வாஸ்து படி உள்ள வீடு

வாஸ்து படி உள்ள வீடு எந்த மாதிரியான வேலையை நமக்கு செய்யும்?. எத்தனையோ விசயங்கள் சொல்ல முடியும். அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாஸ்துவின் அமைப்பில் நண்பர் ஒருவருக்கு வீடு அமைத்து கொடுக்கின்றேன். அந்த வீட்டில் குடியேறி ஒரு வருடம் முன்பு என்னை அழைத்தார் .எனக்கு இப்போ ஒரு பிரச்சனை என்னவெனில் நான் பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் நிற்க வேண்டிய சூல்நிலை ஆகிவிட்டது இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருக்கின்றேன் என்றார். அதற்கு எனது பதில் எதற்கும் கவலை பட வேண்டாம். உங்களின் அடுத்த கட்ட பயணத்திற்காக தான் இந்த வீடு இந்த சூல்நிலையை உறுவாக்கி உள்ளது என்றேன். அவர் தற்போது என்னை அழைத்து 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக புதிய தொழிலில் இறங்கி இப்போது ஏற்கனவே இருந்ததை விட இரட்டிப்பு வருமானத்துடன் வாழ்கின்றேன் என்றார். ஆக இதை எதற்காக சொல்கின்றேன் என்றால் நமது வீடு சரியாக இருந்தால் மட்டுமே தொழில் மூலம் அடுத்த கட்ட பயணம் சிறப்பாக இருக்கும். நன்றி.