மனிதரின் சில வகை

நமக்கு விரும்புவதைக் கேட்டுப் பெறக்கூடிய திறமை

நமக்கு விரும்புவதைக் கேட்டுப் பெறக்கூடிய திறமையும், விரும்புவதைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் இந்த #உலகம் உங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுத் தரும்.

ஒருசில #மக்கள் உண்மையிலேயே கேட்பதிலும், அவர்கள் விரும்புவதைப் பெறுவதிலும் #புத்திசாலிகள். ஏனென்றால் அவர்களால் அது முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். #அதிர்ஷ்டத்திற்கு இதில் சிறு பங்குதான் என்றாலும், மற்றவர்களால் இவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக நினைத்து கொள்கின்றனர்.மனித வாழ்வில் மிக முக்கியமானது தான் விரும்புவதை பெறும் ஆற்றல். பலர் தாங்கள் விரும்பும் அல்லது தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை எப்படி கேட்பது என்று தெரியாததால் பின் தங்கி போகின்றனர்

 

பண உதவி மற்றும் ஊதிய உயர்வு மூலம் சிறந்த #வாழ்க்கை ஆகியவற்றை கேட்டுப் பெற பயந்தவர் ஆகின்றனர்.எது எப்படி இருந்தாலும், கேட்க வேண்டும் என்ற நிலை வரும்போது, மற்றவர்கள் நம்மைப் பற்றி இப்படித்தான் நினைத்து வைத்திருப்பர் என்று ஒரு பொழுதும் முடிவு செய்யாதீர்கள். அவர்கள் உங்கள் எ‎ண்ணங்களை தானாகப் படித்து வேண்டியதைக் கொடுப்பார்கள் எ‎ன்றும் #உறுதி செய்யாதீர்கள். எப்பொழுதும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்களாக அடுத்தவருக்குச் சொல்லும் வரை எவராலும் சரியாகக் கணிக்க முடியாது.

 

நீங்கள் ஆசைப்பட்டதைக் கேட்பதற்கு அச்சப்படுவது உங்கள் வாழ்க்கை மற்றும் கனவுகளின் மூலம் நீங்கள் அடையக்கூடியச் சிறந்தவற்றை தவிர்த்ததாகிவிடும்.#சிறுபிள்ளைதனமோ, #முட்டாளோ அல்லது தேவையுடையவரோ நாம் என்ற பய உணர்வு கேட்பதில் இருந்து நம்மைத் திசை திருப்பும். அடுத்ததாக நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற பயம் நாம் விரும்புவதைக் கேட்பதற்கானத் தைரியத்தையும் தராது. நம்மில் பலருக்கு நிராகரிப்பின் மேல் ஒரு மரணபயம். இந்த நிராகரிப்பின் மீதான மரணபீதி என்பது நாம் உருவாக்கி நமக்கே கொடுத்துக் கொண்ட ஒன்றுதான்.இது போதாதென்று அடுத்து வருவது “இது மட்டும் இருந்திருந்தால்” என்ற பகுதி.

 

நான் மட்டும் 10கிலோ எடைக் குறைவாக இருந்திருந்தால்;

என் தலைமுடியின் நிறம் மட்டும்எப்போதும் நரைக்காது இருந்திருந்தால்;

நான் மட்டும் உயரத்தில் 5’10” இருந்திருந்தால்,

என்னிடம் மட்டும் சிறந்த கார்,

#நல்ல_வீடு இருந்திருந்தால்;

நான் மட்டும் ஊரின் அடுத்த பகுதியில் வசித்திருந்தால்….

அவன்/அவள் என்னை விரும்பி என்னை திருமணம் செய்திருப்பார்கள்.

ஆதலால் இப்பொழுது நான் குண்டாக, விரும்பத்தகாத, ஏழ்மையான, தவறான தலைமுடி நிறத்துடன் அல்லது ஊரின் தவறான பகுதியில் வசிப்பவர் என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். அது ஒரு நம்பிக்கையாக உருவாகி விடுகிறது.நாம் கேட்கின்ற விசயங்களை நிராகரிக்கப்பட்டுவிடும் என்கிற பயத்தை நமக்குள் உருவாக்கி விடுகிறது.. ‏இறுதியில் ‘#இல்லை’ எ‎ன்ற பதில் நாம் நம்மைப் பற்றி முதலில் நம்பியதற்கு வெறும் சாட்சியாகத்தான் வருகிறது.

 

ஒரு பொருளுக்கு ஆசைப்படும்பொழுது அது கிடைக்காதென்று முடிவு செய்யாமல், அதைப் பெறுவதற்கான அனைத்து நல்ல குணாதிசயங்களும் நமக்குள்ளது என்பதை நம்புவது மிக முக்கியம்.நீங்கள் கேட்கும் நபர் இல்லையென்று சொன்னாலென்ன? எதை இழந்தீர்கள், எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் தொடர்ந்து உறுதியாக மீண்டும் #கேளுங்கள்.நீங்கள் விரும்புவதைக் கேட்கத் தயாராக இருங்கள்.

 

அது ஊதிய உயர்வாகவோ, விடுமுறையாகவோ, நீண்ட உணவு இடைவேளையாகவோ, தள்ளுபடியாகவோ மற்றும் ஒப்பந்தமாகவோ இருக்கலாம். தாங்கள் விருப்பப்படுவது எதுவாக இருந்தாலும் கேட்கத் தொடங்குங்கள் மற்றும் பெறுவீர்கள் என்று எதிர்பாருங்கள். மேலும், மீண்டும் கேட்கத் தயாராகுங்கள் கிடைக்கும் வரை.தங்களுக்குள் தாங்கள் கேட்கும் இந்த மூன்று கேள்விகள் ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.நான் விரும்புவது எனக்கு கிடைக்கப்பெற்றால்:நான் எப்படி இருப்பேன்?நான் அதை எப்படி உணருவேன்?நான் அதனுடன் என்ன செய்யப் போகிறேன்?அதே தருணத்தில், சில நேரங்களில் தாங்கள் விரும்புவது கிடைக்காமலும் போகலாம்.

 

ஆனால் உண்மையில், விரும்புவதைக் கேட்பது உங்களுக்குச் சிறந்த சந்தர்ப்பங்களையும் நீங்கள் விருப்பப்படுவது கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் கேட்பதற்கும் கற்றுத் தரும்.

 

மீண்டும் நல்ல கருத்துக்களோடு சந்திப்போம்.

என்றும் பிரபஞ்ச சக்திகளின் துணையுடன்

#சென்னை_வாஸ்து ஜெகன்.Whatsapp 9965021122

#vasthu_for_Temple,
#பணம்,
#good-luck,
#ஜோதிடம்,
#எண்கணிதம்,
#கைரேகை_சாஸ்திரம்,
#பஞ்சபச்சி_சாஸ்திரம்,
#பிரசன்ன_ஜோதிடம்,
#பிண்டம்,
#கடவுள்,
#இறைவன்,
#பண்ணாரி_அம்மன்,
#ஆண்டாள்_கோயில்,
#திருவரங்கம்,
#தில்லையம்பலம்,
vasthu for marriage,
palmistry,
vasthu manntra,
vasthu yantra,
health for vasthu,
wealth for vasthu
#வாயுமூலை,
#ஈசானமூலை,
#குபேரமூலை,
#அக்னிமூலை,
#குபேரதிசை,
#நைருதிமூலை,
#இந்திரதிசை,
#எமன்திக்கு,
#வருணதிசை,