14th May 2021 zodiac horoscope Today | தினசரி ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள்:

14th:may 2021..

மேஷ ராசி:

மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய ராசிபலன் அடிப்படையில் பலன்களைப் பார்க்கும் பொழுது, இன்று கொஞ்சம் மறதி சார்ந்த நிகழ்வுகள் இருக்கும். ஆகவே நீங்கள் ஒரு நோட்ஸ் எடுப்பதும், ஒரு குறிப்புகளை எடுத்துக் கொள்வதும்  நல்லது.

ரிஷப ராசி:

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று பெரிய வேலைகள் இருந்தாலும், கொஞ்சம் தள்ளிப் போடுவது நல்லது. இன்று ஓய்வு எடுக்கும் நிகழ்வாக இருக்கும். உட்காரலாம் போலவும், படுத்துக்கொள்ளலாம் போலவும் இருக்கும்.

மிதுன ராசி:

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று ஏதாவது  ஏதாவது ஒரு பகுதியில் இருந்து நண்பர்கள் வருவார்கள்.ஏதாவது ஒருதிசையில்  இருந்து ஏதாவது ஒரு வேலை சார்ந்த இடத்திலிருந்து பாராட்டுக்கள் வரும்.

கடக ராசி:

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சோதனையை கொடுக்கக்கூடிய நாள் . ஆகவே உங்களுடைய பயணங்களில், உங்களுடைய அன்றாட இன்றைய நிகழ்வில், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

சிம்ம ராசி:

சிம்ம ராசி நேயர்களே இன்று ஒரு சாந்தமான அமைதியான பழக்கவழக்கத்தை இன்று மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யாராவது ஏதாவது சொன்னால் பெரிய வார்த்தைகளைப் பேச வேண்டாம்

கன்னி ராசி:

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு குழப்பமான மனநிலை இருக்கும். ஆகவே இன்று பெரிய அளவில் முயற்சிகளை எடுக்க வேண்டாம்.

துலாம் ராசி :துலாம் ராசி நேயர்களுக்கு இன்று  ஒரு சந்தோஷத்தை கொடுக்க கூடிய நாளாக இருக்கும். ஆகவே புதிய வேலைகளை செய்வதாக இருந்தால் இன்று கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு வெற்றியை கொடுக்கும் நாள். ஆகவே ஏதாவது புதிய விஷயங்களை தொடங்க , ஏதாவது பயணப்பட, யாரைவது சந்திக்க, இன்று முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வெற்றியை கொடுக்கும்.

தனுசு ராசி:

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு நலம் சார்ந்த, உடல் நிலை சார்ந்த, நிகழ்வுகள் நல்லதாக நடக்கும். மருத்துவமனைக்கு ஏதாவது செல்வதாக இருந்தால் இன்று செல்லுங்கள் நல்லது நடக்கும்.

மகர ராசி:

மகரராசி என்றாலே பொறுமையாக இருப்பார்கள். பொறுப்பாக இருப்பார்கள்.. அந்த வகையில் இன்று கொஞ்சம் கூடுதலாக பொறுமையாக இருங்கள். அதாவது இருக்கும் இடத்திலேயே, இன்று மட்டும் இருந்தால் நல்லது நடக்கும்.

கும்ப ராசி :

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஏதாவது புதிய பயணத்தை தொடங்குவதாக இருந்தால் தொடக்கி வையுங்கள்.. பயணம் வெற்றிக்குரிய பயணமாக இருக்கும்.

மீன ராசி மீன ராசி அன்பர்களே இன்று பூர்ண நன்மையை கொடுக்கும் நாளாக இருக்கும் இன்று நல்ல சிந்தனை நற்பண்பு நல்ல பழக்க வழக்கம் சார்ந்த ஒரு தொடக்க நிகழ்வு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்