
:
Vasthu for Tuplex House
நகர்புற பகுதிகளில் சில மக்கள் மிகப்பெரிய அமைப்பில் இல்லங்கள் அமைக்கின்றனர். அப்படி அமைக்கும் போது, இரட்டை நிலை கட்டிடங்களாக அமைக்கின்றனர். அப்படி அமைக்கின்ற அமைப்பு மிகச்சரியான இடத்தில் இரட்டை நிலை அமைப்பை அமைக்க வேண்டும். அந்த வகையில் இரட்டை நிலை கட்டிடங்கள் கட்டிடத்தின் வடகிழக்கு பகுதியில் வருவது என்பது மிக மிக ஆபத்து சார்ந்த விசயம் ஆகும். மிக முக்கியமாக தெற்கு சார்ந்த தென்மேற்கு, மேற்கு சார்ந்த தென்மேற்கு மட்டுமே இரட்டை நிலை கட்டிடங்களுக்கு சரியான அமைப்பு. மேற்கு மத்தியும், தெற்கு மத்தியும் இரண்டாம் தரமாக வைத்துக் கொள்ளலாம்.
அப்படி ஒரு அமைப்பு அமைப்பது மிக மிக தவறு. இது அந்த வீட்டின் எண்ணம், வாழ்க்கை சம்மந்தப்பட்ட விசயம். அந்த அமைப்பில் கட்டிடம் கட்டும் வல்லுநர்களோ, பொறியாளர்களோ, வரைபட கலைஞர்களோ அந்த தவறை செய்து மற்றவர்கள் வாழ்க்கையில் சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
அப்படி நாம் கட்டிடங்கள் அமைத்து தருவது கட்டிடம் கட்டக்கூடிய நபர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. இரட்டை மாடி கட்டிடங்கள் கட்டலாம். ஆனால் இரட்டை நிலை கட்டிடங்கள் மிக மிக எச்சரிக்கை உணர்வோடு அமைக்க வேண்டும். இந்த அமைப்பு என்பது தற்போது அரண்மனை அமைப்பில் வரக்கூடிய ஒன்று. அரண்மனையில் இப்பொழுது யார் வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை சென்று பாருங்கள், சென்று பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
மேலும் விபரங்களுக்கு 9965021122, 830021122