வாஸ்து மூலமாக பணம் ஈர்க்கும் தெரிந்த ரகசியங்கள்.

வாஸ்து மூலமாக பணம் ஈர்க்கும்
தெரிந்த ரகசியங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து , உன்னுடைய முன்னோர்களும் பெரியவர்களும் வார்த்தைகளால் சொல்லி விட்டுச் சென்றிருக்கின்றனர் அந்த வகையில் உங்களுக்கு வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று சொன்னால் தண்ணீரை நீங்கள் சேமிக்க வேண்டும் ஆக தண்ணீரை நீங்கள் இங்கு விரும்புகின்றீர்களோ அந்த இடத்தில் பணம் என்கிற விஷயம் உங்களை விட்டு நகர்ந்து விடும் அந்த வகையில் நீங்கள் உங்களுடைய வீட்டில் செய்யக்கூடிய தண்ணீர் சார்ந்த ஒரு நிகழ்வுகள் உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போடுகின்ற செயலாக மாறிவிடும் அந்த வகையில் ஓரிரு பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்நாளில் மாற்றம் செய்யும் பொழுது உங்களுடைய வாழ்க்கை வாழக்கூடிய தன்மை மாறிவிடும்.

அந்த வகையில் வாஸ்து சார்ந்த ஓரிரு பழக்கவழக்கங்களை நீங்கள் மாற்றம் செய்யும்போது உங்கள் வாழ்க்கையில் பணத்தில் தன்னிறைவு பெற்ற வாழ்க்கையாக தண்ணீர் போல வாழ்வீர்கள். நீங்கள் வீட்டில் முகச்சவரம் செய்யும் போது, தண்ணீர் வருகின்ற குழாயை திறந்து வைத்து சவரம் செய்யக்கூடிய கருவிகளை சுத்தம் செய்வீர்கள். ஆனால் அந்த வேலையை நீங்கள் செய்யாமல்,ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு அதன் மூலமாக நீங்கள் அலசும் பொழுது தண்ணீரை சேமிக்கக்கூடிய செய்கிறீர்கள். அதேபோல ஏதாவது விருந்து ஒரு நிகழ்வுக்கு செல்கின்றீர்கள். அங்கே தண்ணீரை உங்களுக்கு அருந்துவதற்காக வைப்பார்கள்.அதனை நீங்கள் எப்பொழுதும் முழுவதுமாக உபயோகிக்க வேண்டும்.பாதி மட்டும் அருந்திவிட்டு வைத்து வரும் பழக்கத்தை செய்யக்கூடாது.
உங்களுக்கு தேவையான தண்ணீரை மட்டும் வாங்கிக் கொள்வது சிறப்பு. அந்த இடத்தில் பக்கத்து இலைகளுக்கு வைக்கின்ற தண்ணீர் உபரியாக இருக்கின்ற பட்சத்தில் எந்த விதமான சங்கடங்களும் பார்க்காது, நீங்கள் அந்த தண்ணீரை உபயோகித்து கொள்ளுங்கள் இந்த மாதிரி ஒரு நடவடிக்கைகளை நீங்கள் உங்கள் வாழ்நாள் கடைபிடிக்கும்போது உங்கள் வாழ்வில் பணம் என்பது என்றும் உங்களிடம் நிரந்தரமாக தங்கியிருக்கும்.

மேற்கூறிய பழக்கங்களை நீங்கள் கடைபிடிக்கவேண்டும் என்று சொன்னால் உங்கள் இல்லத்தில் வடக்கு சார்ந்த பகுதிகளில் எந்தவிதமான குற்றங்களும் இருக்கக்கூடாது அப்பொழுது மட்டுமே அது சார்ந்த எண்ணங்கள் உங்கள் வாழ்நாளில் உங்கள் புத்திக்கு எட்டக்கூடிய செயலாக மாறிவிடும்.ஆகவே தண்ணீரை சேமியுங்கள்.

ஏன் தண்ணீருக்கு முக்கியதுவம்.
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

நாகரீகம் என்பது ஆற்றுப்படுகைகள் சார்ந்து இருக்கக்கூடிய விஷயம் .இந்த பூமியில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நதிக்கரைகளில் தான் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களின் பயணம் என்பது நதிக்கரைகளில் சார்ந்த பயணமாக இருந்திருக்கின்றது அந்த வகையில் கங்கை சமவெளி தொடங்கி, இந்தியாவின் தெற்கு எல்லையான தாமிரபரணி ஆற்றின் படுகை பகுதிகள் வரை மக்கள் காலம் காலமாக வாழ்ந்துள்ளனர். ஆகவே எப்பொழுதும் மனிதர்கள் தானும் தண்ணீரோடு, தண்ணீரோடு தானும், மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர். வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஆகவே நீர் என்பது மிக மிக அத்தியாவசியமானது .அந்த வகையில் இன்றைய கொங்கு நாட்டில் வாழ்கின்ற மக்கள் கூட கங்கை சமவெளியில் தொடங்கி கோதாவரி, கிருஷ்ணா, ஆறுகளின் படிகைகளை கடந்து, தொண்டை நாட்டின் பாலாறு படுகைகளை கடந்து, காவிரிநதியின் தடம்பிடித்து காவேரி பாய்ந்து வரும் வழியாக ஊடுருவி அதன் சமவெளிப்பகுதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரை வாழ்ந்து வருகின்றனர் .அதற்குப் பிறகு நதிகளைக் கடந்து சமவெளிப் பகுதிகளில் மழையை நம்பி வாழக்கூடிய மக்களாக, மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட காரணத்தினால் ஒரு காலகட்டத்தில் குளம் குட்டைகளை நம்பி வாழ்ந்த மக்கள், மிகப்பெரிய ஆழமான 50 மீட்டர் ஆழத்திற்கு மேலாக, 75 முலம் அளவிற்கு கிணறுகளை வெட்டி, தண்ணீருக்காக அதிகபட்ச பணத்தை வாரி இறைத்து தண்ணீருக்காக போராடி வாழ்ந்தார்கள். ஆகவே தண்ணீர் என்பது தெய்வத்திற்கு சமமானது அப்படிப்பட்ட தண்ணீரை நீங்கள் சேமிக்கும் பொழுது பணம் என்பது உங்களுக்கு ஓடிவரும் தண்ணீர் போல.

அந்தவகையில் நமது முன்னோர்கள் கஷ்டப்பட்டு வெட்டி வைத்த மூடுவது என்பது மிகப்பெரிய தோசம் ஆகும். நிறைய மக்கள் என்னிடம் தொலைபேசி வழியாக தவறான இடத்தில் இருக்கும் கிணறை மூடலாமா? என்று கேட்பார்கள்.அதற்கு எனது பதில் இது தொலைபேசியில் சொல்லக்கூடிய விசயம் கிடையாது.என்னை நேரில்அழைக்கும் போது விரிவாக கூறுகின்றேன்.எடுத்தேன் கவிழ்த்தேன் ஐன்று ஒரு தொலைபேசி வழியாக சொல்லமாட்டேன் என்று சொல்லி விடுவேன்.இதனைக் வள்ளல் பெருமான் ராமலிங்கர் கூட தனது மனுமுறை கண்ட வாசகத்தில்,
குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்த்தேனோ அதாவது .தண்ணீர் உள்ள குளத்தை மூடினேனோ,என்று கூறுகிறார்.ஆக என்னைப்போன்ற வாஸ்து நிபுணர்கள் கிணற்றை மூடுங்கள் என்று ஒற்றை வார்த்தையில் கூறுவது மிகப்பெரிய பாவத்தை என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்களுக்கு ஏற்ப்படுத்தும்‌.ஆகவே வெறும் பணத்திற்க்காக இந்த பாவங்களை செய்ய வேண்டாம்‌.

தண்ணீரை உதாசீனப்படுத்தாதீர்கள் தண்ணீரோடு வாழுங்கள் நீங்கள் தனியாக வாழுங்கள் தண்ணீரோடு வாழுங்கள் நன்றி வணக்கம்

 

ஜாதகம் மூலம் உங்களுக்கு பணம்,
உங்கள் வீட்டிலும் செல்வம் சேர,
பயிற்சியில் வாஸ்து, மனம், பணம்,
மனிதனின் வாழ்கையில் பணம்,
Vastu Tips for Cash Box ,
பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து,
Astrology,
astrology chinese,
chinese horoscopes,

 

error: Content is protected !!