ஆயாதி கணிதம் மற்றும் குழி கணக்கு சாஸ்திரத்தை வாஸ்துவுடன் இணைத்த அற்புதமான கட்டுரை.

ayadi calculations
ayadi calculations
Ayadi calculation
Ayadi calculation
ayadi vastu
ayadi vastu

ஆயாதி கணிதம்

ஸ்பதிகள் காலம்காலமாக ஆயாதி கணிதங்களின் படியே கோயில் கட்டிடக்கலை அமைப்பு,சிறிய கிராமங்கள்,நகரங்கள், வீடு,மாளிகைகள்,அரண்மனைகளையும் கோட்டைகளையும், மாளிகைகளையும் அமைத்தனர் நமது பழந்தமிழர்கள்.

ஆயம் என்ற தமிழ் வார்த்தைக்கு வருத்தம்,மேகம்,34 அங்குல ஆழக்குழி,வருவாய்,கடமை,சூதாட்டம்,மக்கள் தொகுதிபசுத்திரள்,பொன்,நீளம்என்று பனிரண்டு வார்த்தைகள் பலவிதமான அர்த்தங்கள் உடைய சொற்கள் உண்டு.

ஆயாதிகள் மூன்று வகைப்படும்.

6பொருத்தம் உடையது ஷட ஆயாதி என்றும்,10பொருத்தங்கள் உள்ளது தச இயாதி என்றும், 16 பொருத்தங்கள் உடையது ஷோடச ஆயாதி என்றும்,சொல்லப்படுகிறது.

கோயில் மற்றும் வீடுகளுக்கு பூர்ண ஆயாதி வைத்து செய்வது சாலச்சிறந்தது.ஒரு கோயில் என்பது 1000 ஆண்டுகள் கடந்துகூட இருக்கும் விசயம் ஆகும்.அதுபோல இன்றைய நவீன காலகட்டத்தில் புதிதாக  கட்டும்  வீடுகளுக்கும்,தொழிற்சாலைகளுக்கும்,ஆயாதி கணக்கும் குழிக்கணக்கும்,பார்ப்பது சிறப்பு. 

தமிழர்கள் நாகரிகம் என்றாலே எங்கள் மன்னன் ராஜராஜ பெருவுடையாரும்,அவரது மகனும்,ஆன எங்கள் இளவரசன் கங்கை கொண்ட சோழபுரத்தை நிற்மானித்த ராஜேந்திர சோழன் அவர்கள் ஆண்ட காலத்தில்   நிலங்களை அளந்த கோலான உலகலந்தான் கோல் அளவு முறையான கிஷ்கு அளவு முறையிலும் அளக்கலாம்.இது பெரும் பரப்பளவான மிகப்பெரிய அரண்மனை மற்றும் ஆலயங்கள் மற்றும் நில அளவைக்கு பயன்படுத்தப்பட்டது இதன் அளவு என்பது இன்றைய காலகட்டத்தில் இரண்டு அடிகள் ஆகும். இதனை வீட்டிற்காக பார்க்கும் போது வீட்டின் நீள அகலங்களை பெருக்கி 8ஆல் வகுக்க கிடைப்பது. இது குழி கணக்கில் சேர்ந்து விடும்.

பூர்ண ஆயாதி:

இதற்கு முதலில் வீட்டின் சுற்றளவு அளவுகளை எடுத்து கூட்டிக்கொண்டு அது என்ன எண்ணிக்கை வருகிறதோ அதுவே ஆயாதி ஆகும்.

அதன் பொருத்தங்கள் 16.இதன் கீழ் உட்பிரிவுகள் உண்டு கீழே விவரித்து உள்ளேன்.

1.கெற்ப பலன்.

ஆயாதி எண்னை 8ல் வகுக்க மீதி வருவது கெற்பம். இதில்தி மீதி வராவிட்டால  வகுத்த எண்ணையே மீதமாக கொள்ள வேண்டும். எதனால் வகுக்கின்றோமோ அதன் எண்ணிக்கை என்னவோ அதன் எண்ணிக்கையில் பொருத்தங்கள் ஆகும்.

கெற்ப்ப பலன் 1,3,5,7 இவைகள் நல்ல பலன்கள் ஆகும் 2 மத்திம பலன்கள்.4,6,8அதம பலன்களை தரும்.இதன் பலன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருப்பது.நீண்ட ஆயுளுடன் வாழ்வது.

2.ஆதாய பலன்.

ஆயாதி எண்ணை8 ல் பெருக்கி 12 ல் வகுக்க மீதம் வருவது ஆதாயம் ஆகும்.இதில் பலன்கள் என்றால் 1முதல் 12வரை உத்தம பலன்களை கொடுக்கும்.எவ்வளவு உயர்ந்த எண்களாக உள்ளதோ அவ்வளவு அனைத்து விசயங்களிலும் தன்னிறைவு பெற்று இருப்பார்கள்.3.விரய பலன்

ஆயாதி எண்னை 9ல் பெருக்கி10 வகுக்க மீதி வருவது விரயம். இது வாழ்வில் பணம் சிர்ந்த விசயத்தில் தனது தேவையான செலவுகளுக்கு என்றும் காசு பஞ்சம் வராது.

1,2,3,4,5,6,7,10 ம் உத்தமம்.

8,9ம் அதமம்.

4.யோனி பொருத்தம்.

ஆயாதி எண்ணை 3 ல் பெருக்கி 8 ல் வகுக்க மீதி இருப்பது யோனி பொருத்தம் ஆகும்.

இதனை எட்டு திசைகளுக்கு உரிய விசயங்களாக  எடுத்துக்கொள்ளுங்கள்.

முறையே பொருத்தங்கள் 8

1.கருட யோனி.கிழக்கு இந்திர திசை பலன்.மிகுந்த செல்வம் சேரும்.

2 பூனை யோனி

அக்னி வருமை திருடர் பயம்

3.சிம்ம யோனி எம திசை

முகுந்தன் அருள் அவரின் வேல் என்றும் கூடவே இருக்கும்.அவரின் மனைவியர்களான இந்திரன் மகள் தேவ யானையும்,மகாலட்சமியின் மகளான வள்ளியம்மையும் என்றும் நீங்காது அந்த வீட்டில் வசிப்பார்கள்.

4.சுவான யோனி.

நைருதி நோய்களும் கலகமும் உண்டாகும்.முத்திரை காசுகள் பஞ்சம் ஏற்படும் .சொத்துக்கள் அரசாங்க கஜானவிற்கு சேரும்.ஆண்மக்கள் அதிகமாக இருந்து வீடு விளக்கேற்ற பெண்மக்கள் இல்லாது போய்விடும்.

5.சர்ப்ப யோனி .வருடதிசை சகல செல்வங்களும் சேரும்.நாட்டின் அனைத்து திசைகளிலும் இருந்து அரசாங்க முத்திரை காசுகள் கப்பம் வாங்குவது போல வந்து கொண்டே இருக்கும்.(இன்றைய அரசு ஒப்பந்த வேலை செய்வது.)

6.காக்கை யோனி

வாயுவம் காசு நிலையில் தட்டுப்பாடு என்றும் இருக்கும்.

7.கஜயோனி.குபேர திசை.

பணம் கருவுலம் போல இருக்கும்.ஊருக்கே தனம் உடைய மேலோன்.

8.கழுதை யோனி. ஈசானம்.

 என்றும் வறுமை நிலை.

கிழக்கு வீட்டிற்கு சர்ப்ப கெற்பம் மற்றும் அதன் யோனி வந்தால் பகை.

தெற்கு வீட்டிற்கு, கஜ கர்பம் அதன் யோனி வந்தால் பகை.

வடக்கு வீட்டிற்கு,சிம்ம கர்பம் அதன் யோனி பகை

மேற்கு வீட்டிற்கு கருட கர்பமோ அதன் யோனி வந்தால் பகை

நான்கு திசைகளிலும் பகை யோனி வராது பார்த்துக்கொண்டு செய்ய வேண்டும்.

6.நட்சத்திர பலன்.

ஆயாதி எண்ணை 8 ல் பெருக்கி 27 ல் வகுக்க மீதி வருவதே நட்சத்திர பலன் ஆகும்.

1.அசுவனி : வெற்றி

2.பரணி :வீட்டு தலைவன் மரணம்.

3.கார்த்திகை:அக்னி பயம் தற்கால நிலைப்படி வறுமை

4.ரோகிணி :சுகம்

5 .மிருகஷீரிசம்: எதிரி நாசம்.

6.திருவாதிரை:ஐஸ்வர்யம்.

7.புனர்பூசம் :புத்திரசெல்வம்.

8.பூசம் : நல்ல மக்கள் பேறு.

9 .ஆயில்யம் :கண்டம்

10.மகம் :பேய் பூதங்கள் வாசம்.

11.பூரம்.:தீயபலன்

12.உத்திரம் :நன்மை

13.அஸ்தம்:படிப்படி வளர்ச்சி.

14.சித்திரை:நன்மை

15.சுவாதி :மிகுந்த செல்வம்.

16.விசாகம் : சொதாது விரயம்

17.அனுசம் :சகல செல்வங்களும் பெறுகும்.

28.கேட்டை :தீய பலன்கள்.

19.மூலம் :தீமை தரும்.

20.பூராடம் :வீடு நிறைவு பெறாது.

21உத்திராடம் :ஆயுள் ஆரோக்கியம் பெறுகும்.

22.திருவோணம் : மிகுந்த நன்மை.

23.அவிட்டம்.: அமைதி வாழ்வு.

24.சதயம் :திருமகள் கடாட்சம்.

25.பூரட்டாதி :தீய பலன்.

26.உத்திரட்டாதி :மிகுந்த செல்வம்.

27.ரேவதி :என்றும் பாக்கியம்.

__________________________________

6.ஆயாதி வாரப்பலன்.

ஆயாதி எண்ணை 9 ல் பெருக்க 7 ல் வகுக்க மீதி வருவது வாரம்.

1 ஞாயிறு  : அரசு பயம்

2.திங்கள் :லட்சுமி கடாட்சம்.

3.செவ்வாய்; பொருள் விரயம்.

4.புதன்:மிகுந்த செல்வம்.

5.வியாலன்.:மக்கள் செல்வம் புகழ்.

6.வெள்ளி:சகல கிரய தடைகள் வராது.

7.காரி.:திருடர் பயம் .

7.அம்ச பலன்.:

ஆயாதி எண்ணை 4 ல் பெருக்கி 9 ல் வகுக்க மீதம் வருவது அம்சம்.

1.தஸ்கரா : மத்திபம்.

2.புத்தி : சுபம்

3.சக்தி : சுபம்

4.தான்யன் :சுபம்

5.நரன் :சுபம்.

6.கிளி :மத்திபம்.

7.நிர்பீதி :மத்திபம்

8.நிதனன்  : அதமம்.

9.பிரேஷ்யன் :சுபம்.

8.அம்ச பலன்.

ஆயாதி எண்ணை 9ல் பெருக்கி 4 ல் வகுக்க மீதி,

1.பிராமணர்:உணவு வளம் பெறுகும்.

2.ஷத்திரியர்:தனம் பெறுகும்.

3.வைசியர் :பொன் பெறுகும்.

4.சூத்திரர் : தொழில் பெறுகும்.

9.திதிப்பலன்.

ஆயாதி எண்ணை 9ல் பெருக்க 30 ல் வகுக்க மீதம் திதி

நல்ல பலன்கள் உள்ள திதிகள்.

2,3,5,7,10,11,12,13,14,15,17,18,20,22,25,26,27,28,29,

மற்றவை விலக்க வேண்டும்.

இந்த இடத்தில் நான் வளர்பிறை திதி பெயரான பிரதமை முதல்,30வது திதியான அமாவாசை வரை பெயரை குறிப்பிட வில்லை.எண்ணை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன் புரிந்து கொள்ளுங்கள்.

10.இராசி பலன்.

ஆயாதி எண்ணை 4 ல் பெருக்கி 12 ராசிகளில் வகுக்க மீதி வருவது இராசி பலன் ஆகும்.

நல்ல ராசியின் பலன்கள்

மேசம் முதல் மீனம் வரை,

1,2,3,4,5,6,9,11,12 

11. ஆயாதி வயது பலன்.

இது மிக முக்கியம்.

ஆயாதி எண்ணை 27ல் பெருக்கி 200 ல் வகுக்க மீதி வயது ஆகும்.

27 முதல் 50 வரை மத்திமம்,50க்கு மேல் 100 வரை உத்தமம்.

12 ஆயாதி பூதப்பலன்

1.நிலம் : புதாதிர விருத்தி

2.நீர் :காரியசித்தி.

3.நெருப்பு:அழிவு

4 காற்று: மரண கண்டம்.

5.ஆகாயம்.:சகல செல்வம்.

13.ஆயாதி குணப்பலன்.

ஆயாதி எண்ணை 3 ல் வகுக்க மீதி வருவதே குணம் 

1.தட்சிணாக்கினி : விபத்து

2.ஆசாவானீயாக்கினி : திருவருள், செல்வம்.

3.கிருகாபந்தியாக்கினி;நீண்ட ஆயுள்.

14.ஆயாதி சூஸ்திர பலன்:

ஆயாதி எண் 8 ல் பெருக்கி 27 ல் வகுக்க மீதி வருவது சூஸ்திரம்.

1 பாலன் :நன்மை

2குமரன் :மக்கட்பேறு.

3 .ராஜன் :செல்வம் பெறுகும்.

4.விருத்தன் :மத்திமம்.

5 மரணம் :அதமம்.

15.ஆயாதி நேத்ர பலன்

ஆயாதி எண்ணை ஆதி வாரத்தில் பெருக்கி 3 ல் வகுக்க மீதி அசுவினி முதல் 9 நட்சத்திரம் உள் வந்தால் நேத்திரம் 1,

அடுத்த 12 நட்சத்திரங்கள் வரை  வந்தால் நேத்திரம். 2.

16.கணப்பலன்.

வீடுகட்டும் நபருக்கும் கட்ட தொடங்கும் நாளும் ஒரே நட்சத்திர கணங்கள் சிறப்பு.

மனித கணம் தேவ கணம் .உத்தமம்.

மனிதகணம் ராஷ்சச ஙணம் வரலாம்.மறறவை ஆகா.

ஆயாதி கணிதம் நிறைவு.

பின் குறிப்பு;

 எனது விளக்கம் யாதெனில்,நாம் மனையடி அளவகளை தற்காலத்தில் நாங்கள் சொல்லும் வாஸ்து சாஸ்திரத்தில் எடுதது கொள்வது கிடையாது.ஆனாலும்நமது மக்கள் வேண்டும் என்றால் இந்த கணக்கையும் உபயோகித்து கொள்ளுங்கள்.என்பது தான் எமது எண்ணம் எக்காரணம் கொண்டு யாரையும் குழப்புவதற்காக சொல்லவில்லை.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

ayadi calculations
ayadi calculations