வாஸ்து ரீதியாக குபேர வாழ்வு

வாஸ்து ரீதியாக 33 வயதுக்குள் குபேர வாழ்வு

 

வாஸ்து ரீதியாக குபேர வாழ்வு
வாஸ்து ரீதியாக குபேர வாழ்வு

 

 

 

 

 

 

 

 

 

கல்வி விலை குறைவானது, ஆனால் அனுபவம் அதிக விலையுள்ளது.

வாஸ்து சார்ந்த அறிவு அனுபவங்கள் பல இலட்சங்கள் கொட்டி, நான் பெற்று கொண்டது, மேற்படி அனுபவங்களை தற்போதைய மில்லினியம் தலைமுறைகள் 25 வயதில் வீடு கட்டி வாழ்க்கை நடத்தவும், ரியல்எஸ்டேட் முதலீடுகளை தொடங்கினால் அவர்களை 33 வது வயதில் அவர்ளை கோடிஸ்வர வாழ்க்கை வாழ என்னால் வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் நிச்சயமாக செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

தவறான வாஸ்து உள்ள அமைப்பில் வாங்கிய நிலங்கள் விலை ஏறாமல் அப்படியே யாரும் கேட்காமல் நிற்கின்றன. போட்ட பணங்களை திரும்ப எடுக்க முடியாமல் தவிக்கும் சிறு முதலீட்டாளர்கள் & நடுத்தர மக்கள், சேமிப்பவர்கள் இழப்பாளர்களாகவே ஆகின்ற வேதனை, இவை எல்லாம் ஏன்? என ஆராய்ந்து பார்த்தால், ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள் கையில் சிறு முதலீட்டாளர்களும்,புதிதாக வீடு கட்டுகிறவர்களும், சிக்கி இருக்கிறோம். என தெரிகிறது.

தொலைக்காட்சி, ரேடியோக்கள், பத்திரிக்கைகள் என அனைத்து ஊடகங்களும் ஊடகங்களால் முன்னிறுத்தப்படும். ரியல் எஸ்டேட் ஆய்வாளர்களும், அறிஞர்களும் பொய்களை சொல்லியே மக்களை ஏழைகள் ஆக்கி கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

இப்பொழுதும் தனியார் வீட்டு வசதி கடன் நிறுவனத்துக்காக கோடிஸ்வர ஷாருக்கான, ஒரு நடுத்தர மக்களை போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, வீடு சொந்தமாகுதுன்னா EMI நமக்கு சுமையில்லை, வாடகையை விட EMI சிறந்தது என்று நடுத்தர மக்களை மூளை சலவை செய்யும் விளம்பரம் ஊடகங்களின் வந்து கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது பல அப்பாவி நடுத்தர மக்கள் வாஸ்து தவறான வீட்டில் மாட்டிக்கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

நடுத்தர மக்கள் எப்பொழுதும் பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான வாழ்க்கை என்று பாதுகாப்பு உணர்விலேயே கழிக்கின்றனர். அதனை நன்றாக இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த வசதி படைத்தவர்களுக்கும் எவ்வித கவலையும் இல்லை அறிவார்ந்து யோசித்து திட்டமிடடு பல பக்கங்களில் இருந்து பணவரவை உருவாக்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.மிக குறைவான வரிகள், அதிக மூதலீடுள், அதனுடைய பலனை மீண்டும் மீண்டும் முதலீட்டிலேயே மறு முதலீடு செய்து கொண்டு இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கும் எவ்வித பிரச்சனை இல்லை.

ஆனால் இந்த நடுத்தர மக்கள், வசதி, படைத்தவர்களை பார்த்தும், நடுத்தர மக்களின் சுற்றங்களை பார்த்தும், தனது பொருளாதார மேன்மையை நிலை நிறுத்த தவியாய் தவிக்கின்றனர். இவர்கள்தான் வீடு, சார்ந்த வாஸ்து தவறான முதலீடு செய்கின்றனர்.

முன்னேற வேண்டும் வசதி ஆனவர்கள் ஆக வேண்டும் என்று நினைத்தால் யாரும் யாருக்கும் தடையில்லை, வர்க்க, வர்ண பேதங்கள் முன்னேறுபவனை தடுக்காது, பிறருக்கு கொடுக்கும் மனநிலையில் (Giving Mindset) உங்கள் வாழ்க்கை அமைத்து கொண்டால்எல்லா வர்க்கமும், எல்லா வர்ணமும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியை தான் செய்கிறது.

முன்னேறுவதும், பணம் சம்பாதிப்பதும், சொத்துக்களை சேர்ப்பதும், மிகவும் எளிமையானது தான், உங்களுடைய கடந்த கால வாழ்க்கை , கடந்த கால வீட்டின் வாஸ்து தவறுகள் எதுவும் உங்களுடைய எதிர்காலத்தை பாதிக்காது இல்லத்தில் வாழ்க்கை நடத்தினால் எவ்வித பாதிப்பும் இருக்காது.

வாஸ்து இல்லாமல் ,ஆன்மீகம் கர்மா இறைவன் ஜாதகம் ஆகிய சாஸ்திரம் சார்பில் முன்னேறலாம் என்று நினைப்பவர்கள் வலிமையான எண்ணங்கள் இல்லாத மன பலவீனமானவர்கள் அல்லது அத்தகைய பலவீனமானவர்களை வைத்து சம்பாதித்து கொண்டு மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

எனவே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களிலிருந்து வரும் தற்போதைய 25 வயது இளைஞர்கள் தங்கள் கண்ணோட்டத்தை பற்றியும், பொருளாதாரத்தை பற்றிய பார்வையும் மாற்றி கொண்டால் நிச்சயம் 33 வயதுக்குள் குபேர வாழ்வு அமையும்.