consider under construction properties

வீடு கட்டுவதற்கு முன்பு எல்லோருக்கும் ஏற்படும் முதல் சந்தேகம்

 

 வீடு கட்டுவதற்கு முன்பு எல்லோருக்கும் ஏற்படும் முதல் சந்தேகம்

வீடு கட்டுவதற்கு முன்பு எல்லோருக்கும் ஏற்படும் முதல் சந்தேகம் என்ன தெரியுங்களா? ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா?தவறா? என்பதுதான். இதற்கான விளக்கத்தை எனது கட்டுரையின் வழியாக பார்க்கலாம்.

வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும். கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது. ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம்.

சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300 அடி தள்ளி வீடு இருக்க வேண்டும். பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும். அம்மன் ஆலயத்திற்கு 200அடி தள்ளி இருக்க வேண்டும். கணபதி ஆலயம் மற்றும் அனுமன் ஆலயத்திற்கு 25 அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

எனது ஆராய்ச்சிபடி வீடு வாஸ்து படி இருந்து நமது வீட்டிற்கு வடகிழக்கு பகுதியில் வராமல் இருந்தால் போதும். சென்னை மாநகரில் முக்கிய புறநகர் பகுதியில் ஒரு சிறப்பு மிக்க ஆலயம் அதன் வடக்கு பகுதியில் மிகப்பெரிய அளவில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.

அவருக்கு தெற்கு புறம் ஒட்டிய அமைப்பில் ஆலயம் இருக்கிறது. அவருடைய அழைப்பின் பேரில் புதிய வீடு அமைப்பதற்கான ஆலோசனைக்கு வாஸ்து விஷயமாக சென்றேன். அவருடைய வியாபாரம் சர்க்கரை, அரிசி, எண்ணெய். இந்த வியாபாரத்தில் அந்த புறநகர் பகுதில் அவர் மட்டுமே மிகப் பெரிய வியாபாரம் செய்யும் மனிதராக இருக்கிறார்.

மிக அருகில் ஆலயம் இருந்தாலும், ஆலயத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் அவர்கள் எட்டிப்பார்ப்பது கூட கிடையாது. ஏனெனில் பார்ப்பதற்கு நேரம் இல்லாது காலை எழுந்தது முதற்கொண்டு இரவு படுக்க செல்லும் வரை வேலை இருந்து கொண்டே இருக்கும்.

ஆக அவர் இருப்பது சிவபெருமானின் ஆலயத்திற்கு ஒட்டி இருக்கிறார். இந்த இடத்தில் நாம் எதை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும் என்றால், நமது வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது? அப்படி இருக்கும் வீடு வாஸ்து அமைப்பில் உள்ளதா என்பது மட்டுமே.

வாஸ்து நிபுணர் ஒருவர் கோயில் அருகில் வீடு இருந்தால் தவறு என்று சொல்வதை நீங்கள் எக்காரணம் கொண்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த விஷயத்தில் ஒரு நல்ல வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பது தவறான ஒன்றாகும். அதேபோல உங்கள் கிராமங்களில் மற்றும் உங்கள் நகரின் கோயில்களுக்கு அருகில் உள்ள வீட்டை பாருங்கள். உங்களுக்கு உண்மை விளங்கும்.

எந்த இறைவனும் பக்தனை பிரித்து பார்த்து கெடுக்க நினைப்பதில்லை. ஆனாலும் கோவிலின் கோபுரம் நம் வீட்டின் வடக்கு, கிழக்கு பக்கத்தில் இல்லாமல் இருப்பது நலம். மேலும் கோவிலை ஒட்டி கட்டிடம் கட்டாமல் போதிய இடைவெளி விட்டு கட்டிடம் கட்டுவது நல்லது.

மீண்டும் வேறு வாஸ்து சார்ந்த பதிவுகளோடு சந்திப்போம். நன்றி வணக்கம்.