விருச்சிகம் ராசி குருபெயர்ச்சி பலன் 2021-2022 | guru peyarchi 2021-22 viruchigam | chennai astro

விருச்சிக ராசி மக்களுக்கான இந்த குருப்பெயர்ச்சி சார்ந்த பலன்களை தெரிந்து கொள்வோம் . கடந்த ஒரு வருடமாக மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குருபகவான் தற்போது நான்காம் இடமாகிய, வீடு நிலம் வாகனம் என்று சொல்லக்கூடிய ஒரு சுகத்தை கொடுக்கக்கூடிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து பயணப்பட இருக்கின்றார். இந்த இடத்தில் இருக்கும் குரு, அகம் புறம்   இரண்டும் கலந்த பலனைக் கொடுப்பார். அதாவது குடும்பம் சார்ந்த உறவுகள் சார்ந்த பணம் சார்ந்த வெற்றி சார்ந்த நிகழ்வுகளில் ஒரு இடத்தில் வெற்றியும் ஒரு இடத்தில் தோல்வியும் அதே சமயம் ஒரு தோல்வியடைந்த காரியம் மீண்டும் ஒரு கால கட்டத்தில் வெற்றியை கொடுக்க நிகழ்வாக விருச்சிக ராசி மக்களைப் பொறுத்த அளவில் இந்த குரு பலன்கள் என்பது இந்த குரு பெயர்ச்சி பலன்கள் என்பது 50 சதவீத நல்ல பலன்களையும், 50 சதவீத தவறான பலன்களையும் கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். இந்த காலகட்டங்களில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் நீங்கள் சுபகாரிய செலவுகளை மகன்,மகள்  சார்ந்த திருமணம் ,மக்கள் சார்ந்த வீடு சார்ந்த, சுப காரிய செலவுகளை செய்யும் பொழுது அது ஒரு  சுப விரயமாக பார்க்கப்படும்.

அதேபோல ஏதாவது மருத்துவம் சார்ந்த ஒரு செலவு, மருத்துவம் சார்ந்த நிகழ்வில் ஒரு ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்கிற நிலை ஒருசிலருக்கு ஏற்படும். ஆனால் அவசரம் இல்லை என்று மருத்துவர் சொல்லி இருந்தாலும் கூட, அந்த நிகழ்வை இந்த காலகட்டத்தில் இந்த குருபெயர்ச்சி காலகட்டத்தில் செய்துகொள்வது நல்லது. குறிப்பாக ஒரு சிலருக்கு குடலிறக்க நோய்கள் இருக்கும். ஆனால் உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. அதாவது இதுபோல, மருத்துவம் சார்ந்த நிகழ்வுகளில் தற்போது சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லும் போது ,அதை செய்யக்கூடிய காலகட்டமாக, இந்த காலகட்டத்தில் நீங்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. கல்வி சார்ந்த நிகழ்வுகளில் கல்வி சார்ந்த இடத்தில் குரு அமர்ந்திருப்பதால் மாணவர்கள் கல்வி நிலை என்பது நல்ல ஒரு சிறப்பாக இருக்கும். நிறைய இடங்களில், நிறைய பள்ளிகளில் நிறைய இடங்களில் பெண் குழந்தைகள் தான் நன்றாகப் படிப்பார்கள். முதல் மதிப்பெண் வாங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த நேரத்தில் விருச்சிகராசி சேர்ந்த மக்கள் கண்டிப்பாக முதல் தரமான வெற்றியைக் குறிக்க கூடிய மாணவர்களை உருவாக்கும் நிகழ்வாக இந்த குருபெயர்ச்சி கண்டிப்பாக இருக்கும். ஆகமொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி என்பது நல்ல ஒரு பலனைக் கொடுக்கக்கூடிய ஒரு குருபெயர்ச்சியாக விருச்சிக ராசி மக்களுக்கு இருக்கும்