உங்கள் வீடு உண்மையான வாஸ்து படி இருக்க வேண்டுமா?

வாஸ்து ஈரோடு
வாஸ்து ஈரோடு

கரக்கோயில் கடிபொழிற் சூழ் ஞாழற் கோயில்

இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்

இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்,

திருக்கோயில் சிவன் உறையும் கோயில் 

என்று திருநாவுக்கரசு பெருமான் 1200  வருடங்களுக்கு முன்பே பாடியுள்ளார்.அப்படிப்பட்ட கட்டிடம் கட்டி வாழ்ந்த சமுதாயம் தமிழ் சமுகம்.

தென்குமரி நாடு என்று சொல்லுகின்ற ஆழிப்பேரலை கொண்டு கடல் கோளினால் மறைந்துவிட்ட நாட்டில் வாழ்ந்த தமிழ்மக்களே நமது தொன்மையான  முதன்மை குடிகள் ஆவார்.இதனாலேயே கல்தோன்றா மண்தோன்றா  காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என்று சொல்லுகின்றோம். இங்கு வாழ்ந்த மக்களை பின்பற்றியே வடக்கே சீன தேசம் வரையிலும்,மேற்கே அரபிகடலின் கரையோர நாடுகள் வரையிலும்  இந்த மக்களின் கலை மற்றும் நாகரிகத்தை பின்பற்றி வாழ்ந்து வந்தனர்.

நாட்டை ஆள்கின்ற ஆட்சியாளர்கள் அதாவது இன்றைய சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள். வியாபாரம் செய்கின்ற மக்கள் உங்கள் வாழ்வில் எந்த வித தொய்வான நடவடிக்கைகளும் உங்கள் வாழ்வில் நடைபெறக்கூடாது என்ற அடிப்படையில் இதனை சொல்கின்றேன்.இது முழுக்க முழுக்க எனது ஆராய்ச்சி சார்ந்த விசயம் ஆகும்.

ஏன் என்றால் ஏற்கனவே நான் வீடு கட்டி எனது அம்மா மரணம் அதற்கு பிறகு 2005_06 காலகட்டத்தில் கட்டிய வீட்டை விற்று விட்டு ஏன் மரணம் நிகழ்ந்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன்.இன்று வாஸ்து தொழில் முறையாக தமிழகம் முழுவதும், ஏன் மலேசியா ,இலங்கை, சிங்கப்பூர்,ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டாலும்,என்னை ஒருவிசயம் இரண்டு வருடங்களுக்கு முன்பு மனதில் தாக்கம் ஏற்படுத்தியது. நானே ஒரு பக்காவான வாஸ்து அமைப்பு உள்ள வீட்டில் இருந்தாலும்,எனக்கும் பலபிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தான் இருந்தேன்.    

இன்று இதற்காக எனக்கு சரியான சாஸ்திர அறிவு கிடைக்க வில்லையோ என்று முடிவு செய்து பல வாஸ்து வகுப்புகளுக்கும் எனது நிலையை தாழ்த்திக்கொண்டு சென்றேன்.ஆனால் எதிலும் தற்சமயம்  எனக்கு இருக்கும் பிரச்சனைக்கு விடை கிடைக்க வில்லை. இந்த இடத்தில் ஒரே ஒரு விசயத்தை நான் எனது இல்லத்தில் பிரயோகப்படுத்தினேன்.அதனால் இன்று மிகப்பிரமாண்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன்.முன்பு இன்றைய நவீன வாஸ்து மட்டுமே பார்த்து கொண்டு எனது இல்லத்தை அமைத்து கொண்டேன்.இந்த பிரச்சனைகளுக்கு பிறகு இன்று தமிழ்நாட்டில் யாருமே செய்யாத முதல்முறையாக நவீனவாஸ்துவாக இருக்கக்கூடிய, அதற்கு பிதாமகராக இருந்த  திருமதிப்பிற்குரிய திருப்பதிரெட்டிகாருவை   எனது மானசீக குருவாகவும்.எனது வாழ்நாளில் அவரை  நேரில்  அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியவன் என்கின்ற வகையிலும்,அவரின் வாஸ்து விதிமுறைகளை  எனக்கு எட்டிய அறிவின் படி அதனையும் சீர்படுத்தி அதாவது குரு என்பவர் ஒரு கோடுமட்டுமே போட்டுக் கொடுப்பார்கள்.அதனை சாலை அமைப்பது என்பது அவர்களின் கலை அறிவிற்கு தகுந்தாற்போல் அமையும். அதனை விரிவாக்கம் செய்து செயல் படுத்துவது என்பது அவரவர்கள் திறமை ஆகும்.

அந்த வகையில் தமிழர்களின் கட்டிடகலையின் காரணமாகவே இன்று திராவிட கட்டிடக்கலைக்கு சான்றாக 1000வருடங்களை கடந்து கோயில்கள் இருக்கின்றன.அதன் அமைப்பு சாஸ்திரத்தை நமது வீட்டில் பொறுத்திப்பார்த்து இன்றைய வாஸ்துவையும் இணைத்து ஒரு வீடுகட்டி வாழ்ந்தோம் என்றால்.மிக சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

அன்று வீடுகளுக்கு கற்களை பயன்படுத்தவில்லை.அதனால் அந்த அமைப்பு வீடுகள் இன்று அழிந்து விட்டது இருந்தது என்பதற்கும்,இன்றைய நவீன வாஸ்து சொல்லக்கூடிய சதுரம் செவ்வகம் என்பதும் அதில் உள்ளது.அதற்கு ஆதாரம் குஜராத்தில் உள்ள தோழவீரா மற்றும் நமது தமிழகத்தில் வைகைகரைபகுதிகள்.அதேபோல 1000 ஆண்டுகள் கடந்து இன்றும்இருக்கும்  நமது மன்னர் ராஐந்திரசோழர் வாழ்ந்த கங்கைகொண்ட சோழபுர அரண்மனை,வைகை கரைபாபகுதிகள், கீழடி மற்றும் ஈரோட்டில் நொய்யல் கரையோரம்.  திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி கரைபோர பகுதிகள் அதற்கு சான்றுகளாக உள்ளன.இதற்காக நான் லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து சுற்றிப்பார்த்தேன்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் முதன்முதலில் ஐயா திருப்பதி ரெட்டி அவர்களின் குருவாக இருந்த மூத்ரகடா ராமாராவ் அவர்கள் தென் இந்தியாவிற்கு வட இந்திய வாஸ்து கலைகளை தான் இன்று தமிழகம் முழுவதும்,தொலைக்காட்சி மூலமாக, பத்திரிக்கைள் மூலமாக மிகப்பிரபலமாக இருக்கும் வாஸ்து நிபுணர்கள்  பிரபலமில்லாது ஒரு ஊரில் மட்டுமே வாஸ்து பார்த்து கொண்டிருக்கும் வாஸ்து நிபுணர்கள்  ஆக அனைத்து வாஸ்து நிபுணர்களும் இதனைத்தான் கடைபிடிக்கின்றனர்.அப்படியே ஒருவருக்கொருவர் காப்பியாக,

இந்த இடத்தில் நான் முதன்முறையாக  இன்றைய வாஸ்துவையும் ,எடுத்துக்கொண்டு காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று இன்றைய வாஸ்துநிபுணர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்,நமது முப்பாட்டன்கள் உபயோகித்து வந்த தமிழர்களின் கட்டிடக்கலையுடன் இணைந்த  கணிதமான வாஸ்து மனையடி குழிகணக்கு மற்றும் ஆயாதி கணிதத்தையும் இணைத்து பார்த்து வருகிறேன்.

எனது வளர்ச்சி சிலருக்கு வருத்தத்தை அளக்கும் அளவில் இருந்து இருக்கலாம்.இதற்கு காரணம் நவின வாஸ்து அமைப்பில்அமைக்கும் போது 40சதவீத அளவில் ஆயாதி கணிதம் மற்றும் குழி கணக்கு பொறுந்தி வராது.அப்படி பொறுந்தி வராத மக்கள் இன்றைய வாஸ்து அமைப்பில் வீடு கட்டும் போது கஷ்டத்தை அனுபவித்துதான் ஆக வேண்டும்.இது மாறாது. இந்த இடத்தில் நான் நின்று அவர்களுக்கு சேவை செய்த காரணமாக இன்று நான் நிற்பதற்கு நேரம் இல்லாது சுற்றிக்கொண்டு இருக்கின்றேன்.இதனை யாராவது மூட நம்பிக்கை முட்டாள் தனம் ஏமாற்று வேலை என்று சொன்னால் அவர்கள் இந்த கலையை முழுமையாக ஆராய்ச்சி செய்யாமல் பேசுகின்றார்கள் என்பதுதான் உண்மை.மற்றொரு விசயம் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். எங்கள் கொங்கு நாட்டில் 80சதவீத வீடுகள் போர்ட்டிக்கோ போடப்பட்டு வடகிழக்கு கட் செய்து தான் கட்டியுள்ளனர். இது நமது வாஸ்து விதிகளுக்கு தவறாக இருந்தாலும், அப்படிப்பட்ட வீட்டில் வசிக்கும் மக்கள் எல்லோருமே பாதிக்கப்பட்ட நிலையில் இல்லை. இதற்கு காரணம் ஆயாதி மனையடி சாஸ்திர குழிக்கணக்கு பொறுந்தி இருத்தலே ஆகும்.இது அவர்களின் நேரம் சம்பந்தப்பட்ட விசயம் ஆகும்.

அதற்காக தற்கால நடப்பில் சொல்லுகின்ற வாஸ்து வேலை செய்ய வில்லை என்று சொல்லவில்லை.இரவில் பயணப்படுவதற்கு வாகனத்தில் விளக்கு வேண்டும். அதுபோல செயல்படுகிறது நமது தமிழர்களான முப்பாட்டன்களின் ஆயாதி வாஸ்து.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,கொங்குமண்டலமான கோவை , திருப்பூர் , ஈரோடு, கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பலருக்கு சிறந்த வாஸ்து ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

வாஸ்து ஈரோடு
வாஸ்து ஈரோடு,vastu erode