ponnar shankar arukkani gods

கொங்கு மக்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் உள்ளதா? தீர்வு வேண்டுமா?

ponnar shankar arukkani gods
ponnar shankar arukkani gods

அண்ணன்மார் கதையும் கொங்குமக்கள் வாழ்வியலும்,

குன்றுடையார் கதை,என்றும், அண்ணன்மார் சாமி கதை என்றும் கொங்கு நாட்டில் அழைக்கப்படும். பொன்னர்சங்கர்,அருக்காணி  தங்கத்தின் கதை , ஓர் இன மக்களின் இடப் பெயர்ச்சியையும், அவர்கள் கொங்கு நாட்டிற்கு வந்து ஆதிக்கம் பெற்று இன்று தமிழ் நாட்டில் பொருளாதாரத்தில் வளர்ந்த இனமாக இருக்கிறது. இன்றைய அரசாங்கம் இவர்களை பிற்படுத்தப்பட்ட இனத்தில் இவர்களின் சமுதாய தலைவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் சேர்த்து இருந்தாலும்.இவர்கள் பிரிட்டிஷ் அரசு அவர்களுடைய ஆராய்ச்சி விசயத்தில் அவர்கள் அளித்துவிட்டு சென்ற பட்டியலின்படி ஒரு கோனார் சமுதாயம் போல,வைசியாள் போல,பிராமணர்களை போல,சைவபிள்ளைமார்களை போல, இவர்களும் முற்படுத்தபட்ட இனம் தான்.ஆயிரம் வருடங்களுக்கு மேல் சோழர் காலத்திற்கு முன்பு வரை இருக்கும் வழி ஆகும், இன்றைய அரசாங்கம் நம் சமுதாய மக்கள் மாற்றி வைக்கலாம்.உண்மை நிலை அது கிடையாது.

என்னுடைய வாஸ்து பயணத்தில் எனக்கு கிடைத்த குருவாக நண்பராக இருக்க கூடிய அன்பு   அண்ணன் திரு.ஆண்டாள் சொக்க லிங்கம் அவர்கள் சொன்ன விசயமாக இதை சொல்வேன்.  தமிழ்நாட்டில் ஆளுகின்ற எந்த முதல்வர் வந்தாலும்,இழப்போடு அவர்களின் வாழ்வு இருக்க வேண்டும். அல்லது ஆண்டாள் கோயில் தொடர்பு இருக்க வேண்டும் ஏற்கனவே கூறியுள்ளார்கள்.

அந்தவகையில் தற்சமயம் முதல்வராக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய ,  நான் பிறந்த கண்ணர் குலத்தை சேர்ந்த மாண்புமிகு  எடப்பாடி பழனிசாமி  ஐயா அவர்கள் முதல்வராக ஆனதற்கு ஒரே காரணம் ஆண்டாள் மட்டுமே.

    எப்படி என்றால் எனது வாஸ்து பயணத்தில் கோயில் ஆராய்ச்சி செய்யும் போது முதலில் நமது கொங்கு சமுதாயம் பற்றி தெரிந்து கொண்டு நமது குலதெய்வங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். என்று ஆராய்ச்சிக்கு போகும் போது ஒரு விசயம் புலப்பட்டது.

எனது குலமான கண்ணர் குலத்தை முதலில் ஆராய்ச்சிக்காக எடுத்து கொண்டேன்.இவர்கள் எதற்காக இந்த பெயர் வைத்து  இருக்கின்றார்கள்  என்று  பார்க்கும் போது, 

கலியுக சகாப்தம் சசூசள ஆண்டு 4400 சாலவாகன சகாப்தம் 1316 கால் செல்லா நின்ற தமிழ் ஆண்டு ஈஸ்வர வருஷ வைகாசி மாதம் 18ந் தேதி ஆண்டாள் நாட்சியாருக்கு உரிய சுக்ரவாரம் பெரியாழ்வாருக்கு உரிய  நட்சத்திரமான சுவாதி அன்று  தென்திராவிட தேசம்  ஶ்ரீவில்லிபுத்தூரில் கன்னிவாடி கண்ணன்குலம் முத்துசாமி காமிண்டன் மகன் நல்லதம்பி காமிண்டன் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புலம் பெயர்ந்து கண்ணன் வாடி என்கின்ற ஒரு ஊரை நிர்மாணம் செய்து ஆண்டு வருகிறார்.அவர்களின் வழிகளே இன்று பல பெயர்களில் ஆலயங்களை அமைத்து இருக்கும் கடத்திலேயே காணி கோயில் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆண்டாள் பிறந்த ஶ்ரீவில்லிபுத்தூர் மண்ணில் இருந்து பெருமாளின் குலமாக கண்ணர் வழியில் வந்து ஆண்டாளை எங்கள் கண்ணகுலம் சகோதரியாக பெற்றதன் காரணமாகவே இந்த வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்களுக்கு ஆண்டாளின் பிச்சையாக எங்கள் கண்ண குலத்திற்கு கிடைத்தது .

 கொங்கு நாட்டு வேளாளரின் சமூகப் பண்பாடு, மற்ற இனத்தவர்களை ஆதரித்து சகோதர பாசத்துடன் வாழும் பண்பு அவர்களின் வெள்ளை உள்ளம், உண்மைக்காக  மட்டுமே உயிர் கொடுக்கும் செயல்கள்,காரள வம்சம் என்றாலே கரிக்குருவி தீண்டாது.வேளாளன் சொல் என்று  மட்டுமே என்று வாழ்பவன்.  எந்த இடத்திலும் சொன்ன சொல்லுக்காக உயிரைகூட உண்மைக்காக விடத் இருப்பவர்கள்,உண்மைக்காக நியாயமான வாழ்கைக்காக நட்பை கூட இழந்து வாழும் பண்பு எல்லாமே பொன்னர்சங்கர் அருக்காணி தங்கம் வழி வந்தது ஆகும்.
பொன்னுடையான் என்ற குன்னுடையா கவுண்டருக்கும், தாமரை நாட்சியாருக்கும்,  பிறந்தவர்களே பொன்னர். சங்கர் மற்றும் அருக்காணி தங்கம், மூவரும் வரத்தால் பிறந்தவர்கள் . மேலும் ஐந்து வயது நிரம்பி விபரம் பெறும் வரை அண்ணன்மார் இருவரையம் காளி தேவியரே வளர்த்தாரெனவும் சொல்லபடுகிறது. பாம்புக்கு பல்லில் விஷம், பங்காளிக்கு உடம்பெல்லாம் விஷம் என்பதுபோல் வேளாளர்கள் பங்காளிப் பகையை பரம்பரையாக கொண்டவர்கள் என்பர். இதனால் தாயார் தாமரை தான்பட்ட இன்னல்களையும் சபதங்களையும் நினைவுபடுத்தி பொன்னர் சங்கர்இருவரிடமும் கூற, அவர்கள் பங்காளிகளை பலிவாங்கி தாயை மகிழ்விக்கின்றனர். அத்துடன், பெற்றோரின் நிலபுலங்களை மீட்க சோழராஜனின் மேலை நாட்டை கைப்பற்றுவதாகவும்  இவர்களின் வரலாற்று கதை கூறுகிறது.
 பொன்னரும் சங்கரும் போருக்கு செல்லும் வேளையிலேயே, தாயும் தந்தையும் இறந்து விடுகின்றனர். இவர்களது இறப்பிற்கு பின்னரேயே திருமணம் செய்வதுடன்,  பொன்னரும் சங்கரும் சோழ ராஜா ஆதரவால் வளநாட்டுக்கு உரிமை பெற்ற காவலர்களாக இருக்கின்றனர். அருக்காணி எனப்படும் தங்கம் கிளி கேட்க, தங்கைக்காக அவர்கள் அன்னக்கிளி கொண்டு வர வீரமலை காட்டுக்கு போவதை,
“நாகமலை தோகை மலை
நாலுபக்க வீரமலைதொகு
வீரமலை நடுவினிலே…. எனத் தொடரும் பாடல்கள் புலப்படுத்துவதுடன், . இதனால் தலையூரை  தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்யும் காளி மன்னன் கோபமுற்று  நாட்டைத் தாக்கி குப்பாயி  என்கிற பெண்னுடன் பலபேர்களை    சி றையெடுத்துப் போகிறாள்.        பொன்னரும் சங்கரும் சாம்பானும் காளி மன்னனின் படையுடன் மோதி இறக்கின்றனர். 
    இச்செய்தி கேட்டு அரண்மனையில் தனியாய் வசித்தத் அருக்காணி தனது அன்னிமார்களை  அழைக்க, அவர்கள் மறுத்து வேறு  பட்டணம் போய் விடுகின்றனர். அரண்மனையில் தனியாக அருக்காணி தங்கம் ஒப்பாரி வைத்து அழுகிறாள். உயிர் பிச்சை கேட்டு புலம்பும் அவள் படுகளம் போய் புலம்புகிறாள். பொன்னர் சங்கர் இறந்த இடமே இன்றும்கூட படுகளம் எனப்படுகிறது. அங்கு அஸரிரி   ஒன்று  ஒலியாக  பொன்னர்சங்கர் மீது தண்ணீர் எடுத்தெளித்து பிரம்பால் தட்டுமாறு கூற, அருக்காணி தங்காள் அவ்வாறே செய்ய இறந்தவர்கள் உயிர்பெற்று தேவராகின்றனர்.

இதனால் தான் `கொங்குமலிந்தால் எங்குமலியும்’ என்ற பழமொழி கொண்ட அந்த கொங்கு மண்டலம் முழுதும் பரவியுள்ள கதைப்பாடல் வரிகளில், 

ஒக்கப் பிறக்கணுமா – அண்ணா
ஒரு முலைப் பால் உண்கணுமா
கூடப் பிறக்கணுமா? அண்ணா
கூட்டுப்பால் உண்கணுமா என்ற சகோதரப் புலம்பல்   இன்றும்    தொடர்வதை காண்கிறோம்.
இந்த வகையில் தான் கொங்கு மண்ணில் சகோதரி உறவு என்பது அவள் சாகும் வரை விடக்கூடாது.அப்பா அம்மா போன  காலத்திற்கு (இறைவனடி)பிறகு கூட பிறந்த உறவு என்பது கோடி துணி வரை வர வேண்டும்.என்பார்கள். இன்று இந்த சமுதாயம் தொழில் வகையில் வளர்ச்சி பெற்றதால் பெரிய அளவில் உறவுகள் என்பது மலிந்து விட்டது.இது இப்பொழுது இருக்கும் தலைமுறையும் அடுத்த தலைமுறையும் மாற வேண்டும்.இன்று பார்த்தீர்கள் என்றால் பணத்தினால் உறவுகள் கெட்டு போய் கிடக்கின்றது.இதற்கு காரணம் நிலங்களின் விலையேற்றம் காரணமாக நான்கு வழி சாலையை ஒட்டி உள்ள இடங்களில் விலையேற்றம் ஏற்பட்டு அண்ணன் தம்பி அக்கா தங்கைகளுக்கு இடையே கோர்ட் கேஸ் எனாறு சில இடங்களில் நடக்கிறது.ஆனால் அந்த காலத்தில் என்றைக்கும் நமது பெண்கள் சொத்துக்காக அப்பா வீட்டுக்கு வந்தது கிடையாது.தன்னுடைய  சகோதரன் கால சூல்நிலையின் காரணமாக   பொருளாதார   நிலையில்  கிழ்நிலைக்கு    சென்றால் கூட நாம்    சிதனம்  வாங்கும்  வீடு தானே என்று எண்ணாமல் கொடுத்து உதவிய பெண்கள் நம் கொங்கு பெண்கள் ஆவார்கள்.

      அரசாங்கம் சீதனம் என்ற அழகாக வார்த்தையை வரதட்சணை கொடுமை என்கின்றது. சீ என்றால் மகாலட்சுமி தனம் என்றால் பணம். ஆக நம்ம வீட்டு மகா லட்சுமிக்கு,கொடுக்கும் தனம் என்று பொருள்.கொங்கு சமுதாயம் பொன்னர் சங்கர் காலத்தில்  இருந்து உருவாக்கி வைத்துள்ள கொங்கு சமுதாய திருமண சட்டம் என்ன சொல்கின்றது என்றால், ஒரு பெண்ணை பெற்று வளர்த்து தமக்கு  சொத்து விசயத்தில் நிகராக உள்ள மணமகனை பார்த்து கட்டி கொடுத்து   (அதற்கு காரணம் நம்ம பெண்பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக) அவள் வாழ் நாள் முழுதும் சீர் செனத்தி கொடுத்து வாழ வைக்க வேண்டும் என்று சொல்கிறது.அதனால் தான் வருடத்திற்கு மூன்று நோம்புகளை விடாமல் கொண்டாடினர்.  (ஆடிநோம்மி,தை நோம்பி, பங்குனி நோம்பி)   பிறந்த இடத்திற்கு உடன்பிறந்த சகோதரிகள் வருவார்கள். ஆக கூடப்பிறந்த உறவுகளை எக்காரணம் கொண்டும்,எக்காலமும், உறவுகளை   பணத்தின்   காரணமாக  என்றும் விட வேண்டாம்.

உங்கள் கூடப்பிறந்த உறவுகளால் சிக்கல் உள்ளதா? அதற்கு ஒரே தீர்வு அருக்காணி தங்கத்தை வழிபாடு செய்யுங்கள்.அருக்காணி தங்கம் நாட்டார் தெய்வமாக இருந்தாலும்,கையில் கிளியுடனும்,வளையல்களை மற்றும் நீர் சொம்பு கையில் வைத்தும்,     நமக்கு அருளாசி வழங்கும் அமைப்பில் இருங்கின்றார்கள். ஆக கொங்கு நாட்டில் வசிப்பவர்களுக்கு  சகோதர,சகோதரி உறவில் பிரச்சினை, கொங்கு நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பண ரீதியான பிரச்சினை இருக்கிறது என்றால் ,அதற்கு  ஒரே தெய்வம் நம்முடைய குல விளக்காக இருக்ககூடிய தங்காயி என்று சொல்லக்கூடிய அருக்காணி தங்கத்தை வழிபாடு செய்யுங்கள்.

மீண்டும் ஒரு நல்ல தகவலுடன் சந்திக்கின்றேன்.நன்றி.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

error: Content is protected !!