நம் இஷ்டத்திற்கு அதிஷ்டத்தை வரவழைப்பது எப்படி?

அதிர்ஷ்டம்!
நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?
அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்?

ஜாதகமா?
வாஸ்துவா?
அதிர்ஷ்ட எண்களா?
அதிர்ஷ்ட கற்களா?
அதிர்ஷ்டத்தின் மூலம் எங்கே?
அதை அடையும் வழி எங்கே?

ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது.

அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்?

ஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில் தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் என விரும்புகிறோம். அதையே அதிர்ஷ்டம் என போற்றுகிறோம்.
அதிர்ஷ்டம் யாருக்கும் வரலாம்! அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம்! ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும்.

சிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய பல வருடங்களாக, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட கண் விழித்திருந்து தங்களை தாங்களே தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?

போர்க்களத்தில் போரிடும்போது மாவீரன் நெப்போலியன் நெஞ்சில் சில குண்டுகள் பாய்ந்துவிட்டன. அவனின் நெஞ்சை கீறி அதிலுள்ள குண்டுகளை மருத்துவர் அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நெப்போலியன் கூறுகிறான். “டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக போய் என் இதயத்தை திறந்து பாருங்கள். அங்கே நான் காணும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தை நீங்களும் காணலாம்” என்றான்.
அவனது உள்ளத்தின் ஆழத்தில், அவனது ஆழ் மனதில், அவரது லட்சிய கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவனது சிகரம்.

ஜுலியஸ் சீசர் என்ற ஆங்கிலப் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாக நடித்தார். அப்போது அவருக்கு பல லட்சம் மதிப்புள்ள அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன.

அப்போது சிலர் படத்தின் இயக்குநரிடம் ஏன் இத்தனை நகைகள், இவைகள் படத்தில் தெரியவா போகிறது, படத்தில் அவைகளின் மதிப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு புரியவா போகிறது என்றார்களாம். அப்போது இயக்குநர் கூறுகிறார், பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மதிப்பு தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கிளியோபாட்ராவாக நடிக்கும் எலிசபெத் டெய்லருக்கு அதன் மதிப்பு தெரியுமல்லவா? அதன் மூலம் அந்த பாத்திரத்தின் மிகப்பெரிய மதிப்பு அவருக்கு புரியுமல்லவா? அப்படி கிளியோபாட்ராவின் அளவிலா பெருமையை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டால் அதற்கு ஏற்ப தன் நடிப்பை கம்பீரமாக வெளிப்படுத்துவார் அல்லவா? என்றாராம்.

நமது உடலின் செல்களில் உள்ள டி.என்.ஏ.யில் நம் உடல் அமைப்பைப் பற்றி வரை படம் உள்ளது. அது போல நமது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வரைபடம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பதிவுகளில் மாற்றம் செய்யும்போது அதற்கு ஏற்ப அவரவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன.

மேலும் விபரங்களுக்கு,
#vastu_consultant_in_tamilnadu,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
இதைப்படிக்கும் உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனதுநெஞ்சார்ந்த நன்றிகள்.

ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!