செல்வம் பெருக வழிமுறைகள்

வீட்டில் செல்வம் நிலைக்க ஒருசில பழக்க வழக்கங்கள்.

மிகப்பெரிய தவறுகள்
மிகப்பெரிய தவறுகள்

வீட்டில் செல்வம் நிலைக்க ஒருசில பழக்க வழக்கங்கள்.

மங்கையர் கைகளில் தான் அக்னியுள்ளது இவர்கள் மட்டுமே விளக்கை ஏற்றவேண்டும் என்றும் இரவு உறங்கி எழுந்தவுடன் குளிக்காமல் வாசலை (நிலைகதவை ) தாண்ட கூடாது என்றும் தெளிவுபட பதித்து உள்ளார்கள். இது போல சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது என்றும் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும் என்றும்,
பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும் என்றும், திருமணம் ஆகாதவர்கள் உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது என்றும் நமது சாஸ்திரம் கூறுகிறது.

பெண்கள்
பூமியை அதிர்ந்து உதைக்கவோ நடக்கவோ கூடாது. குறிப்பாக குதிக்கால் மிக முக்கிய யோகலட்சுமி வாழும் இடமாகும். இதனால் பூமியை உதைத்தால் தரித்திரம் பிடிக்கும் என்றும்,
இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும்.
வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும் பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும் என்றும் நமது முன்னோர்கள் கூறி உள்ளார்கள். வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது கூடாது என்றும் வீட்டில் வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மலையேற்றம் செய்ய வேண்டும்.
துளசி மாடத்திலிருந்து பூசைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது
பறிக்கவும் கூடாது என்றும்.பூசைகளுக்கு தேவையான துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

அம்மாவாசை தினம்களில் வீட்டின் வாசலில் கோலம் போடா கூடாது.
பெண்கள் கடவுளையோ அல்லது பெரியவர்களையோ வணங்கும் பொழுது பூமியில் விழுந்து வணங்கவேண்டும்.
விழுந்து வணங்கும்போது கூந்தல் தரையில் விழக்கூடாது.
காலின் மேலும் விழக்கூடாது இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும்.

அகவே கொண்டை போட்டுக் கொண்டோ – அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும்.
அதாவது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் . பஞ்சாங்க முறை என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்,பஞ்சாங்க நமஸ்காரத்தை மூன்று,ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வது மிகுந்த நன்மையாகும். இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என்றும்
சுமங்கலிப்பெண்கள் மாங்கல்யம் கயிறு மாற்ற அல்லது தாலி பிரித்து போட திங்கள் ,வியாழன் தினம்களே சிறந்தது என்றும் நூல்கள் சொல்கிறது.

வெள்ளி கிழமை தினம்களில் சண்டையிடுவது கணவனின் ஆயுளை குறைத்தும், அவர்கள் மேல் வசியம் இல்லாமலும் செய்துவிடும் என்றும்
இது போல ஒரே வீட்டில் இரு அடுப்பு கொண்டு இருவர் சமைத்தல் என்பதும், துணை விளக்கு இல்லாமல் விளக்கு ஏற்றல் போன்றது குடும்பத்தில் ஆரோக்கியக்கேடுகளையும் குழப்பத்தையும் விளைவிக்கும் என்றும் நமது முன்னோர்கள் சாஸ்திரம் வழியாக கூறி உள்ளார்கள்.
சோதிட நூல்களில் பெண்களுக்கு குறிப்பாக சொல்வது வீட்டில் எப்பொழுதும் அழுகை சத்தம் ,ஒப்பாரி போன்ற சத்தமும் சுக்ரனின் இடமான கண்கள் மற்றும், கன்னம் போன்றதில் அழுகை நீர் வருவது,கிழிந்த உடைகளை தைத்து அணிவதும், குளிக்காமல் அல்லது தலையில் நீர் தெளிக்காமல் அடுப்பை பற்றவைப்பதும், இடது கைகளால் அன்னத்தை பரிமாறுவதும், இரண்டு கைகளால் தலையை சொரிந்து கொள்வதும், உடுத்திய ஆடையை கதவில் அல்லது நிலைக்கு எதிரே தொங்கவிடுவதும், தலை முடியை விரித்தபடி வெளியே செல்வதும்,
மாதவிடாய் சமயத்தில் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழும்படியாக அமருவது, எதிர்மறை தாக்கத்தை கொடுத்து
வீட்டிலுனுள் லட்சுமி தேவியை
வரவிடாது தடுக்கும்.

தங்கம் குருவின் அம்சம் ஆகும். குருவோ கணவனின் காரகம் ஆகும். என்பதால் இடுப்பின் கீழ் இவைகள் அணிவிக்கப்படக்கூடாது என்றும் அனுவிப்பதால் குருவின் தோஷம் கிடைக்க பெற்று கணவனின் ஆசிகள் கிடைக்காமல் போகும் என்று சோதிட சாஸ்திர நூல்கள் சொல்கிறது.

இப்படி நம்முடைய பழக்கவழக்கத்தில் சின்ன தோஸங்கள் கூட நமது சேர்ந்து நம் வாழ்க்கையில் மிக பெரிய அளவில் சோதனைகளும் துன்பம்களையும் தரும்.மேலும் திருமணம் ஆகாத நபர் மொட்டை அடிப்பது கூட தவறு.
ஒரு சில திருமணம் ஆகாத ஆண்கள் முருகனுக்கு மொட்டை அடித்தேன் என்பார்கள்.
குறிப்பாக இளம்வயது நபர்கள் திருமணம் ஆகாத நபர்கள் மொட்டை அடிப்பது தவறு.

பிரமச்சாரி நிலைகளை உடையவர்கள் ஒருபொழுதும் மொட்டை அடிக்க கூடாது. நம் இந்து சமயத்தில் பிரம்மச்சரியம் அதாவது திருமணம் ஆகாத நபர்கள் முடி இறக்குதலை செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
திருமணம் முடிந்த பின் குழந்தை பிறந்து, அதற்கு பிறப்பு தீட்டு கழிக்க ஒரு மொட்டை மற்றும்,காது குத்தல் நிகழ்வுக்கு முடி இறக்கவேண்டும் என்பது நியதி.இதனை விடுத்து இன்று பலர் தவறாக இதை செய்கிறார்கள் .இதுவும் நமது வாழ்வில் செல்வம் நிலைப்பாட்டில் தடைகள் ஏற்படுத்தும்.

error: Content is protected !!