குதிரையைப் போல மனிதன் ஓட முடியுமா?

குதிரையைப் போல மனிதன் ஓட முடியுமா?
chennai vasthu

ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள்.

குதிரையைப் போல ஓட முடியுமா? பறவையைப் போல பறக்க முடியுமா? யானையைப் போல மரங்களை சாய்க்க முடியுமா? சிங்கத்தைப் போன்ற பெரிய பற்கள் நம்மிடம் உள்ளதா? உறுதியான கொம்புகள் உள்ளதா? நீண்ட துதிக்கை உள்ளதா? இல்லையே!!

நம்மால் ஒரு நாயைக்கூட அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ கையினாலோ அடித்துவிட முடியுமா? அதற்குக்கூட ஒரு தடியின் துணை வேண்டுமே! மனித உடல் எத்தனை மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் கூட ஒரு காலணியின் துணை தேவைப்படுகிறது அவனுக்கு. இத்தனை பலவீனமான உடலைக் கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்? எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான். இந்த மனிதனின் பலம் எது? அதுதான் மனிதனின் சிந்தனை வளமே காரணம்.
நம்மில் அநேகருக்கு எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதை மனதில் இடையறாது நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதை சிந்தனை என தவறாக நினைக்கிறார்கள்.

இது போலவே இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சி, மனதுக்கு பிடித்த நிகழ்வு இவைகளை நினைத்து ஆனந்தக் கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!

கணிதத்திற்கு விடைகாண முயலும்போது, புதிர் கணக்குகளுக்கு விடை தேடும்போது, நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். ஆகவேதான் சிந்திக்க விரும்பாத அநேகருக்கு கணக்கு என்றால் பிணக்கு ஆகத் தெரிகிறது.

பிரச்சனைகளை அலசி ஆராய்தல், கணக்கிடல்,திட்டமிடல், புதிய வழி காணல், இவைகளே சிந்தனை எனப்படும்.

ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்க பழக வேண்டும்.அப்பொழுது அந்த சிந்தனையில் நமக்கு தீர்வு கிடைத்து விடும்.முயற்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment