ஹோட்டல் மற்றும் உணவங்களுக்கு வாஸ்து.

ஹோட்டல் மற்றும் உணவங்களுக்கு வாஸ்து.

வாஸ்துஎன்பது பூமியில் கட்டக்கூடிய அனைத்து விதமான கட்டிடங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சார்ந்த தொழிலுக்கும் வாஸ்து என்பது வேண்டும். சென்னை மற்றும் தமிழகத்தில் இருக்கும் ஒருசில உணவகங்கள் மட்டும் பிரபலமான அமைப்பில் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் வாஸ்து என்கிற கட்டிட அறிவியல் உட்புகுந்து விடும் .

ஒரு உணவு நிறுவனம் இருக்கிறது என்றால் அதன் உரிமையாளரின் இல்லத்தின் வாஸ்துஅமைப்பும், அந்த உணவகம் இருக்கும் இடத்தின் அமைப்பும், அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. தென் கிழக்கு , வடமேற்கு , ஆகிய பகுதிகளில் இருக்கும் தெருக்குத்துக்களும் ஒரு சில இடங்களில் இருக்கும் தவறான தென்மேற்கு தெருப்பார்வைகளும் மட்டுமே அந்த ஹோட்டல் மிக அதிகமாக பிரபலமடைகிறது.இதற்கு காரணம் அந்த உணவகம் சார்ந்த நிறுவனர் எதாவது இழப்பை சந்தித்து அந்த இடத்தில் வெற்றி பெறுவார்கள்.
எது எப்படியோ தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் பகுதியில் தரைத்தள நீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி மற்றும் சிறிய அளவிலான கிணறுகள் மற்றும் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் பள்ளங்கள் மற்றும் பெரிய கிணறு போன்றவை இல்லாது இருப்பது நலம்.

அதேபோல நெடுஞ்சாலை மற்றும், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புறங்களின் நகரின் சாலை பகுதிகளில், உணவகங்கள் அல்லது ஹோட்டல் போன்ற தொழிலை தொடங்கும் பொழுது அதிகபட்ச மக்கள் கிழக்கு பார்த்த கடைகளையும், வடக்கு பார்த்த கடைகளையும், மிக தவறான அமைப்பில் அமைத்து விடுவார்கள். ஒரு சில இடங்களில் இயற்கையாகவே அவர்களுடைய நேரத்தின் அடிப்படையில் நன்றாக இயங்கக்கூடிய அமைப்பில் உணவகங்கள் அமைந்துவிடும். ஆனால் எந்தவிதமான பரிகாரங்கள் இல்லாமல் ஒரு உணவகம் சார்ந்த தொழிலை நடத்த வேண்டும் என்று சொன்னால் அது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதே போல வடக்கு பார்த்த கிழக்கு பார்த்த உணவகங்களில் உணவகங்களை முன்பகுதியிலும் இல்லங்களை பின்பகுதியில் அமைத்து ஒரு மூடப்பட்ட அமைப்புள்ள இல்லங்களாக மாற்றி விடுவார்கள்.இதனால் உணவகங்களில் நல்ல வியாபாரம் ஆகும் ஆனால் உணவு திருட்டு நடந்து வருமானம் வீட்டிற்கு வந்து சேரக் கூடாத ஒரு நிலையை ஏற்படுத்திவிடும். ஆகவே ஒரு உணவகம் ஆரம்பிக்கிறார்கள் என்று சொன்னால் அதனை வாஸ்து நிபுணர் துணையோடு அமைப்பது சாலச் சிறந்தது.

Dailyhunt

error: Content is protected !!