வீடு கட்டும் யோகம் வாஸ்து/சொந்த வீடு கட்டும் யோகம்

ஒரு இல்லம் புதிதாக அமைக்க வேண்டும் என்பதற்கு நேரம் அவசியமா? என்கிற கேள்வி நமது மக்களுக்கு உண்டு. ஏன் வாஸ்து உள்ள அமைப்பாக ஒரு கட்டிடம் கட்டினால் அது தடங்கலின்றி, தடையின்றி, நடந்து முடிந்து விடுமா?. என்கிற கேள்வி இருக்கும். இதற்கு எனது பதில் என்னவென்று சொன்னால், உங்களுக்கு கட்டடம் கட்டக் கூடிய யோகம் இருந்தால் மட்டுமே நடக்கும். ஜாதகத்தில் சொல்லக்கூடிய நாலாம் பாவம் தான் ஒரு கட்டிடத்தை உருவாக்க கூடியசேயலை செய்யும். அந்த யோகம் இருந்தால் மட்டுமே கட்டிடம் கட்ட முடியும். ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்பது என்னவென்றால் எந்த ஜாதகமும் அவர்களின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் நடக்கும்.அதுவும் தனிப்பட்ட அமைப்பில் மட்டுமே நடக்கும்.

அந்த வகையில் கணவன் மனைவி இருவர் இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு யாருக்கு யோகம் இருந்தாலும் அது நடந்துவிடும். ஆனால் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொண்டு செய்வது நல்லது. அப்படி ஒரு யோகம் இல்லை என்று சொன்னால், அந்த யோக காலத்திற்காக காத்திருப்பதில் தவறில்லை. இந்த இடத்தில் வாஸ்துப்படி வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரே ஒரு செயலை செய்யலாம்.ஒருவரின் பூர்வீக பழைய வீடுகள் இருக்கின்ற பட்சத்தில் அதை வாஸ்து அமைப்பாக ஏற்படுத்தி கொள்ளலாம். அல்லது வாஸ்து பலம் பொருந்திய வாடகை வீட்டுக்குச் செல்வது தான் சாலச்சிறந்தது.நான்காம் பாவம் நான்காம் பாவத்தின் தொடர்பு இருந்தால் மட்டுமே கட்டிடம் கட்டமுடியும். நான்காவது பாவத்தின் தொடர்பு இல்லாமல் கட்ட நினைத்து நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் நடக்காது. ஆக எனது வாஸ்து பயணத்தில் பாதியில் வேலை முடியாது நிற்கும் கட்டிடங்கள் தவறான வாஸ்துவிற்கு அப்பார்பட்டு இதுவும் ஒரு காரணமே.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.