வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா?

வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா?..

வீடு கட்டும்போது கடன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள். அப்படி தவறான அமைப்பு ஒரு இல்லத்தில் இருந்தால் வாஸ்து மாற்றம் செய்து வளமாக வாழ இக்கட்டுரை சமர்பணம்.

சிலர் மட்டுமே கையில் பணம் வைத்துக்கொண்டு வீடு கட்டுகின்றனர்.அதாவது அனைவரும் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். அந்த கடனை அனைவரும் அடைத்து விடுகிறார்களா என்றால் நான் இல்லை என்றுதான் சொல்லுவேன்.
மக்கள் கையில் பணமே இல்லாமல்,இடத்தில் கடன் கட்டிடத்தில் கடன் என்றும், மாதத்தவணை, EMI மூலமாகவே வீட்டினை கட்டத் தொடங்குகின்றனர்.
ஏற்கனவே, வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக வங்கிகள், பைனான்ஸ் போன்ற இடங்களில் கடன் வாங்கி இருப்பது வீட்டின் மீது கடன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாம் நிலம் வாங்குவதற்கு சில கிரகங்கள் நமக்கு உதவி செய்கின்றன. அதேபோல் நாம் வீடு கட்ட வேண்டும் என்றால், கிரக அமைப்புகள் அமையும் வரை காத்திருந்து வீடு கட்டுதல் வேண்டும்.நாம் வீடு வாங்கும்போது வாஸ்து நிபுணரை அணுகி கடன் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் கடன் ஏற்படுகிறது?

இடம் வாங்கும்போது கடன் உண்டாக்கும் அமைப்புடைய இடத்தை வாங்குவது.
வீடு கட்டும் போதும் கடன் ஏற்படுவது போல் கட்டிடம் கட்டுவது.

ஜோதிடர்கள் சுபவிரயம் செய்யுங்கள் என்பதனை தவறாக புரிந்து கொண்டு கடன் வாங்கி வாஸ்து தவறாக வீடு கட்டுதல்.
தற்சமயம் குடியிருக்கும் வீடு தவறான அமைப்புடைய வீடாக இருக்கும் பட்சத்தில் புதியதாக கட்டக்கூடிய வீடு கடனை ஏற்படுத்தும்.
வீடு கட்டும்முன், வீட்டின் பெரியவர்களின் யோசனைகளை கேட்காமல் கடனில் மாட்டிக்கொள்வது நிகழ்கிறது.

ஒருவர் வீடு கட்டும் இடத்தை விற்பனை செய்த நபர் ஏன் இடத்தை விற்பனை செய்தார்.
அவர்களுக்கு வங்கிகளில் கடன் ஏற்பட்ட காரணத்தால் விற்பனை நடந்து இருக்கிறதா அல்லது
அந்த நிலத்தில் ஏலம், கோர்ட், கேஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறதா என்பதும்,
இதை அனைத்தையும் கவனத்தில் கொண்டு வீடு கட்டும் காலி இடத்தை வாங்க வேண்டும்.
இன்றைய காலத்தில் கட்டிடத்திற்கு என்று நிறைய விசயங்கள் உண்டு. அதை பார்த்து இடத்தை வாங்கலாமா? அதற்குமுன் வீட்டினுடைய தண்ணீர் தொட்டி, சமையலறை, பூமி அமைப்பு, காம்பவுண்ட் அமைப்பு, Hall , படுக்கையறை, கட்டிடத்தின் உள்படி அமைப்புகள் போன்ற அமைப்புகளை பார்த்து வாஸ்து நிபுணரின் ஆலோசனையுடன் வாங்க வேண்டும்.

error: Content is protected !!