வாஸ்து பூஜை விபரங்கள்

வாஸ்து பூஜை விபரங்கள்

வாஸ்து விளிப்புணர்வு டிப்ஸ்

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.இன்றைய கட்டுரை வாயிலாக எப்போது மனைகோலக்கூடாது என்கிற விசயங்களை தெரிந்து அவ்வாரு உள்ள நாட்களை தவிர்த்து ஒரு நல்ல நாளில் பூமி பூஜை என்கிற வாஸ்து பூஜையை செய்து வளமாக வாழ வாழ்த்துக்கள்.மனை கோலகூடாத மாதங்கள்சித்திரை ,ஆனி,ஆடி,புரட்டாசி,மார்கழி,தை மற்றும் பங்குனி மாதங்களில் கட்டாயமாக கால்கோல் விழா என்று சொல்லக்கூடிய கிரகாரம்ப சுபநிகழ்வுகளை தொடங்கக்கூடாது.இதனை கடைபிடிக்காமல் தொடங்கும் போது ரோக நிகழ்வுகளை அந்த வீடு அனுபவிக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

 

 

மனை கோல ஆகாத நட்சத்திரம் மற்றும் நாட்கள்.ஞாயிறு அன்று வரும் பரணி நட்சத்திரம், திங்கட்கிழமை வரும் சித்திரை நட்சத்திரம், செவ்வாய்கிழமை வரும் உத்திராடம் நட்சத்திரம், புதன்கிழமை வரும் அவிட்ட நட்சத்திரம், வியாலக்கிழமை வரும் கேட்டை நட்சத்திரம், வெள்ளிக்கிழமை வரும் பூராட நட்சத்திரம், சனிக்கிழமை வரும் ரேவதி நட்சத்திரம் இந்த நாட்களில் வாஸ்து நாள் இருந்தாலும் கட்டாயமாக வாஸ்து பூஜை செய்ய கூடாது. இவைகளில் வீடு கட்ட தொடங்குவது,திருமணம் செய்வது,போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. மீறி இதனை செய்தால் செய்யும் காரியம் சிறப்பு பெறாது . மேலும் புலிப்பாணி சித்தர் பாட்டின் வழியாக குறிப்பிட்ட நட்சத்திரங்கள் சுபகாரியங்கள் செய்ய விலக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதனையும் நாம் வாஸ்து நாளன்று வரும்போது தவிர்த்து விட வேண்டும்.புலிப்பாணி சித்தர் பாடல்:ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் முப்பூரங் கேட்டை தீதுறு விசாகஞா சௌதி சிதாதிரை மகமீ ராறும் மிதனங் கொண்டார் தாரார்,வழிநடைப் பட்டார் மீளார்,பிய்தனிற் படுத்தார் தேறார்,பாம்பின் வாய்த்தேரை தானே.பாடல் விளக்கம்:பரணி கிருத்திகை திருவாதிரை ஆயில்யம் மகம் பூரம் சித்திரை சுவாதி விசாகம் கேட்டை பூராடம் பூரட்டாதி இந்த நட்சத்திரங்களில் கடன் வாங்கியவர் திரும்ப தருவதும், பிரயாணம் போனவர் திரும்பி வருவதும், நோய்வாய் பட்டவர் சுகம் பெறுவதும் இயலாததாகும்.

 

ஆகாத நட்சத்திரங்கள்அதுபோல காலற்ற உடலற்ற தலையற்ற நட்சத்திர நாட்களில்வீடு வேலை தொடங்குகின்ற வாஸ்து நிகழ்வுகளை செய்யக்கூடாது. அந்தவகையில் காலற்ற நட்சத்திரங்களான, கிருத்திகை மற்றும் உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களும்,உடலற்ற நட்சத்திரங்களான மிருகசீரிஷம் மற்றும் சித்திரை, அவிட்டம் அதேபோல் தலையற்ற நட்சத்திரங்களான புனர்பூசம் மற்றும் விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் வாஸ்து நாட்கள் வந்தாலும் தவிர்த்து கொள்வது நலம்.ஆகாத திதிகள்:அதுபோல ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு அப்படிப்பட்ட திதிகளில் போருக்கு போகக்கூடிய திதிகளும், மருத்துவம் பார்க்க தொடங்கும் திதிகளும்,செங்கல் சூலைக்கு தீ வைக்கும் திதிகளையும் தவிர்க்க வேண்டும். அந்த திதிகள் வாஸ்து நாளில் வந்தால் கட்டாயமாக வாஸ்து நாளை தவிர்க்க வேண்டும்.கிணறு வெட்டும் திதியை வீடுகட்ட உபயோகப்படுத்த கூடாது.ஆகாத கிழமைகள்:கட்டாயமாக வாஸ்து நாள் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை,தவிர்க்க வேண்டும்.ஓரு நல்ல ஜோதிடம் தெரிந்த ஜோதிடர் துணைகொண்டு நல்ல நாள் குறித்து அந்த நாளில் பூமி பூஜை செய்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.மீண்டும் நல்ல வாஸ்து சார்ந்த கருத்துக்களோடு சந்திப்போம். நன்றி.

error: Content is protected !!