வேலையில் கடந்த ஒரு வருடமாக பிரச்சனைகள்/வேலையை விட்டு சொந்தத் தொழில் செய்யலாமா ?

வாஸ்துஜோதிட ஆன்மீக ரகசியம்:

என்னை வாஸ்து ரீதியாக ஒரு நண்பர் அழைக்கின்றார். எனக்கு எனது வேலையில் கடந்த ஒரு வருடமாக பிரச்சனைகள் இருக்கிறது நான் இந்த வேலையை விட்டு சொந்தத் தொழில் செய்யலாமா ? இதற்கு வாஸ்து ரீதியாக நீங்கள் சொல்லக்கூடிய,மற்றும் ஜோதிடரீதியாக எனக்கு தீர்வு கொடுங்கள் என்று கேட்கின்றார்.

அந்தவகையில் எனது விளக்கம் என்பது ஒரு மனிதனுக்கு ஆறாம் பாவம் என்று சொல்லக்கூடிய வேலையை கொடுக்கும் பாவம்
2 4 6 10 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்போது நிச்சயமாக அவர் வேலையில் மட்டும் தான் இருப்பார்.ஆனால் சொந்த தொழில் செய்யவேண்டும் என்று சொன்னால் ஏழாம் பாவம் 2 4 6 10 பாவங்களை தொடர்பு கொள்ள வேண்டும் . ஜாதகத்தில் இந்த நிலை அவர் ஜாதகத்தில் அங்கு இல்லை என்று சொன்னால் மாற்று வழி வாஸ்துவின் ரீதியாக உள்ளதா?என்று பார்த்தால்,

அந்தவகையில் தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, பாதிக்காது இருந்து , வடக்கும் கிழக்கும் சாலைகள் செல்லும் மனையை எடுத்துக்கொண்டால் நீங்கள் தொழில் வழியில் நிச்சயம் ஜெயிக்கலாம்.அதற்கு அவரின் கர்மா ஒத்துழைப்பு நல்கி இடம் வாங்க வைக்க வேண்டும்.