வாஸ்து முழுமையாக இல்லாத இடங்களில் எந்த மாதிரியான செயல்கள் நடக்கும்?

நான் இந்த விசயம் பற்றி பேச வேண்டும் என்று சொன்னால் ஒருநாள் முழுவதும் தேவைப்படும் என்று சொல்லலாம். இப்பொழுது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
என்னால் முடியாது, முடியவே முடியாது, ஆகவே ஆகாது, இல்லை, நடக்கவே நடக்காது என்று சொல்பவர்கள் எல்லாம் எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள். அவர்கள் இல்லத்தில் கண்டிப்பாக வாஸ்து குறைபாடு இருக்கும்.
அதிகமான கடவுள் நம்பிக்கை, எதற்கு எடுத்தாலும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று வீட்டில் சும்மா இருப்பவர்கள், கடவுள் நம்பிக்கை தவறு இல்லை. ஆனால் நமது வேலையை நிறுத்தி வைத்துவிட்டு ஆலயம் செல்வது தவறு. மற்றும் டீக்கடைகள் தேவையில்லாத இடங்களில் அமர்ந்து வெட்டிப்பேச்சும், ஊர்கதைகள் பேசும் நபர்களின் இல்லங்களும் கண்டிப்பாக வாஸ்து குறைபாடு இருக்கும்.
அடுத்ததாக விபத்து , மரணத்தை ஏற்படுத்தும் விபத்து, தற்கொலை எண்ணங்கள், வீட்டோடு மாப்பிள்ளை, குழந்தை குறைபாடு, குழந்தைகள் குறைபாடுடன் பிறப்பது, எந்த நேரமும் தூங்கிக் கொண்டிப்பது, சூரியன் உதயமான பின்பு தூங்கி எழுந்திருக்கும் நபர்கள், கணவன் மனைவி பிடிவாத குணம், கணவன் தவறான பழக்க வழக்கம், குடிப்பழக்கம், புகைப்பழக்கம், பிறர் மனை நோக்கல், மனைவி தவறான தொடர்பு, தாம்பத்ய உறவு பாதிப்பு, தூக்கமின்மை பிரச்சினை, மகள், அல்லது மகன் வெளிநாடு வாழ்க்கை, அப்பா அம்மா தனிமையாக வாழ்வது, பேரன் பேத்தி கொஞ்சுதல் போன்றவை இல்லாத நிலைமையுடன் போன்ற பிரச்சினைகள் ஒரு இல்லத்தில் இருந்தால், இது கண்டிப்பாக வாஸ்து குறைபாடு உள்ள மனை என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்.
இதில் மிகவும் மோசம் என்று சொன்னால் முதல் சொன்ன இரண்டு விசயங்களான எதிர்மறை எண்ணங்களும், அளவுக்கு அதிகமான கடவுள் நம்பிக்கைகளும் ஆகும். இதை நாம் தவிர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக வாஸ்து படி வீடு வேண்டும் நன்றி