நான் மிகப்பெரிய ஆள் என்ற எண்ணத்தில் எப்பொழுதும் இருக்கின்றிர்களா?

பெயர் சொல்லி அழைப்பது நிச்சயம் நெருக்கத்தை அதிகரிக்கும்.

நமது தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி நமக்கு வேண்டும் என்றால், நம்முடைய தொழில் சார்ந்த தொடர்பில் உள்ள நபர்களிடம் “”

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/1.j
chennaivasthu

என்ற தோரணையில் பழகாமல் அவர்களுடனான சந்திப்புகளை சரியாகப் பயன் படுத்தினால், எதிரில் உள்ள மனிதரே நமக்கு ஏணியாக இருந்துநமது அனைத்து விதமான செயல்களுக்கும் உதவிகரமாக இருப்பார்கள்.ஆக ஒவ்வொரு மனிதரையும் உங்களுக்கு உதவக்கூடியவராய் மாற்றுவது உங்களிடம்தான் இருக்கிறது.

ஒரு மனிதர்களை நாம் புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் ஆகலாம். ஆனால், சந்தித்த சில நொடி களிலேயே இதமான கை குலுக்கல், மிதமான புன்னகை, பக்குவமான வார்த்தைகள், உங்கள் மேல் நல்ல எண்ணத்தினை ஏற்படுத்தும். ஒருசில மக்கள் மற்றவர்களின் கவனத்தை கவர்வதாய் நினைத்து வெங்கலக்கடையில் யானை புகுந்தது போல அவர்களின் நடவடிக்கை இருக்கும். இது, மிகஅதிகமாகப் இருந்தால் அவர்களுக்குள் ஓர் சங்கடமான சூல்நிலையை ஏற்படுத்தும்.

உங்களுக்கும், நீங்கள் சந்திக்கும் மனிதருக்கும் ஏற்கனவே அறிமுகமான மற்றொரு நண்பர் இருப்பார். அந்த நண்பரை பற்றி பேசும்போது அவரைப்பற்றி நல்லகருத்துக்களை மட்டுமே பேசுங்கள். அதிக பழக்கம் அவருடன் உள்ளது என்று எதிரில் உள்ளவருக்கு தெரிவிக்கவேண்டும் என்று நினைத்து ”அவனா! அவனை அரை டிராயர் போட்ட நாளிலேயே தெரியும்” என்று அலட்சியமாய் ஆரம்பிக்காதீர்கள். சின்ன வயதில் எல்லாமே அரை டிராயர்தான் போடுவார்கள். மற்றவர்களை நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை வைத்துத் தான் உங்களைப் பற்றிய எண்ணங்கள் உருவாகும்.

ஒரு சந்திப்பை மேற்கொள்ளும்போது யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர் பேசும்போது வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். எதிரில் உள்ளவர் பேசும்போது இடை மறிக்காதீர்கள். குறுகிட்டு பேசுவது,அதிக கேள்விகள் கேட்பது, போன்ற விசயங்கள் உரையாடலின் தீவிரத்தைக் குறைப்பதுடன் உங்களைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தையே ஏற்படுத்தும்.

உங்களிடம் பேசுகின்ற நபர்களை பெயர் சொல்லி அழைப்பது நிச்சயம் நெருக்கத்தை அதிகரிக்கும்.அந்த பெயருடன் ஐயா என்றோ,சார் என்றோ, அல்லது அண்ணா என்றோ, மரியாதை வைத்து அழைத்தீர்கள் என்றால்,மிகப்பெரிய மதிப்பு உங்களுக்கு உருவாகும். நெருக்கத்தை உருவாக்கிக் கொள்வதாக நினைத்து சந்தித்த சில நிமிஷங்களிலேயே, என்ன பாஸ் என்றோ, தலைவரே என்றோ,சொல்வது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.அதுபோல வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள்.

ஒரு சந்திப்பில், பேச வந்த விஷயத்தைப் பேசி முடித்த பிறகு, பேச்சு பொதுவான விஷயங்கள் குறித்து திசை திரும்புவது இயற்கைதான். விடை பெறும் முன்பாக நினைவு படுத்திக் கொண்டு திரும்புங்கள்.

Leave a Comment