வாஸ்து அமைப்பில் இரண்டு சாஸ்திரங்கள்

 

 

 

 

 

 

 

வாஸ்து அமைப்பில் இரண்டு சாஸ்திரங்கள் இருக்கின்றன. இரண்டு இருக்கிறது. ஒன்று மனையடி சாஸ்திரம், மற்றொன்று வாஸ்து சாஸ்திரம் ஆகும். ஒரு சாஸ்திரத்தை பார்க்கும் போது பூமியினுடைய சாஸ்திரமான மனையடி சாஸ்திரத்தை முதலில் பார்க்க வேண்டும். சதுர மனையா? செவ்வக மனையா? அல்லது பசுமனையாக அமைகிறதா?அல்லது யானை மனையாக அமைந்து ஒரு யானை போன்ற பிரமாண்டமான வாழ்வை கொடுக்குமா? அல்லது புறா மனையாக அமைந்து மனித வாழ்வில் புறா எப்படி கூவுகிறதோ அதன் அமைப்பு போன்ற வாழ்க்கையை வழங்கிவிடுமா? போன்றெல்லாம் மனையின் அமைப்பை முதலில் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் சென்னை பெங்களூர் போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளிலெல்லாம் இடம் வாங்குவது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் கட்டிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்பது முதலாவது மாடி முதல் பதினைந்து மாடிகள் வரை சென்று விடுகிறது.

எந்த இடமாக வடகிழக்கு ஈசானிய மூலை அது கொஞ்சம் காலியாக இருந்தால் நல்லது. அதில் அதிகமான சுமை இல்லாமல் காலியாக இருப்பது நல்லது. பிள்ளைகள் படிப்பதற்கு அல்லதுஅவர்கள் படுப்பதற்கு கொடுக்கலாம். அதற்கடுத்து தாய், தந்தை, பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களை அங்கு தங்க வைக்கலாம்.

அதற்கடுத்து தென் கிழக்கு மூலை என்பது மிகவும் சரியாக பயன்படுத்த வேண்டும். இங்கு சமையலறை இருப்பது மட்டுமே நல்லது. தென்மேற்கு என்பது கன்னி மூலை. அதுதான் நைருதி மூலை. குடும்ப தலைவரின் பெட்ரூம் இருக்க வேண்டும். இங்கு இல்லத்தின் தலைவன், தலைவி தங்குவது நல்லது. அதற்கடுத்து வாயு மூலை. இதிலும் ஒரு பெட்ரூம் வரலாம். இங்கு உறவினர்களை தங்கவைக்கலாம். இதுதான் அடிப்படை வாஸ்து. இது இருந்தாலே ஓரளவிற்கு அனைத்தும் சாதகமாக நிறைவான வாழ்க்கையாக இருக்கும்.

error: Content is protected !!