வாஸ்து விதிகள்
கட்டிடம் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். எந்த திசை வீடுகளாக இருந்தாலும் கட்டிடம் எந்த முனையும் கட் ஆகாமல் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். காருக்காக கட் செய்து போர்டிகோ போடுவது கூடாது. போர்டிகோ போடுவது தவறு. அப்படியே போட்டாலும் பில்லர் இல்லாமல் கேண்டிலிவர் உடன் போடவேண்டும். எந்த பகுதியையும் விடாமல் தொடர்ந்து போட்டு கொள்ள வேண்டும். ஒரு பாதியை விட்டு போடக்கூடாது.

அதேபோல் வீடு எப்படியோ காம்பவுண்டும் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். பில்டிங் எந்த பகுதியும், காம்பவுண்டின் எந்த பகுதியும் இரண்டு சுவர்களும் தொடக்கூடாது.
வடக்கு கிழக்கு காலியிடம் அதிகமாகவும், தெற்கு மேற்கு குறைந்த காலியிடம் இருப்பதுபோல் அமைக்க வேண்டும்.
வாசல் ஜன்னல் உச்ச பகுதியில் இருப்பது போல் அமைத்துக் கொள்ள வேண்டும்.
உச்சவாசல் என்று சொன்னால் எந்த திசை வாயிலாக இருந்தாலும்,
வடக்கு சுவர் எனில் அது கிழக்கு ஒட்டினாற்போலும்,
கிழக்கு சுவர் எனில் வடக்கு சுவர் ஓட்டினாற் போலும்,
மேற்கு சுவர் எனில் வடக்கு சுவர் ஒட்டினாற் போலும்,
தெற்கு சுவர் எனில் கிழக்கு சுவர் ஒட்டினாற்போலும்,
ஜன்னல் அமைப்புகளை இதே அமைப்பில் அமைத்துக் கொள்ள வேண்டும். தலைவாயில் உச்ச வாயிலாக இருக்கின்ற பட்சத்தில் இரண்டு பக்கமும் ஜன்னல் அமைத்துக் கொள்ளலாம்.
வாசல் அமைப்பு என்பது உள் அறைகளுக்கும் பொருந்தும். அதாவது எல்லா அறைகளும் உச்ச வாயிலாக இருக்க வேண்டும். அதேபோன்று அனைத்து உள் அறைகளும் கழிவரை உள்பட சதுரம் செவ்வகம் அமைப்பில் வரவேண்டும்.
சில இல்லங்களில் வரவேற்பு அறையில் வடமேற்கு பகுதியில் கழிவறை அமைத்து ஒரு பகுதியில் வழிவிட்டு தென்மேற்கு பகுதியில் திறந்த அமைபபாக அமைத்துக் கொள்வார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.