வீட்டின் வெளிப்புற பகுதிக்கு வாஸ்து

வீட்டின் வெளிப்புற பகுதிக்கு வாஸ்து

வீட்டின் வெளிப்புற பகுதி

இல்லத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நமக்கென்று தனியாக சுவர் இருக்க வேண்டும். மற்றவர்கள் சுவர் நமது வீட்டிற்கு கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களாக வரக்கூடாது.

.கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நமது இடம் இருக்கும் வரையிலும் கட்டிடம் கட்டக்கூடாது.

இல்லமாக இருக்கட்டும், அல்லது தொழில் செய்யும் இடமாக இருக்கட்டும்,நான்கு புறங்களில் கட்டாயம் சுற்று சுவர்கள் அவசியம்..நான்கு திசைகளின் சுற்றுசுவர்கள் எக்காரணம் கொண்டும்,வீட்டை தொடும் அமைப்பாக எங்கும் இருக்கக்கூடாது. இதனால் ஆயாதி குழிக்கணித மனையடி அளவுகளை அமைக்க முடியாது.

வீட்டிற்கும் காம்பவுண்ட் சுவருக்கு உள்ள இடைவெளி என்பது தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைவாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக இடமாகவும் இருக்க வேண்டும்.இதனால் தென்மேற்கு பகுதியில் ஒட்டிய அமைப்பில் கட்டிடம் அமைப்பது சரியானது ஆகும்.

#chennaivasthu,#chennaivastu

வீட்டின் மதிற்சுவர்கள் என்பது தெற்கு மேற்கு உயரமாகவும், வடக்கு கிழக்கு பகுதிகளில் உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும்.

நமது இடத்தை ஒட்டி இடம் வாங்குவதாக இருந்தால் கிழக்கு வடக்கு பகுதிகளில் தாரளமாக வாங்கலாம். அதுவே ஏற்கனவே கட்டிடம் கிழக்கு வடக்கு பகுதிகளில் இருக்கும் போது, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இடம் வாங்குவதுமிகவும் தவறு.இதுவே காலியிடங்களாக இருக்கும் போது வாங்குவதில் தவறு கிடையாது.

இப்படி நமது இடங்களை இணைத்து இடங்களை வாங்கும் போது,எதிர் பகுதிகளில் சாலைகள் இருந்தால் கவனித்து வாங்க வேண்டும். அது நல்ல தெருகுத்தாகவும் இருக்கலாம். தவறான தெருகுத்தாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் நல்ல அனுபவம் உள்ள வாஸ்து நிபுணர் துணை கொண்டு உறுதி செய்வது நல்லது.

9.இடத்தின் அமைப்பு என்பது தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உயரமாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சரிவானதாகவும் இருக்க வேண்டும். ஒருசிலர் தனது இடத்தை மட்டுமே அப்படிப்பட்ட அமைப்பில் கொண்டு வருகின்றனர்.நமது இடத்தின் வெளிப்புற பகுதிகளும் தெற்கு மேற்கு உயரமாக இருந்தால் மட்டுமே வாஸ்து அமைப்பு என்பது சரியானது ஆகும்.

வீடுகள் மற்றும் தொழிற்சாலையின் கட்டிடங்கள் எப்பொழுதும் சதுர அமைப்பிலோ அல்லது செவ்வக அமைப்பிலோ இருக்க வேண்டும்.

.கட்டிடத்தின் எதாவது ஒரு பகுதியில் சுவர் இல்லாத அமைப்பை ஏற்படுத்தி போர்ட்டிகோ அமைப்பை ஏற்படுத்தி இருப்பார்கள். இதனால் வீட்டில் ஒரு பகுதி இல்லாது போய் விடுகிறது. ஆகவே அந்தப்பகுதிக்கு சம்பந்தப்பட்ட குடும்ப நபர்கள் யாரோ அவர்கள் பாதிப்பு அடையக்கூடிய நிலமை ஏற்படும்.

.அதேபோல கட்டிடத்தின் ஒரு திசையில் நீளம் அதிகமாகவும், மற்றொரு திசையில் நீளம் குறைவாகவும் கட்டிடங்களை கட்டுவதும் தவறு.இதனால் ஏற்கனவே நான் சொல்லியபடி ஒரு திசை வளர்ந்து அந்த திசைக்கு அல்லது அந்த மூலையின் சக்தி அதிகமாகவும், அதற்கு எதிர்புறம் இல்லாத திசையின் சக்தி குறைந்து விடுகிறது.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu