
வாஸ்து குழி கணக்கு சாஸ்திரம்
திருப்பூர் ,சோமனூர், கோயமுத்தூர் அன்னூர் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் எனது சொந்த ஊரான பெருந்துறை மற்றும் ஈரோடு பவானி குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில், ஆயத்த ஆடை தொழில் செய்யக்கூடிய நிறுவனங்கள் மற்றும் டெக்ஸ்டைல் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் இயங்குகின்றன. இதற்காக இந்தப்பகுதிகளில் வாஸ்து பார்ப்பதற்கு அதிகபடியான இந்த துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சென்றிருக்கின்றேன்.
அந்த நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு நிறுவனங்களின் செயல்திறன் எப்படி உள்ளது மற்றும், ஏன் இந்த நிறுவனம் இப்படி உள்ளது. ஏன் மற்ற நிறுவனம் மாறுபட்டுள்ளது என்ற ஆராய்ச்சியின் விளைவாக ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு மிகச்சிறப்பாக முறையில் வாஸ்து அமைப்பில் தவறாக உள்ளதை வாஸ்துவின் மூலமாக நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றேன்.
இதனை எப்படி சொல்லவேண்டும் என்றால் அவர்கள் தொழிலுக்கு சௌகரிய அமைப்பிலும், நமது #வாஸ்து_விதிகளின் அமைப்பிலும் இணைத்து அமைத்துள்ளேன். ஆக ஒரு வாஸ்து நிபுணர் என்பவர் வாஸ்து பார்க்க ஒரு இடத்திற்கு செல்லும் போது தனது வாஸ்து விதிகளை தொழில் செய்யும் இடங்களுக்கு பிரயோகிக்கக் கூடாது. அந்த தொழில் அமைப்பு தகுந்தாற் போல் வாஸ்து ஆலோசனை கூற வேண்டும்.
அவர்களின் தொழில் சார்ந்த விசயத்தில் எங்கே வாஸ்து ரீதியான தவறுகள் உள்ளனவோ அதனை மட்டுமே சரி செய்யும் போது நல்ல மாற்றத்தை அந்த நிறுவனம் பெற முடியும். அதே போல அந்த நிறுவன கட்டிடங்களையும், நமது பழந்தமிழர் கட்டிடக்கலை வாஸ்துவான ஆயாதி மனையடி பொருத்தம் உள்ளதாகவும் அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். அப்போது மட்டுமே அந்த நிறுவனம் சிறப்பாக இயங்கும்.
ஆக எக்கட்டிடமாக இருந்தாலும், அது வீடுகள் ஆகட்டும், தொழிற்சாலையின் கட்டிடங்கள் ஆகட்டும், எந்தவொரு விசயத்திலும் சோடை போகக்கூடாது என்றாலே,மனையடி வாஸ்துவின் சோடச பொருத்தங்கள் அவசியமாகும்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com