chennai vasthu

வாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்

வாஸ்து கேள்வி - பதில்கள்
வாஸ்து கேள்வி – பதில்கள்
வாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்:- ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம்.
சில ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து “இந்த குழந்தையை கோயிலுக்கு தத்துக் கொடுத்து மீண்டும் தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என பரிந்துரைத்திருப்பார். அது ஏன்?
ஒருவரின் இல்லத்தில் வடமேற்கு தவறுகளோடு மேற்கு அதிக காலியிடம் இருக்கும் போது கட்டாயம் தத்து என்கிற விசயத்தை செய்ய வேண்டும். இதனை ஜோதிடர் கூட எளிதாக கூற முடியும். ஒருவருக்கு கேது மற்றும் சனி சேர்க்கை இருக்கும் போதுஶ்ரீ
 இவ்விதமான பாதிப்புக்களை கொடுக்கும். இந்த இரு கிரகங்கள் சார்ந்த தசாபுத்திகள் நடைபெறும் காலங்களில் இவ்விதம் செய்ய வேண்டும்.
ஆக வீட்டில் வடமேற்கு மற்றும் மேற்கு சம்பந்தப்பட்ட தவறுகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை சரிசெய்ய முடியவில்லை எனும்போது “தத்துக் கொடுத்தல்.” என்கிற ஒரு வேலையை தற்காலிக காலத்திற்கு செய்ய வேண்டும். இப்படி  ஆலயத்திற்கு அதாவது தெய்வத்திற்கு தத்துக் கொடுக்க அது இறைவனின் குழந்தையாகிவிடும். ஆக இறைவனின் குழந்தைக்கு வாழ்க்கை கஷ்டங்களை குறைக்கும் அதிகாரம்  வாஸ்து சக்திக்கோ,கிரகங்களுக்கோ கிடையாது.
ஆயிரத்தில் ஒரிரு இடங்களில்  குழந்தைப் பருவத்தில் தொலைந்துபோய் இரண்டு நாள்  கண்டு பிடித்திருப்பார்கள். அல்லது பாட்டி மற்றும் தாத்தா வீட்டில் அரவணைத்து வளர்ந்திருப்பார்கள். அல்லது மேல்நிலை கல்வி மற்றும் கல்லூரி காலம் வரை விடுதியில் தங்கிப் படித்திருப்பார்கள் அதன் பிறகு வேலைக்கு சென்றபின் பூர்வீக வீடுகளுக்கு வருவது என்பது இல்லாது போய் விடுகிறது.
தத்து கொடுக்க சிறந்த ஆலயங்கள் எனும்போது நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருக்கடையூர் மற்றும் திருவரங்கம் ஆலயமும், திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயமும் அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயமும், முதலிடத்தில் வகிக்கிறது.
 ஒருவர் பிறந்த கிழமையும், இந்த நட்சத்திரங்களும் ஒன்றானால் அவர்களை கட்டாயம் தத்து கொடுக்க வேண்டும்.
ஞாயிறு. – பரணி
திங்கள். – சித்திரை
செவ்வாய் – உத்ராடம்
புதன் – அவிட்டம்
வியாழன் – கேட்டை
வெள்ளி – பூராடம்
சனி – ரேவதி
ஒரு கூறிப்பிட்ட வயதுவரை உடல்நலத்தை பலமாக பாதிக்க வைக்கும். ஒவ்வொரு இரவும் பகலும் உடலைப் படுத்தி எடுக்கும், ஆயுளைக் கெடுக்காது. ஆனால் ஆயுள் முடிந்துவிடுமோ என பதைக்க வைக்கும்.
சொந்தத்தில் தத்து கொடுக்கும் போது உறவுகள் பார்த்து கொடுக்க வேண்டும். யாரை தத்து கொடுக்கின்றோமோ அவர்கள் இல்லம் என்பது பெரிய வாஸ்து குற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
 அடிக்கடி  குழந்தைகள் நோய் வயப்பட்டால் வீட்டில் வடமேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மாற்றம், மற்றும் வாசல் நிலை,மற்றும் அடிஅளவுகள் மற்றும் ,ஆயாதி அடிஅளவுகளை  வாஸ்து அமைப்பாக மாற்றம் செய்தால் நிரந்தரமாக நல்ல வாழ்க்கை அமையும்.  மற்றும் அதற்கேற்ப தெய்வங்களை வணங்கிவர நலமான வாழ்வு அமையும் என்பது உறுதி.
error: Content is protected !!