ஒரு படுக்கை (பண)அறை எந்த வகையில் சிறப்பு பெறும்?

chennai vastu
chennai vastu

நமது பூமி மிகப் பெரிய காந்த உருண்டை ஆகும்.இதற்கு வடக்கு திசை என்பது மேலேயும் தெற்கு திசை என்பது கீழேயும் உள்ள அமைப்பு ஆகும். இதனைத்தான் வடதுருவம் தென் துருவம் என்கின்றோம்.வடதுருவம் காந்த அதிர்வுகளை எந்த நேரமும் அனுப்பி கொண்டே இருக்கிறது. இது தென்துருவத்தினை நோக்கி எந்த நேரமும் வந்த வண்ணம் உள்ளது. அதனால் எக்காரணம் கொண்டும் வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது. காந்த தத்துவ விதிகளின் படி இரு காந்தங்கள் இணையாது இணைத்து வைப்பது என்பது தவறு இணைப்பது என்பது வடக்கு தலை வைப்பது ஆகும்.

பூமியின் அமைப்பைப் போல மனித உடலிலும் பூமியின் காந்த தன்மையின இரும்புச்சத்து உள்ளது. இதுவும் உடலின் வடதுருவம் என்று சொல்லக்கூடிய மூலையில் இருந்து அதிர்வுகள் எந்த நேரமும் நமது உடலின் பாதங்களை நோக்கி அனுப்பி கொண்டே இருக்கின்றது.

இதன் அமைப்பை கொண்டே தெற்கே தலை வைத்து படுப்பது மிகமிக நல்லது .வாஸ்து நிபுணர்களில் ஒருசிலர் கிழக்கு மேற்கு வைத்தால் சிறப்பு என்பார்கள் எனது ஆராய்ச்சி படி தெற்குதான் மிகவும் சிறப்பு.காந்த சக்தியின் முக்கிய விதி எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை யொன்று ஈர்க்கும். ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும்.

எந்த திசையில் படுக்கை அறை அமைத்தாலும் தெற்கே தலை வைத்து படுப்பது போல அமைப்பு என்பது சிறப்பு. முடியவில்லை என்றால் மட்டுமே மேற்கு கிழக்கு அமைத்து கொள்ளுங்கள்.

பீம் அல்லது  செல்ப் மற்றும் லாப்ட்  அமைப்போ இருந்தால் அதன் அடியில் படுக்க கூடாது.

படுக்கை அறையின் கதவு கழிவறை கதவு எதிர் இருக்கும் அமைப்பில் படுக்கும் கட்டில் போட்டு படுக்க கூடாது. கோணமான அமைப்பில் படுகாகையை போடக்கூடாது. இதற்கு தான் விதிசை மனைகளை சாலைகளுக்கு எடுதாது கொள்ளலாம் என்று வேறுவழியின்றி நானே சொன்னாலும் கூட தவிர்பது நல்லது.

தென் மேற்கு படுக்கை அறையில் அதிக நாட்கள் பெண்கள் தனியாக படுக்க கூடாது. அப்படி படுப்பது என்பது ஆண்கள் கூட இருக்க வேண்டும். அதே போல வடமேற்கு அறைகளில் பெண் துணை இல்லாமல் ஆண் அதிக நாட்கள் படுக்க கூடாது. அப்படி படுத்தால் அவர்களில் வாழ்வில் ஒரு கால கட்டத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும்.அந்த பாதிப்பு வடமேற்கு அறைகளுக்கு ஏற்படாத அமைப்பில் அமைக்கும் போது எந்த பாதிப்பும் இன்றி வாழ முடியும். ஆனால் தென் மேற்கு படுக்கை அறைகளை அப்படி பாதிப்பு இல்லாமல் அமைப்பது என்பது சிரமம்.இந்த கட்டுரையின் அனைத்து கருத்துக்களும் பண அறைகளுக்கும் பொறுந்தும் எனெனில் பணம் வைக்கும் பணப்பெட்டியும் தென்மேற்கு அறையில் உள்ளது தான்.