விவசாயம் சார்ந்த மக்களுக்கு வாஸ்து

விவசாயம் சார்ந்த மக்களுக்கு வாஸ்து பார்க்கும் போது சில விசயங்களை அவர்களுக்கு சொல்லுவேன். அந்தவகையில் ஒருபதிவு உங்களுக்காக,விவசாயம் என்றாலே காடு திருத்தும் வேலை என்பது முக்கியம். அந்தவகையில் ,பத்து ஆட்கள் செய்யும் வேலையை பத்து வெள்ளாடுகள் பார்த்து கொள்ளும் என்று சொல்லலாம். ஒரூ காட்டை திருத்த அல்லது அழிக்க அக்காலத்தில் கால்நடைகளை கொண்டு தான் செய்தார்கள் நமது முன்னோர்கள்.அதற்கான நல்ல நாள் பார்த்து தான் பட்டி கூட்டுவார்கள்.ஒரு இடத்தில் கிடை போடுகிறோம் என்றால் நல்ல நாள் பார்த்து செய்தார்கள்.

அந்த வகையில் இன்றும் கால்நடைகள் தான் நமக்கு துணையாக இருக்கின்றன. ஒரு புதர் மண்டி கிடக்கும் காட்டில் மனிதன் கால் வைக்க முடியாது.பாம்பு சார்ந்த உயிரினங்கள் இருக்கும். அதனை விரட்ட அந்த இடத்தில் மாடுகளை தான் கட்டி அழிக்க முடியும். அந்த வகையில் மனிதர்களுக்கு துணையாக இருக்கும் ஆடு மாடுகளை வாங்க நல்ல நாள் பார்த்து வாங்குவது நலம்.

அந்த வகையில் திங்கள், புதன், வியாழன், சனி வாரங்களும் துதியை, திரிதியை, பஞ்சமி, சஷ்டி ,சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி ,திரயோதசி, திதி களும் பரணி, புனர்பூசம், அஸ்தம், சுவாதி ,விசாகம், கேட்டை, அவிட்டம், சதயம் ,ரேவதி நட்சத்திரங்களும் ஆகிய நட்சத்திர நாளில், சந்தை, பண்ணைகள், பட்டிகளில் மாடு கொள்ளல், அல்லது கொடுத்தல், மற்றும் பட்ட புதிய பட்டி அமைத்தல் உத்தமமான நாட்கள் ஆகும்.#sholliganallur vastu #purasaiwalkam vastu