vastu or northeast

வடகிழக்கில் வாஸ்து

vastu or northeast
vastu or northeast

வடகிழக்கில் வாஸ்து

ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு டைனிங், ஒரு மாஸ்டர் பெட்ரும். ஒரு சில்ட்ரன் ரும், அப்புறம் முக்கியமாக ஒரு போர்டிகோ. காரை நிறுத்த இடம் வேண்டும் அல்லவா?
800 சதுர அடியில் இவ்வளவையும் கட்ட முடியுமா என்று பெரும்பாலோர் யோசிப்பதில்லை. வங்கிக் கடனுக்கான டாக்குமெண்ட்டுகளை தயார் செய்வதிலேயே காலத்தைக் கழித்துவிடுவதால், கடைசி நேரத்தில் அவரசமாக ஒரு பிளானை ரெடி செய்து கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார்கள்,

 

வடகிழக்கு என்பது ஒரு வீட்டின் மனித தலையை பகுதியை போன்றது. தலை வெட்டப்பட்ட உடலுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதைதான் இது போன்ற இல்லங்களும்.
அந்த காலத்தில் வாஸ்து இருந்ததா என்று கேட்பவர்களைப் பார்த்து நாம் கேட்கும் ஒரே கேள்வி,
அந்த காலத்தில் வீட்டின் நுழை வாயிலில் ஈசானியம் வெட்டுப்பட்ட போர்டிகோ வைத்த வீடுகள் இருந்தது உண்டா என்பதுதான்.
பழைய காலங்களில் குதிரைகளுக்கு லாயங்களும் மாடுகளுக்கு தொழுவங்களும் தனித்தனியாக இருந்தன. ஜட்கா வண்டிகளும் மாட்டு வண்டிகளும் காம்பவுண்ட்டுக்கு வெளியே ஒரு கொட்டகையில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
இன்றைக்கு பெரும்பாலான வீடுகள் ஈசானிய வெட்டுடன் கட்டப்படுவதைக் கண்டால் மனசு வலிக்கிறது. கேட்டால் வாஸ்து பிளான் என்கிறார்கள். இது கிழக்குப் பார்த்த மனை. எனவே தோஷமில்லை என்கிறார்கள்.
எந்த திசை வீடாக இருக்கட்டும்: கிழக்கும் வடக்கும் இணையும் மூலையான ஈசானியப் பகுதியை வெட்டிவிட்டு. ஈசானியத்தைக் காலியாக விட்டிருக்கிறேனே என்று டமாரம் அடித்துக் கொள்வது ஒரு பேஷனாகி வருகிறது.
ஈசானியம் வெட்டுப்பட்ட போர்டிகோவை அமைத்தால் ஒருவேளை கார் வாங்கலாம்.ஆனால் கார் ஓட்டும் ஆள் மாநில தலைநகரில் நகரப் பேருந்தில் தொங்கி கொண்டு பயணம் செய்வார்கள் வேலை விசயமாக.