விவசாய பண்ணை நிலங்களில் புதிய வீடு

வாஸ்து_ரகசியம்:

விவசாய பண்ணை நிலங்களில் புதிய வீடு அமைப்பார்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு அல்லது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு கிராம வீடு மற்றும் நிலங்களை விற்பனை செய்து விட்டு, நகர் பகுதிகளுக்கு தொழில் வகையில் வந்து விடுவார்கள். பிறகு சொந்த ஊரில் ஒரு இடம் அல்லது நிலம் வாங்கி பண்ணை வீடுகளை போல் அமைத்துக் கொள்ள வேண்டும்.அதாவது தோட்ட வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அப்படி முடிவு செய்தால் மிகச் சரியாக செய்ய வேண்டும் . தவறாக செய்கின்ற பட்சத்தில் எப்படி ஊரில் இருந்து நகருக்கு விற்றுவிட்டு சென்றார்களோ அதுபோல , நகரில் இருப்பதை மாற்றி விட்டு தற்போது சொந்த ஊரில் கட்டும் பண்ணை வீட்டிற்கு நிரந்தரமாக வரக்கூடிய சூழ்நிலைக்கு ஓரிரு மக்களை மாற்றி அமைத்துவிடும். இந்த இடத்தில் வாஸ்து மிக மிக அவசியம்.

ஆன்மீக இரகசியம்:

வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் கஷ்டம் இருந்து கொண்டே இருக்கிறது அந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு ஒரு பரிகாரமாக ஒரிரு வழிபாடு துணை செய்யும். அந்த வழிபாடு என்பது கருப்புசாமி அல்லது, முனியப்பன், சுடலைமாடன் இருளப்பன் போன்ற கிராமத்து சாமிகளுக்கு சுருட்டு புகையிலை வைத்து, கருப்பட்டி நாட்டு சாராயம் வைத்து, புளித்த தயிர் அன்னம் வைத்து வழிபாடு செய்தால் உடனடியாக நீங்கள் நினைத்த மாற்றம் நடக்கும். நாட்டு சாராயம் வைக்க முடியவில்லை என்றால் கருப்பட்டி மிளகு கலந்த நைவேத்தியம் வைக்கலாம். அதற்கு கொஞ்சம் பலன் குறைவு. தோட்டத்து கருப்புசாமி வழிபாடு செய்யும் பொழுது வாரம் ஒரு தடவை சனிக்கிழமை தொடர்ந்து செய்து வந்தாலும் நன்மையளிக்கும். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் செய்தால் விடாமல் நைவேத்தியம் தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும் அது முக்கியம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995