
ஆயாதி வாஸ்து
வாழ்வை வளமாக்கும் வாஸ்துவில் மிகப்பிரமாண்டமான வாழ்க்கை வாழ ஆயாதி வாஸ்து கணித முறை.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் இன்றைய வாஸ்துவில் அங்கமாக இருக்ககூடிய வடகிழக்கு மின்காந்த ஆற்றல் என்று சொல்லக்கூடிய பிரபஞ்ச ஆற்றலை மட்டுமே வாஸ்து என்று இருக்கின்றனர்.ஆனால் அதற்கும் அப்பார்ப்பட்டு மனையடி என்று சொல்லக்கூடிய ஒரு விசயம் உண்டு.
மனையடி என்று சொன்னால்,இன்று 16×10,17×11,22×16 இப்படி இருப்பது தான் மனையடி என்று சொல்லிவிடுகின்றனர்.இது தற்சமயம் 1920 ஆண்டுக்கு முன்பு சென்னை ரத்தின நாய்க்கர் &சன்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டு,வீராசாமி முதலியார் அவர்கள் பழந்தமிழ் பாடல்களில் இருந்ததை விளக்கமாக அவரால் இயற்றப்பட்ட பக்கம் 66 தொடங்கி 290 வரை எடுத்து கொள்வதை விடுத்து அந்த புத்தகத்தில்291 பக்கத்தில் வருவதை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.
இது தவறு என்பது எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த விசயம் ஆகும். இன்றைக்கு பார்க்கும் வடகிழக்கு மின்காந்த ஆற்றல் சார்ந்த விசயத்தை மட்டுமே பார்க்கும் வாஸ்து நிபுணர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். உலகின் மூத்தகுடியாக இருந்த நமது தமிழ் பெருங்குடி மக்கள் பயன்படுத்திவந்த தற்சமயம் இது நடைமுறைகளுக்கு ஆகாது என்று நவீன வாஸ்து நிபுணர்களால் கைவிடப்பட்ட விசயம் ஒன்று இருக்கிறது என்றால் வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு அங்கமான,மனையடி குழிக்கணக்கு, மற்றும் ஆயாதி கணிதம் கொண்டு இன்றைய நவீன வாஸ்துவையும் இணைத்து ஒரு வீடு உருவாக்கும் போது அதில் வசிக்கும் மக்கள் மிகச்சிறப்பான வாழ்வு வாழ முடியும்.
சில இடங்களில் இன்றைய நவீன வாஸ்துக்கு பொருந்தாமல் கொங்கு நாட்டின் பகுதிகளில்,வடகிழக்கு வெட்டப்பட்ட வீடுகள் தான் 70 சதவீதத்திற்கு மேல் இருக்கும். ஆனால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒருசில குறைகள் இருந்தாலும், ஆனாலும் ஒரு சிறப்பான வாழ்க்கை வாழும் மக்களை பார்த்து உள்ளேன்.இதேபோல நவீன வாஸ்துவிற்கு நன்றாக பொருந்தி இருந்தாலும்,கஷ்டப்படும் மக்களையும்,பார்த்திருக்கிறேன். ஆக இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து அவர்களுக்கு இன்றைய வாஸாதுவையும்,சரிசேய்து கொடுத்து. ஆயாதி கணிதமும் சரி செய்யும் போது சிறப்பான வாழ்க்கை வாழமுடியும். எப்படி பொருத்தம் பார்த்து ஒரு பெண்ணையும் பையனையும் இணைத்து திருமணம் செய்து வைக்கின்றோமோ அதுபோல ஒரு நிலத்தில் கட்டிடம் கட்ட அந்த நிலத்திற்கு பொருந்தும் அமைப்பில் அந்த வீடு 100ஆண்டுகள் கடந்து வாழகூடிய மற்றும் அனைத்து பாக்கியங்களும் அங்கு வசிப்பவர்களுக்கு கொடுக்கும்.
ஆயாதி
பொருத்த விபரங்கள் :16.
அவைகள் முறையே
1.கெற்பப் பொருத்தம்.
2.ஆதாய பொருத்தம் ஶ்ர.
3.செலவு பொருத்தம் (விரயம்)
4.யோனி பொருத்தம்.
5.நட்சத்திர பொருத்தம்.
6.வார பொருத்தம்.
7.அம்ச பொருத்தம்.
8.வம்ச பொருத்தம்.
9.திதி பொருத்தம்.
10.ராசி பொருத்தம்.
11.ஆயுள் பொருத்தம்.
12.பஞ்சபூத பொருத்தம்.
13.கணப் பொருத்தம்.
14.சூத்திர பொருத்தம்.
15.பார்வைப்பொருத்தம்.
16.கணப் பொருத்தம்.
இதில் பத்து பொருத்தம் பொருந்தி வந்தால் அந்த வீடும் அந்த வீட்டில் வசிப்பவர்களும் சிறப்பான வாழ்வு வாழ்வார்கள்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,
whatsapp no :
+91 9965021122.
E-mail:
jagan6666@gmail.com
www.chennaivathu.com
www.chennaivastu.com
