புகைப்பழக்கம் மற்றும்  புகையிலைக்கு அடிமையானவர்களை வாஸ்து வீடு மூலமாக திருத்த முடியுமா?

chennaivasthu
chennaivasthu

ஒருவர் தினமும் ஏழு சிகரெட்டுக்களை புகைக்கிறார் என்றாலோ அல்லது  இரண்டு பாக்கெட் புகையிலையை மெல்லுகிறார் என்றால், அந்தப் பழக்கத்துக்கு அவர் அடிமையாகி விட்டார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வீட்டில் தென்கிழக்கில் வாஸ்து குறைபாடு உள்ளது என்றாலே அந்த வீட்டில் உள்ள ஆண்களுக்கு போதைபழக்கம் வந்துவிடும்.
புகைபிடிப்பது தவறு என்பதும் அவர்களுக்கு தெரியும்.ஆனாலும் அவர்களால் அதனை விடுவது  என்பது மிகவும் கடினம், தென்கிழக்கில் உள்ள வாஸ்து குற்றங்கள் விடுவதற்கு இல்லாமல் தடுக்கும்.

.
ஒருவருக்கு புகைப்பழக்கம் இருக்கிறது என்றால்,ஒவ்வொரு நாளும், அவர் எத்தனை சிகரெட்கள் குடிக்கவேண்டும் என்று எண்ணுகிறாரோ, அதைவிட அதிக எண்ணிக்கையிலான சிகரெட்களைக் குடிப்பார்கள்.கைவசம் சிகரெட் இல்லையென்றால், அவர்கள் ஒருவித  அழுத்தத்தை உணர்வார்கள். புகை பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யும்போது, அவர்களுடைய உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது,

 

இதனால் அவரால் தன்னுடைய ரெகுலரான வேலைகளை  சரியாக செய்ய தடங்கல் ஏற்படும்.
ஒரு மணி நேரத்துக்கு  ஒரு சிகரெட் அவர்கள் பிடிக்கவில்லையென்றால், அவர்களது எண்ணங்கள் பெரும்பாலும் ‘அடுத்த சிகரெட் எங்கே? எப்போது?’ என்பதில்தான் எண்ணம் இருக்கும்.
தன்னுடைய புகைப்பழக்கத்துக்குத்  எங்கே தடை இருக்காதோ அங்கு மட்டுமே அவர்கள் சென்றுவருவார்கள், அது சார்ந்த வேலைகளைதான் அதிகம் செய்வார்கள், உதாரணமாக, புகைபிடிப்பதை அனுமதிக்கும் உணவுவிடுதிகளுக்கு மட்டுமே செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
எங்கெல்லாம் புகைபிடிக்க அனுமதி இல்லையோ, அங்கெல்லாம் அவர்கள் மிகவும் சிரமமாக உணர்வார்கள்.புகை பிடிக்கும் நபர்களிடம் இணங்கி பழகுவார்கள்.

 

புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தும் போது அவர்களுக்கு நடுக்கம், பதற்றம், மனச்சோர்வான நிலை, தூக்கமின்மை, தலை கனமற்று இருப்பதுபோன்ற உணர்வு,எதையோ இழந்த மாதிரி உணர்வுகள் ஏற்படுதல். பசி அதிகரித்தல், அனைவரிடமும் எரிச்சல் காட்டுதல். போன்றவைகள் நடக்கும்.புகைபிடிக்கும் பழக்கமுள்ள பலர், திடீரென்று அதை நிறுத்திவிடுகிறார்கள். இந்த முறை சிலருக்கு இது வேலை செய்கிறது. சிலருக்கு நடக்காது மீண்டும் தொடங்கி விடுவார்கள். ஒருசிலர் மனக்கட்டுபாட்டோடு  நிகோடின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள். அப்படியே விடமுடியவில்லை என்றாலும் புகைபிடிப்பதை நிறுத்த முயற்சி செய்து தோற்றவர்கள் வருந்தவேண்டியதில்லை. இது போல ஓரிரு தடவைகள் நடக்கும்.

புகைபிடிப்பவர்களில் 10% பேர்தான் தாங்களே அதிலிருந்து விடுபடுகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
மற்ற 97% பேருக்கு, ஆலோசனை தேவைப்படுகிறது.ஒருவரின் ஆலோசனைக்கு பிறகு புகைப்பழக்கத்தை விடமுடியும். என்னைப் பொறுத்தவரை வாஸ்துப்படி ஒரு இல்லத்திற்கு வந்தபிறகு  எனது புகைப்பழக்கம் அடியோடு நின்று விட்டது. ஆகவே  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கட்டுரைப்படி புகைப்பழக்கம் என்பது விடதா தொடங்கிய நாளின் முதல் நாள் நரகம். இரண்டாவது நாள் உபநரகம்.அதற்கு பிறகு நீங்கள் நாட்களை எண்ணிக்கொள்ளலாம்.

man-smoking
man-smoking

என்னிடம் புகைபழக்கம் விடுவதற்கு ஆலோசனை பெற்றால் கட்டாயமாக எளிதில் புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆனால் அவர்களின் இல்லம் வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டும்.