chennaivasthu

வாஸ்து குற்றங்களுக்கு பரிகாரம் உண்டா?

 

chennai vasthu
chennai vasthu

வாஸ்து குற்றங்களுக்கு பரிகாரம் உண்டா?
என்னை வாஸ்து பார்க்க அழைக்கப்படும் மக்கள் கேட்கும் கேள்வி நபர்கள்,, சார் எனக்கு இந்த வாஸ்து பிரச்சனை உண்டு , அந்த வாஸ்து பிரச்சனை உண்டு அதற்கு ஏதேனும் ஒரு பரிகாரம் உண்டா என்று தான் கேட்கிறார்கள். நானும் அவர்களுக்கு அந்த நேரத்தில் பதில் கூறியிருந்தாலும் நீங்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

வசிப்பிடத்தின் அமைப்பு

ஒரு இல்லத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அந்த இடத்தில் வசிக்கக்கூடிய நபர் மீது நல்ல ஆற்றல் அல்லது , கெடுதலான பலன்களையோ அந்த கட்டிடம் ஒவ்வொரு விசயத்தில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இந்த அடிப்படை விதி தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான வினாயகர் உருவங்கள்,பிரமிடுகள்,
செப்பு தகடுகள் உலக உருண்டை கள்,கிரிஸ்டல் பொருள்கள்,
வாஸ்து பரிகார பூஜைகள்,
வாஸ்து மணி ஒலிப்பான்கள்,
வாஸ்து தங்க விளக்கு மரம்
நீர் விழ்ச்சிகள்
வாஸ்து கசிரிக்கும் புத்தர் பொம்மைகள் வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது
, நெகட்டிவ் எனர்ஜியை விரட்டுகின்றேன் என்று
வாசலுக்கு எதிரே கண்ணாடி வைப்பது,

இது போல பல பொருட்களை வைத்து தனக்கு தானே சூனியம் வைக்கும் வேலையை எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து.
ஆக இது போன்ற விஷயங்களை நம்ப வேண்டாம். இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு தான் கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. அப்படி பொருள்களை வாங்கி வைப்பதற்கு பதில்,வாஸ்து சார்ந்த விசயங்களை கண்டுகொள்ளாமல் விடுவது நல்லது. ஆக மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.

பரிகாரம் தானம் வாஸ்து

error: Content is protected !!