து விலகி சிவபெருமான் மீது அன்பு கொண்டு அவரின் மிகசிறந்த பக்தராக மாறி, தினமும் சிவனடியார்களுக்கு அன்னம்பாளிப்பு கொடுத்த பிறகே தான் உணவு எடுத்து வந்தார்கள்.
பரஞ்சோதியாரும் அவருடைய இல்லத்தாளும் ஆன மங்கைநல்லாலும்,

அப்படி இருக்கின்ற போது இவர்களின் அன்பைக்கண்டு சிவபெருமான் இவர்களை ஆட்கொள்ளவேண்டி கபாலிக வேடம் கொண்டு வருகை புரிந்து நான் வடக்கில் இருந்து வருபவன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு எடுப்பேன் அதுவும் பசு மாமிசம் மட்டுமே எடுப்பேன் என்றார்.அதுவும் நரபசு மாமிசம் தான் வேண்டும்  5 வயது நர மாமிசம் தான் வேண்டும்என்றார். அவர்களும் சம்மதித்து அவர்களுடைய மகனை யாருக்கும் தெரியாமல் மனைவி மடியில் பிள்ளையை வைத்து பரஞ்சோதியார் தன் மகனை அறுத்து கறி செய்து உணவு அருந்த அழைக்க அவரோ நான் தனியாக அருந்த மாட்டேன்,மற்றொரு அடியார் வேண்டும் எனக்கூற உடனே பரஞ்சோதியார் நான் உங்களுடன் அமருகின்றேன் என்றார். கபாலிகரோ முடியாது.உன்மகன் சீராளன் எங்கே அவனை கூப்பிடு என்றார்.இவர்களோ அவன் இங்கு இல்லை இச்சமயம் வரமாட்டான் என்று சொல்ல,இல்லை வெளியில் போய் அழையுங்கள் உங்கள் மகன் வருவான் என்று சொல்ல,

இவர்களும் சென்று சீராளா என்று அழைக்க அவர்களின் மகன் அங்கு வர இவர்களும் வியந்து போய் வீட்டின் உள்ளே வந்து பார்க்க கறி உணவு மறைந்து ரிஷப வாகனத்தில் உமையம்மையுடன் காட்சி தந்து இவர்கள் அனைவரையும் ஆட்கொண்டார்.

   எனது கோயில் ஆராய்ச்சி பயணத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கணபதி ஆலயங்களின் பிள்ளையார்பட்டியைப்போல  சக்தி வாய்த்தவர் என்றுசொன்னால் இங்குள்ள விநாயக பெருமான் ஆவார்.

அதேபோல உங்கள் குழந்தைகளுக்கு கண்டம் என்று ஜோதிடர்கள் யாராவது சொல்லியிருந்தால், ஒருமுறை சென்று வாருங்கள்.  இங்குள்ள கணபதிசர பெருமான் அந்த தோசங்களை விளக்கிவிடுவார்.நான் வாஸ்து பார்க்க செல்லும் இடங்களில், குழந்தைகள் என்று சொல்லக்கூடிய வீட்டின் குழந்தைகளை குறிப்பிடக்கூடிய இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று  இருந்தால் உடனே அவர்கள் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஒருமுறை செங்காட்டங்குடி சென்றுவந்த பிறகு வீட்டில் மாற்றத்தை செய்யுங்கள் என்று சொல்லுவேன்.அப்படி அவர்கள் போய்விட்டு வந்தபிறகு நிறைய விசயங்களில் சில மாற்றங்களை உணர்திருக்கின்றனர்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment