சங்கு வைத்தியம் வாஸ்து கால்சியம்

சங்கு என்பது கடலில் வாழக்கூடிய ஒரு உயிரினத்தின் மண்டையோடு அதில் தண்ணீர்விட்டு அருந்தினாலும், அல்லது பால் அதில் வைத்து அருந்தினால் நம் உடலில் இருந்து நம்மை தடை செய்து கொண்டிருக்கும் எதிர்மறை சக்திகள் பறந்தோடிவிடும். சங்கின் ஒலி கேட்டால் பூதகணங்களே நடுங்கும். சங்கில் உள்ள சுண்ணாம்பு சத்துக்கள் இந்த வேலையைச் செய்கின்றன. அந்த வகையில் யார் ஒருவருக்கு கால்சியம் சத்து குறைவாக இருகாகிறதோ அவர்களுக்கு எதிர்மறை சக்திகளின் தாக்குதல் தொடங்குகிறது . ஆக அவர்களுக்கு கால்சியம் சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆக மருந்து பாதி மந்திரம் பாதி என்பதுபோல ஆவிகள் வந்து தொந்தரவு அடையும் மனிதர்களுக்கு சுடுகாட்டில் இருக்கும் பிரண்டையும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும் கொடுத்துவர இந்த எதிர்நிலையில் இருந்து விடுபடுவார்கள்.

வாஸ்து இரகசியம்;

பழைய வீடாக இருந்தால்,அவ்வில்லத்தில் ஒரு திருமணம் நடக்க இருக்கிறது என்றால் அந்த திருமண காலத்திற்கு முன்பு வாஸ்து அமைப்பில் இல்லத்தை மாற்றுவது நல்லது. ஏனெனில் ஒரு சில இல்லங்களில் திருமண தடைகளை கொடுப்பது என்பது இல்லத்தில் இருக்கும் வாஸ்து தவறுகளே. ஒரு மூன்று வருடங்களுக்கு மேலாக ஜாதகத்தை பொது இடங்களில் அதாவது திருமண பதிவு செய்யும் இடங்களில் கொடுத்து, மூன்று வருடங்களாக திருமணம் நடக்கவில்லை என்று சொன்னால் , அந்த இல்லத்தின் வாஸ்து சார்ந்த மாற்றங்களை செய்தால் திருமண தடை விலகும்.